Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 2.3 – தமிழர் மருத்துவம்

பாடம் 2.3 தமிழர் மருத்துவம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.3 – “தமிழர் மருத்துவம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு  ______ பயன்படுத்தினர்.

  1. தாவரங்களை 
  2. விலங்குகளை
  3. உலோகங்களை
  4. மருந்துகளை

விடை : தாவரங்களை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ______ நீட்சியாகவே உள்ளது.

  1. மருந்தின்
  2. உடற்பயிற்சியின்
  3. உணவின்
  4. வாழ்வின்

விடை : உணவின்

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று 

  1. தலைவலி
  2. காய்ச்சல்
  3. புற்றுநோய்
  4. இரத்தக்கொதிப்பு

விடை : இரத்தக்கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.

  1. சுவைக்காக
  2. சிக்கனத்திற்காக
  3. நல்வாழ்வுக்காக
  4. உணவுக்காக

விடை : நல்வாழ்வுக்காக

குறு வினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும்

நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறு தான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

  • 45 நிமிடத்தில் 3கி.மீ. நடைப்பயணம்
  • 15 நிமிடம் யோக, தியானம், மூச்சுப்பயிற்சி
  • 7 மணி நேர தூக்கம்
  • 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

மூலிகை, தாவர இலை, உலோகங்கள், பாஷானங்கள், தாதுப்பொருள்கள் ஆகியன தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுகின்றனவாகும்

சிறு வினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம். மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்

தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணம், மன அழுத்தம், எது கேளிக்கை? எது குதூகலம்? எது படிப்பு? எது சிந்தனை? என்ற புரிதல் இல்லாமை ஆகியவற்றைக் கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம்

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்து விட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்து விட்டோம். இதுவே இன்றைக்கு பல நோய்கள் பெருக மிக முக்கிய காரணம் ஆகும்.

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

  • நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.
  • எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
  • இரவுத்தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
  • உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடு வினா

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
  • வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப் பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.
  • அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
  • ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
  • ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.
  • அதனால் உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு
  • இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
  • மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான
    சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
  • அதாவது “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளின் படி நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கிறது.

சிந்தனை வினா

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைத் கையாளலாம்?

இயற்கையோடு இணைந்து உண்ணல்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு, மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்களுமே அவர்களது உடல் நலத்தையும் உள நலத்தையும் தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய சஞ்சீவி மருந்தாகப் கருதப்படுகிறது.

உண்ணும்  முறை

எளிதல் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை, பால் இவற்றையே குடல் ஏற்றுக்கொள்கிறது. நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்.

பயிற்சிகள்

தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணிநேர தூக்கம் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

தவிர்க்க வேண்டியன

நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனை குறைவாக சேர்த்தல் நன்று. உப்பு நிறைந்த பொருள்களான ஊறுகாய், அப்பளம், வடகம், கருவாடு, வறுத்த முந்திரிப் பருப்பு, வறுத்த உருளைச் சீவல், வாழைக்காய்ச் சீவல், புளித்த மோர் முதலியனவற்றை முழுவதுமாகத் தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, பனிக்கூழ், இனிப்புக்கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும்.

சமச்சீர் உணவு

“உணவே மருந்து மருந்தே உணவு” என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நூண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள் ______மக்கள்

  1. தமிழ்
  2. கேரள
  3. தெலுங்கு
  4. கர்நாடக

விடை : தமிழ்

2. ______மக்கள் உடற்கூறு பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலும் சிறந்த விளங்கினர்.

  1. கேரள
  2. தெலுங்கு
  3. தமிழ்
  4. கர்நாடக

விடை : தமிழ்

3. தமிழ் மருத்துவம் ______ என்று அழைக்கப்படுகிறது.

  1. ஹோமியோபதி
  2. அலோபதி
  3. அக்குபஞ்சர்
  4. சித்தமருத்துவம்

விடை : சித்தமருத்துவம்

4. உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்குவது ______ கலை

  1. நாட்டியம்
  2. ஓவியம்
  3. யோகனம்
  4. உடற்பயிற்சி

விடை : சித்தமருத்துவம்

5. தினமும் ______ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 3

6.  ______ களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்பத்தியது.

  1. ஆங்கிலேயர்கள்
  2. பாரசீகர்கள்
  3. ஆரியர்கள்
  4. முகலாயர்கள்

விடை : மெய்யியல்

7. வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றவர்கள்

  1. அமைச்சர்கள்
  2. சித்தர்கள்
  3. அரசர்கள்
  4. குடிமக்கள்

விடை : சித்தர்கள்

பிரித்தெழுதுக

  1. மருந்தென = மருந்து + என
  2. உடற்கூறுகள் = உடல் + கூறுகள்
  3. தங்களுக்கென = தங்களுக்கு + என
  4. வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்
  5. பழந்தமிழர் = பழமை + தமிழர்
  6. கண்டறிந்து = கண்டு + அறிந்து
  7. அறிந்திருப்பர் = அறிந்து + இருப்பர்
  8. மருந்தில்லா = மருந்து + இல்லா

குறு வினா

1. தமிழ்மக்கள் எவற்றில் சிறந்து விளங்கினர்?

தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

2. மனிதன் தொடக்க காலத்தில எவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்?

வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்

3. எவை மனிதனை நலமாக வாழவைக்கும்?

சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் மனிதனை நலமாக வாழவைக்கும்.

சிறு வினா

1. தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும் போது எவ்வாறு விரிந்திருக்கிறது.

தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும், பாட்டி வைத்தியமாகவும், மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும், உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

2. நடை முறையில் உள்ள மருத்துவ முறைகள் சிலவற்றை கூறு

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment