Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 2.5 – வினைமுற்று

பாடம் 2.5 மயங்கொலிகள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 2.5 – “மயங்கொலிகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிரம் என்பது _______ (தலை / தளை)

விடை : தலை

2. இலைக்கு வேறு பெயர் _______ (தளை / தழை)

விடை : தழை

3. வண்டி இழுப்பது _______ (காலை / காளை)

விடை : காளை

4. கடலுக்கு வேறு பெயர் _______ (பரவை / பறவை)

விடை : பரவை

5. பறவை வானில் _______ (பறந்தது / பரந்தது)

விடை : பறந்தது

6. கதவை மெல்லத் _______ (திறந்தான் / திரந்தான்)

விடை : திறந்தான்

7. பூ _______ வீசும். (மனம் / மணம்)

விடை : மணம்

8. புலியின் _______ சிவந்து காணப்படும். (கன் / கண்)

விடை : கண்

9. குழந்தைகள் _______ விளையாடினர். (பந்து / பன்து)

விடை : பந்து

10. வீட்டு வாசலில் _______ போட்டனர். (கோலம் / கோளம்)

விடை : கோலம்

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளை திருத்தி எழுதுக

1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

விடை : என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

2. தேர்த் திருவிலாவிற்கு செண்றனர்.

விடை : தேர்த் திருவிழாவிற்கு சென்றனர்.

3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

விடை : வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது

குறுவினாக்கள்

1. மயங்கொலி எழுத்துகள் யாவை?

உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

  • ண, ன, ந
  • ல, ழ, ள
  • ர, ற

ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2. ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக

எழுத்துபிறக்கும் முறை
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

கூடுதல் வினாக்கள்

சரியான தொடரைக் கண்டறிந்து எழுதுக

  1. பாரம்பரியச் சின்னங்களைப் நமது நாட்டின் பாதுகாப்பேன்.
  2. நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
  3. நமது பாரம்பரியச் நாட்டின் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
  4. பாரம்பரியச் நாட்டின் சின்னங்களைப் நமது பாதுகாப்பேன்.

விடை: நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.

1. மயங்கொலி எழுத்துகள் எவை?

  • ண, ன, ந
  • ல, ழ, ள
  • ர, ற

ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2. சொற்களில் ண, ன இடம்பெறும் வகை பற்றி எழுதுக

“ட” என்னும் எழுத்துக்கு முன் “ண்” வரும்

எ.கா. : கண்டம், வண்டி, நண்டு

ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்

எ.கா. : மன்றம், நன்றி, கன்று

3. ல, ள, ழ – எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக

எழுத்துபிறக்கும் முறை
நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்.

இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்

ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்).

ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.

4. ல, ள, ழ பொருள் வேறுபாடு உணர்க.

விலை -பொருளின் மதிப்புலை – செடியின் இலை
விளை – உண்டாக்குதல்ளை – மெலிந்து போதல்
விழை – விரும்புழை – நூல் இழை

5. ர, ற எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக

எழுத்துபிறக்கும் முறை
நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம

6. ல, ள, ழ பொருள் வேறுபாடு உணர்க.

ரி – நீர்நிலைகூரை – வீட்டின் கூரை
றி – மேலே ஏறிகூறை – புடவை

7. ண, ன பொருள் வேறுபாடு அறிக.

வாம் – வெடிணி – வேலை
வாம் – ஆகாயம்கூறை – புடவை

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக

நடஉண்உறங்கு
ஆண்பால்நடக்கிறான்உண்கிறான்உறங்கினான்
பெண்பால்நடக்கிறாள்உண்கிறாள்உறங்கினாள்
பலர்பால்நடக்கிறார்உண்டார்உறங்கினார்
ஒன்றன் பால்நடந்ததுஉண்டதுஉறங்கியது
பலவின் பால்நடந்தனஉண்டனஉறங்கின
தன்மைநடந்தேன்உண்கிறேன்உறங்கினேன்
முன்னிலைநடந்தீர்உண்டீர்உறங்குவீர்
படர்க்கைஅவன் நடந்தான்அவன் உண்பான்அவன் உறங்கினாள்
இறந்த காலம்நடந்தான்உண்டான்உறங்கினான்
நிகழ் காலம்நடக்கிறான்உண்கிறான்உறங்குகிறான்
எதிர் காலம்நடப்பான்உண்பான்உறங்குவான்

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

வினைச்சொல்வேர்ச்சொல்
1. நடக்கிறதுநட
2. போனான்போ
3. சென்றனர்செல்
4. பேசினாள்பேசு
5. வருகவா
6. தருகின்றனர்தா

நிற்க அதற்குத் தக…

தமிழ்ச்சொல் அறிவோம்

  • நோய் – Disease
  • மூலிகைத்தாவரம் – Medical plant
  • நுண்ணுயிர் முறி – Antibiotic

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment