பாடம் 2.1 ஓடை
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.1 – “ஓடை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
- பயிலுதல் – படித்தல்
- ஈரம் – இரக்கம்
- நாணம் – வெட்கம்
- முழவு – இசைக்கருவி
- செஞ்சொல் – திருந்திய சொல்
- நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
- வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
பாடலின் பொருள்
நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே!கற்களில் உருண்டும் தவழந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்தோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்.
நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழுவை முழுக்குவது போல் ஒலி எழுப்புகிறது.
நூல்வெளி
- தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
- அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர்.
- இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
- கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
- பிரெஞ்சு அரசு இவருக்கு “செவாலியர் விருது” வழங்கியுள்ளது.
- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.
- பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள “ஓடை” என்னும் பாடல் “தொடுவானம்” என்னும் நூலில் உள்ளது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு.
- பயிலுதல்
- பார்த்தல்
- கேட்டல்
- பாடுதல்
விடை : பயிலுதல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ………………..
- கடல்
- ஓடை
- குளம்
- கிணறு
விடை : ஓடை
3. நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
- நன் + செய்
- நன்று + செய்
- நன்மை + செய்
- நல் + செய்
விடை : நன்மை + செய்
4. நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
- நீளு + உழைப்பு
- நீண் + உழைப்பு
- நீள் + அழைப்பு
- நீள் + உழைப்பு
விடை : நீள் + உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
- சீருக்குஏற்ப
- சீருக்கேற்ப
- சீர்க்கேற்ப
- சீருகேற்ப
விடை : சீருக்கேற்ப
6. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
- ஓடைஆட
- ஓடையாட
- ஓடையோட
- ஓடைவாட
விடை : ஓடையாட
குறு வினா
1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
ஓடை கற்களில் உருண்டும், தவழந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.
2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?
ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முகுக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்
சிறு வினா
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை
- நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களை செழிக்க செய்கிறது.
- விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
- கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
- குளிர்ச்சியை தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
- நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையாழ ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
சிந்தனை வினா
வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
குழந்தையை உறங்க வைக்க பாடப்படுவது | தாலாட்டுப் பாடல் |
சிறுவர்கள் விளையாடும் போது பாடுவது | விளையாட்டுப் பாடல் |
திருமணத்தின் போது பாடுவது | திருமணப் பாடல் |
களையெடுக்கும் போது பாடுவது | களையெடுப்புப் பாடல் |
கதிர் அறுக்கும் போது பாடுவது | கதிரறுப்புப் பாடல் |
பூந்தொடுப்போர், பூப்பறிப்போர் பாடுவது | திருப்பூவல்லி |
தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது | திருச்சாழல் |
இறந்தவர்களுக்காகப் பாடுவது | ஒப்பாரிப் பாடல் |
பயணம் செய்யும் போது பாடுவது | தெம்மாங்குப் பாடல் |
எண்ணிக்கையுடன் பாடுவது | ஏற்றப்பாட்டு |
இரவில் வரும் நிலவை ஆண்பாலாகப் பாவித்துப் பெண்கள் பாடும் பாட்டு | இராவண்டை |
ஆண்கள் மட்டும் அடிக்கும் கும்மி பாட்டு | ஒயிற்கும்மிப் பாடல் |
பெண்கள் இணைந்து கும்மி அடித்துப் பாடுவது | கும்மிப்பாடல் |
மீனவர்கள் பாடுவது | அம்பா பாடல் |
கோயில் விழாக்களில் பாடுவது | வில்லுப்பாடல் |
குறவர் பாடுவது | குறத்திப்பாடல் |
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மனிதர் வாழ்வு ………………….யோடு இயைந்தது.
- செயற்கை
- இயற்கை
- அறிவியல்
- விளையாட்டு
விடை : இயற்கை
2. நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு …………………..
- கும்மி
- ஒயில்
- வள்ளை
- தெம்மாங்கு
விடை : வள்ளை
3. நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் …………………..
- செம்மண் நிலம்
- பாலை நிலம்
- புன்செய்
- நன்செய்
விடை : நன்செய்
4. குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் …………………..
- செம்மண் நிலம்
- பாலை நிலம்
- புன்செய்
- நன்செய்
விடை : நன்செய்
5. பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் ………………..
- வாணிதாசன்
- வண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
விடை : வாணிதாசன்
6. அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் …………………….
- வண்ணதாசன்
- பாரதியார்
- வாணிதாசன்
- பாரதிதாசன்
விடை : வாணிதாசன்
7. வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு ………………..
- இந்தியா
- சீனா
- பிரெஞ்சு
- இங்கிலாந்து
விடை : பிரெஞ்சு
குறு வினா
1. வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
2. வாணிதாசன் இயற்றியுள்ள நூல்கள் யாவை?
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்
3. வள்ளைப்பாட்டு என்றால் என்ன?
பெண்கள் நெல் குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்
4. நன்செய், புன்செய் நிலம் பற்றி எழுதுக
- நன்செய் நிலம் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் நிலம் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
5. நம் மனத்தை மயக்க வல்லவை எவை?
கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.
சிறு வினா
வாணிதாசன் – குறிப்பு வரைக
- தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
- அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர்.
- இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
- கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
- பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.