Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 1.1 – தமிழ்மொழி வாழ்த்து

பாடம் 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 1.1 – “தமிழ்மொழி வாழ்த்து” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நிரந்தரம் – காலம் முழுமையும்
  • வண்மொழி – வளமிக்கமொழி
  • வைப்பு – நிலப்பகுதி
  • இசை – புகழ்
  • சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • தொல்லை – பழமை, துன்பம்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்கலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிநது உரக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மமொழி வாழ்க! எங்கள் தமிழ்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறைப்படைக!  பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

நூல் வெளி

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
  • இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………………….

  1. வைப்பு
  2. கடல்
  3. பரவை
  4. ஆழி

விடை : வைப்பு

2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

  1. என் + றென்றும்
  2. என்று + என்றும்
  3. என்றும் + என்றும்
  4. என் + என்றும்

விடை : என்று + என்றும்

3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. வான + மளந்தது
  2. வான் + அளந்தது
  3. வானம் + அளந்தது
  4. வான் + மளந்தது

விடை : வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

  1. அறிந்ததுஅனைத்தும்
  2. அறிந்தனைத்தும்
  3. அறிந்ததனைத்தும்
  4. அறிந்துனைத்தும்

விடை : அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….

  1. வானம்அறிந்து
  2. வான்அறிந்த
  3. வானமறிந்த
  4. வான்மறிந்

விடை : வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனைச் சொற்கள்
வாழ்க – வாழியங்கள் – ன்றென்றும்
ண்மொழி – ளர்மொழிகன்று – றிந்த

குறு வினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

சிறு வினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

  • எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
  • எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!
  • உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க
  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

சிந்தனை வினா

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

  • நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொணடிருக்கும் ஒரே மொழி நம் தமிழ்மொழி தான்.
  • தமிழ்மொழி ஒன்று தான் வாழ்வுக்கே இல்கணம் அமைந்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையைேய “அகம்” “புறம்” என இருவகைப்படுத்தி இலக்கணங்கண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு
  • இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ………………… கருத்தை அறிவிக்கும் கருவியாகும்

  1. நாடு
  2. மாநிலம்
  3. மொழி
  4. ஊர்

விடை : மொழி

2. தமிழர்கள் தமிழை ………………….. ஆகக் கருதி போற்றி வந்துள்ளனர்

  1. உயிர்
  2. அறிவு
  3. புத்தி
  4. தலை

விடை : உயிர்

3. …………………. அறிந்த தனைத்து அறிந்து வளர் மொழி வாழியவே

  1. கடல்
  2. வானம்
  3. பூமி
  4. நாடு

விடை : வானம்

4. இசை என்பதற்கு பொருள் ……………………

  1. கருவி
  2. புகழ்
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : புகழ்

5. …………………… நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே

  1. சூழ்கடல்
  2. ஆர்கழி
  3. விரிகடல்
  4. சூழ்கலி

விடை : சூழ்கலி

6. வானமளந்து அனைத்தும் அளந்திடு ……………….. வாழியவே.

  1. வண்மொழி
  2. பண்மொழி
  3. தன்மொழி
  4. செம்மொழி

விடை : வண்மொழி

7. தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ………………….

  1. ஆந்திரா
  2. தமிழ்நாடு
  3. கேரளா
  4. கர்நாடகா

விடை : தமிழ்நாடு

8. விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ……………….

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. வாணிதாசன்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

9. சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ………………….

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. பாரதியார்
  4. வாணிதான்

விடை : பாரதியார்

10. சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் …………………….

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதான்

விடை : பாரதியார்

11. தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் ……………………

  1. சுரதா
  2. காந்தி
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

சேர்த்து எழுதுக

  1. வண்மை + மொழி = வண்மொழி
  2. வளர் + மொழி = வளர்மொழி
  3. சீட்டு + கவி = சீட்டுக்கவி
  4. சிந்தனை + ஆளர் = சிந்தனையாளர்
  5. வானம் + அளந்து = வானமளந்து

குறு வினா

1. வளமான தமிழ்மொழி எதனை அறிந்து உரைக்கும்?

ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி

2. தமிழ்மொழி எது உள்ள வரையிலும் வாழ வேண்டும்?

எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ வேண்டும்.

3. எந்த இருள் நீங்க வேண்டும்?

எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்க வேண்டும்.

4. தமிழ்மொழி எங்கு சிறப்படைய வேண்டும்?

தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டும்.

5. எந்த துன்பம் நீங்கி தமிழ்நாடு ஒளிரவேண்டும்?

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பம் நீங்கி தமிழ்நாடு ஒளிரவேண்டும்?

6. பாரதியாரின் பெற்றுள்ள பன்முக ஆற்றல் யாவை?

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்

7. பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

இந்தியா, விஜயா

8.  பாரதியாரை எவ்வாறெல்லாம் பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்?

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

சிறு வினா

பாரதியார் குறிப்பு வரைக

  • பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882-ல் பிறந்தார்
  • பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார் ஆவர்.
  • இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
  • தனது 39வது வயதில் 11.09.1921-ல் இயற்கை எய்தினார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment