பாடம் 9.5 ஆகுபெயர்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 7 Tamil Chapter 9.5 – “ஆகுபெயர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……………….
- பொருளாகு பெயர்
- சினையாகு பெயர்
- பண்பாகுபெயர்
- இடவாகு பெயர்
விடை : பொருளாகு பெயர்
2. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………………..
- முதலாகு பெயர்
- சினையாகு பெயர்
- தொழிலாகு பெயர்
- பண்பாகுபெயர்
விடை : சினையாகு பெயர்
3. மழை சடசடவெனப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ………………….
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- தொழிலாகு பெயர்
- பண்பாகுபெயர்
விடை : இரட்டைக்கிளவி
4. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ………………. முறை வரை அடுக்கி வரும்.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
விடை : நான்கு
குறு வினா
1. ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
ஒரு பெயர்ச்சொல் அதன் பொருளை குறிக்காமல், அதனோடு தொடர்பு உடைய வேறு ஒன்றிற்கு வரும்போது அது ஆகுபெயர் ஆக மாறும்.
சான்று :- வெண்மை – வெண்மை நிறம், வெள்ளை அடித்தான் – வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பிற்கு உரியது
2. இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும்
சான்று :- விறுவிறு, மளமள
சிறு வினா
1. பொருளாகு பெயரையும், சினையாகு பெயரையும் வேறுபடுத்துக.
பொருளாகு பெயர் | சினையாகு பெயர் |
1. ஒரு பொருளின் பெயர் சினை (உறுப்பு)க்கு ஆகி வருவது பொருளாகு பெயர் | சினையின் பெயர் பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் |
சான்று : மல்லிகை சூடினான் மல்லிகை என்பது பொருளின் பெயர். அது அதன் உறப்பாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது | சான்று : தலைக்கு ஒரு பழம் காெடு தலை என்பது சினையின் பெயர். அது அதன் பொருளுக்கு ஆகி வந்துள்ளது |
2. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் – ஒப்பிடுக.
இரட்டைக்கிளவி | அடுக்குத்தொடர் |
1. தனிச் சொற்களாகப் பிரித்தால் பொருள் தரும் | தனிச் சொற்களாகப் பிரித்தால் பொருள் தராது |
2. ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும். | ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும். |
3. சொற்கள் தனித்தனியே நிற்கும் | சொற்கள் இணைந்தே நிற்கும். |
4. விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும். | வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும். |
கூடுதல் வினாக்கள்
1. இடவாகு பெயர் என்றால் என்ன? சான்று தருக?
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இஃது இடவாகு பெயர் ஆகும்
2. காலவாகு பெயர் என்றால் என்ன? சான்று தருக?
திசம்பர் சூடினாள்.
இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகு பெயர் ஆயிற்று.
3. பண்பாகுபெயர் என்றால் என்ன? சான்று தருக?
இனிப்பு தின்றான்.
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.
4. தொழிலாகு பெயர் என்றால் என்ன? சான்று தருக?
பொங்கல் உண்டான்.
இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகு பெயர் ஆகும்.
5. இரட்டைக்கிளவி என்றால் என்ன?
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
6. அடுக்குத்தொடர் என்றால் என்ன?
அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர்
மொழியை ஆள்வோம்
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்)
1. காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். ______________ அவர் எளிமையை விரும்பியவர்.
விடை : ஏனெனில்
2. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ______________ துன்பப்பட நேரிடும்.
விடை : இல்லையென்றால்
3. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. ______________ காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
விடை : ஆகையால்
4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். ______________ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
விடை : ஏனெனில்
5. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். ______________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
விடை : எனவே
6. தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. ______________ இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.
விடை : மேலும்
மொழியோடு விளையாடு
குறிப்புகளைப் பயன்படுத்தி இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.
1. நூலகத்தில் இருப்பவை ………………. நூல்கள் நிறைந்துள்ள இடம் …………….
விடை : நூல்கள், நூலகம்
2. உலகப்பொதுமறை …………………. புரட்சிக்கவிஞர் ………………………….
விடை : திருக்குறள், பாரதிதாசன்
3. முனைப்பாடியார் இயற்றியது ………………………. நீதிநெறி விளக்கம் பாடியவர் ……………….
விடை : அறநெறிச்சாரம், குமரகுருபரர்
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் ……………….. சுரதா என்பதன் விரிவாக்கம் …………………….
விடை : குற்றாலக்குறவஞ்சி, சுப்புரத்தினதாசன்
5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ……………………
விடை : திரிகூடராசப்பகவிராயர்
கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக்கிளவி அமையுமாறு தொடர் உருவாக்குக.
மழை சடசட வெனப் பெய்தது. | பறவை படபடவெனப் பறந்தது |
புகைவண்டி சடசடவெனச் சென்றது | மரக் கிளை சடசடவென முறிந்தது |
கீழ்க்காணும் அறிவிப்பைப் படித்து அதன்பின் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க.
தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும் |
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வீடுகளிலும் பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும்.
- பொது இடங்களில் தீத்தடுப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும்.
- எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பணியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
- தரமான மின் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும்.
- சமையல் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
- பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும்.
- நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசரகால வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை
- உடனடியாகத் தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பொழுது தீவிபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
- உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருளவேண்டும்.
- தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
- பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.
- அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்யவேண்டும்
தீ விபத்து ஏற்படும் போது செய்யக் கூடாதவை
- தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது.
- எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
- தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக்கூடாது.
வினாக்கள்
1. தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
- வீடுகளிலும் பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும்.
- தரமான மின் சாதனங்களையே பயன்படுத்தவேண்டும்.
- சமையல் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
- பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும்.
- பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
2. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
- தீயணைப்பு பணித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.
- தீயணைப்பான்களைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
- ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருள வேண்டும்.
- தீக்காயம் பட்ட இடத்தை தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
3. பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
- பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அவசர கால வழியில் வெளியேற வேண்டும்.
- அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்யவேண்டும்
4. தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை யாவை?
- மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது.
- எண்ணெய் தீயில் அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
- தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக்கூடாது.
5. உடலில் தீப்பற்றினால் செய்யவேண்டிய முதலுதவி யாது?
- உடலில் தீப்பற்றினால் தரையில் படுத்து உருள வேண்டும்.
- தீக்காயம் பட்ட இடத்தை தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
நிற்க அதற்கு தக
கலைச்சொல் அறிவோம்.
- சமயம் – Religion
- எளிமை – Simplicity
- ஈகை – Charity
- கண்ணியம் – Dignity
- கொள்கை – Doctrine
- தத்துவம் – Philosophy
- நேர்மை – Integrity
- வாய்மை – Sincerity
- உபதேசம் – Preaching
- வானியல் – Astronomy