பாடம் 1.2 தமிழ்மொழி மரபு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 1.2 – “தமிழ்மொழி மரபு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- மரபு – வழக்கம்
- மயக்கம் – கலவை
- திரிதல் – மாறுபடுதல்
- இருதிணை – உயர்திணை, அஃறிணை
- செய்யுள் – பாட்டு
- வழாஅமை – தவறாமை
- தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
பாடலின் பொருள்
இவவுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும் . உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுததிக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.
திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும்பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
நூல் வெளி
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
- பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இஙகுத் தரப்பட்டுள்ளன.
தெரிந்து தெளிவோம்
இளமைப் பெயர்கள் | |
புலி | பறழ் |
சிங்கம் | குருளை |
யானை | கன்று |
பசு | கன்று |
கரடி | குட்டி |
ஒலி மரபு | |
புலி | உறுமும் |
சிங்கம் | முழங்கும் |
யானை | பிளிறும் |
பசு | கதறும் |
கரடி | கத்தும் |
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _______ பறந்து செல்கின்றன.
- நிலத்தில்
- விசும்பில்
- மரத்தில்
- நீரில்
விடை : விசும்பில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் _______
- மரபு
- பொழுது
- வரவு
- தகவு
விடை : மரபு
3. இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- இரண்டு + திணை
- இரு + திணை
- இருவர் + திணை
- இருந்து + திணை
விடை : இரண்டு + திணை
4. ஐம்பால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- ஐம் + பால்
- ஐந்து + பால்
- ஐம்பது + பால்
- ஐ + பால்
விடை : ஐந்து + பால்
குறுவினா
1. உலகம் எவற்றால் ஆனது?
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது
2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்
சிந்தனை வினா
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
மனிதன் தன் வாழ்நாளில் நல்லமுறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்தற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைபிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாக பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் மரபுகளை பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத் தான் இருக்கும் என் கருதுகிறேன்.
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை _______ எனப்படும்.
- செல்வம்
- ஒழுக்கம்
- அறிவு
- சிறப்பு
விடை : ஒழுக்கம்
2. மொழிக்குரிய ஒழுங்குமுறை _______ எனப்படும்.
- செல்வம்
- அறிவு
- சிறப்பு
- மரபு
விடை : மரபு
3. திணை _______ வகைப்படும்.
- 5
- 3
- 4
- 2
விடை : 2
4. தொல்காப்பியத்தின் ஆசிரியர்
- பவணந்தி முனிவர்
- கம்பர்
- தொல்காப்பியர்
- பரணர்
விடை : தொல்காப்பியர்
5. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்
- திருக்குறள்
- தொல்காப்பியம்
- நன்னூல்
- சிலப்பதிகாரம்
விடை : தொல்காப்பியம்
7. தொல்காப்பியம் _______ அதிகாரங்களை கொண்டுள்ளது.
- 4
- 2
- 5
- 3
விடை : 3
8. செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி _______ கூறுகிறது.
- தொல்காப்பியம்
- குறுந்தொகை
- சங்கநூல்
- நற்றிணை
விடை : தொல்காப்பியம்
9. இவ்வுலகம் _______ ஆல் ஆனவை
- நீர்
- நிலம்
- காற்று
- ஐம்பூதங்கள்
விடை : ஐம்பூதங்கள்
10. விசும்பு என்பதன் பொருள்
- கலவை
- தவறாமை
- பாட்டு
- வானம்
விடை : வானம்
11. உயர்திணை பால்களுள் பொருந்தாதது
- ஆண்பால்
- பலவின்பால்
- பெண்பால்
- பலர்பால்
விடை : பலவின்பால்
12. புலி இளமைப்பெயர்
- குருளை
- கன்று
- பறழ்
- குட்டி
விடை : பறழ்
குறு வினா
1. இரு திணைகள் எவையெனச் சுட்டுக.
உயர்திணை, அஃறிணை
2. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை?
எழுத்து, சாெல், பொருள்
3. ஐம்பூதங்கள் யாவை?
நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகியன ஐம்பூங்களாகும்.
4. தமிழின் மரபு யாது?
உலகத்து பொருள்களை இரு திணையாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு ஆகும்
5. எவ்வகையான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்?
மரபான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.
6. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் கூறும் நூல் எது?
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்
7. உயிரளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்
சிறு வினா
1. தொல்காப்பியம் – குறிப்பு வரைக
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
இளமை பெயர்களை பொருத்துக
1. புலி | அ. கன்று |
2. சிங்கம் | ஆ. குட்டி |
3. பசு | இ. குருளை |
4. கரடி | ஈ. பறழ் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ |
ஒலி மரபுகளை பொருத்துக
1. புலி | அ. கதறும் |
2. சிங்கம் | ஆ. உறுமும் |
3. யானை | இ. முழங்கும் |
4. பசு | ஈ. கத்தும் |
5. கரடி | உ. பிளிறும் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஈ |