பாடம் 8.1 புதுமை விளக்கு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 8.1 – “புதுமை விளக்கு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று* – பொய்கையாழ்வார |
சொல்லும் பொருளும்
- வையம் – உலகம்
- புகவா – உணவாக
- வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
- இடர் ஆழி – துன்பக்கடல்
- சொல் மாலை – பாமாலை
பாடலின் பொருள்
பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.
நூல் வெளி
- பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.
- அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான் – பூதத்தாழ்வார் |
சொல்லும் பொருளும்
- தகளி – அகல்விளக்கு
- ஞானம் – அறிவு
- நாரணன – திருமால்
- ஆர்வம் – விருப்பம்
- கூடர் – ஒளி
பாடலின் பொருள்
ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.
நூல் வெளி
- பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
- இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
- நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல் பாடலாகும்.
தெரிந்து தெளிவோம்
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்). இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும். |
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர். |
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இடர் ஆழி நீங்குகவே இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ________
- துன்பம்
- மகிழ்ச்சி
- ஆர்வம்
- இன்பம்
விடை : துன்பம்
2. ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- ஞான + சுடர்
- ஞானச் + சுடர்
- ஞானம் + சுடர்
- ஞானி + சுடர்
விடை : ஞானம் + சுடர்
3. இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
- இன்பு உருகு
- இன்பும் உருகு
- இன்புருகு
- இன்பருகு
விடை : இன்புருகு
பொருத்துக.
1. அன்பு | அ. நெய் |
2. ஆர்வம் | ஆ. தகளி |
3. சிந்தை | இ. விளக்கு |
4. ஞானம் | ஈ. இடுதிரி |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
குறு வினா
1. பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
பொய்கையாழ்வார் அகல் விளக்காக பூமியை உருவகப்படுத்தியுள்ளார்
பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பை உருவகப்படுத்தியுள்ளார்
2. பொய்கை ஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
பொய்கை ஆழ்வார் தன் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டுகிறார்
சிறு வினா
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகினற் திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.
சிந்தனை வினா
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?
நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியவற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பூமியைப் பொய்கை ஆழ்வார் ________ என உருவகப்படுத்தியுள்ளார்.
- அகல்விளக்கு
- கடல்
- பாமாலை
- அன்பு
விடை : அகல்விளக்கு
2. துன்பத்தை பொய்கை ஆழ்வார் ________ என உருவகப்படுத்தியுள்ளார்.
- அகல்விளக்கு
- கடல்
- பாமாலை
- அன்பு
விடை : கடல்
3. அந்தாதி என்பது ________ வகைகளுள் ஒன்று
- காப்பிய
- புதின
- சிற்றிலக்கிய
- பேரிலக்கிய
விடை : சிற்றிலக்கிய
4. நாலாயிரத் திவ்யப் பிரந்தப் பாடலைத் தொகுத்தவர்
- நாதமுனி
- பொய்கை ஆழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
விடை : நாதமுனி
5. சிவந்த ஒளி வீசும் சக்கரத்தை உடையவர்
- பொய்கை ஆழ்வார்
- திருமால்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
விடை : திருமால்
6. பூதத்தாழ்வார் பிறந்த ஊர்
- மாமல்லபுரம்
- மதுரை
- பூம்புகார்
- காஞ்சிபுரம்
விடை : மாமல்லபுரம்
7. முதலாழ்வார்களில் பொருந்தாவர்
- பூதத்தாழ்வார்
- மங்கையாழ்வார்
- பொய்கையாழ்வார்
- பேயாழ்வார்
விடை : மங்கையாழ்வார்
8. அந்தாதி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அந் + தாதி
- அந்த + தாதி
- அந்தம் + ஆதி
- அந்த + ஆதி
விடை : அந்தம் + ஆதி
8. அந்தம் என்பதன் எதிர்ச்சொல் தருக
- இறுதி
- இரண்டாவது
- முதல்
- கடைசி
விடை : ஆதி
குறு வினா
1. அந்தாதி என்றால் என்ன?
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர் (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)
2. பூதத்தாழ்வார் – குறிப்பு வரைக
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்
3. முதலாழ்வார்கள் எனப்படுபவர் யார்?
- பொழ்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
4. நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்றால் என்ன?
- திருமாலை போற்றிப்பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
- அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும்.
- இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
5. பொய்கையாழ்வார் – குறிப்பு வரைக
- பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்