Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 1.4 – சொற்பூங்கா

பாடம் 1.4 சொற்பூங்கா

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 1.4 – “சொற்பூங்கா” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

நூல் வெளி 

  • செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
  • திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
  • இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

தெரிந்து தொள்வோம்

ஓரெழுத்து ஒருமொழிகள்

உயிர் எழுத்துஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசைமா, மீ, மூ, மே, மே, மோ
தகர வரிசைதா, தீ, தூ, தே, தை
பகர வரிசைபா, பூ, பே, பை, போ
நகர வரிசைநா, நீ, நே, நை, நோ
ககர வரிசைகா, கூ, கை, கோ
சகர வரிசைசா, சீ, சே, சோ
வகர வரிசைவா, வீ, வை, வெள
யகர வரிசையா
குறில் எழுத்துநொ, து

மதிப்பீடு

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுதது எழுதுக

முன்னுரை

மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.

ஓரெழுத்து ஒருமொழி

உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

பூ-யா சொற்கள்

பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!

மா சொல்

மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.

ஈ-காரச் சொல்

ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.

கால மாற்றத்தில் கரைந்தவை

இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது;  கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

ஏகாரச் சொல்

எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும் அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.

முடிவுரை

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில் கனியாகக் காட்டும்.

கூடுதல் வினாக்கள்

1. தமிழில் சொல் என்பதன் பொருள் யாது?

தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்.

2. மொழியின் வகைககள் யாவை?

  • ஒரெழுத்து ஒரு மொழி
  • ஈரெழுத்து மொழி
  • இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய மொழி

3. ஒர் எழுத்து மொழி பற்றிய தொல்காப்பியர் கருத்து யாது?

“நெட்டெழுத்தும் ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்பது ஒர் எழுத்து மொழி பற்றிய தொல்காப்பியர் கருத்து ஆகும்.

4. ஆமா என்பது எதன் பெயர் ஆகும்?

காட்டுப்பசுவுக்கு ஆமா என்று பெயர்.

5. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார்

6. இரா.இளங்குமரனார் பன்முகத் திறன் பன்முகத்தன்மையை பட்டியலிடுக

  • நூலாசிரியர்
  • இதழாசிரியர்
  • உரையாசிரியர்
  • தொகுப்பாசிரியர்

7. இரா.இளங்குமரனார் படைப்புகள் யாவை?

  • இலக்கண வரலாறு
  • தமிழிசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்

மேலும் “தேவநேயம்” என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment