Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 3.4 – தலைக்குள் ஓர் உலகம்

பாடம் 3.4 தலைக்குள் ஓர் உலகம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 3.4 – “தலைக்குள் ஓர் உலகம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

நூல்வெளி

 • சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
 • இவர் சிறுகதைகள், புதினங்கள் நாடகங்கள், அறிவியல் புனைவுக் கதைகள், திரைப்படக்கதை வசனம் எனப் பல துறைகளில் பணியாற்றிவர்.
 • மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
 • என் இனிய எந்திரா, மீண்டம் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
 • இவரது தலைமைச்செயலகம் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.

மதிப்பீடு

மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை

உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை, புதிரானவை அவற்றை பற்றிக் காண்போம்.

இடப்பாகச் செயல்

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலனவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்கான காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியனா பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள். இடது பாதிதான் பேச எழுத கணக்கிட தர்க்க ரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெலலாம் இடது பகுதி பாரத்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்

இடது பாதி அண்ணன் என்றால் வலது பாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை தொடர்பானவை. எல்லாம் வலது பாதியில் தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளை கையாளுபவர்களாக, கலைத்திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாக திகழ்வர்.

முடிவுரை

இடதும், வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

மதிப்பீடு

1. மூளையின் பாகங்கள் யாவை.

 • உள்மூளை
 • நடுமூளை
 • பின்மூளை

2. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை லிட்டரில் குருதி தேவைப்படுகிறது?

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது.

3. மூளை பார்த்துக் கொள்ளும் வேலை யாது?

தலையின் பகுதியல் நடைபெறும் சில தன்னிச்சையான செயல்களான வெளிச்சத்திற்கு ஏற்றப்படி கண்களை திறப்பது, தலைமையைத் திருப்பும்போது கண்களை நிலைநிறுத்துவது ஆகியவற்றை எல்லாம் மூளைய பார்த்துக் கொள்கிறது.

4. மூளை பதிலாக முதுகெலும்பு செய்யும் வேலைகள் யாவை?

ஏப்பம் விடுவது, இருமல், தும்மல், கொட்டாவி, வாந்தி ஆகியன மூளை பதிலாக முதுகெலும்பு செய்யும் வேலைகள் ஆகும்.

5. மூளையின் இடது பாகம் செய்யும் வேலையின் பணி யாது?

 • பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது
 • அறிவாற்றல், பிரச்சனைகளை அலுசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையும் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது.
 • நம் மொழி அறிவு கூட இடது பகுதி ஆகும்.

6. மூளையின் வலது பாகத்தின் வேலைகள் யாவை?

 • வடிவங்களை உணர்தல்
 • கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது

7. மூளை வலது பாகம் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் எவ்வாறெல்லாம் திகழ்கின்றன?

நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளைக் கையாளுபவர்கள்

8. மூளை இடது பாகம் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் எவ்வாறெல்லாம் திகழ்கின்றன?

பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப்
பணிக்குப் படித்தவர்கள்

9. மறதி என்பது என்ன?

மறதி என்பது சில நினைவுகள், மற்ற நினைவுகளுடன் குறுக்கிட்டு அவற்றை அழிப்பதாகும்.

10. மனிதர்கள் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மனநிலை மாறுகின்றனர்?

மனிதர்கள் எல்லோரும் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒருமுறை மனநிலை மாறுகின்றனர்

11. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை நாட்கள் தூங்குகிறான்?

சராசரி மனிதன் தனது வாழ்நாளில் இருபது வருடம் தூங்குகிறான்.

12. சராசரி மனிதன் எத்தனை கனவுகள் காண்கிறான்?

மூன்று லட்சம்

13. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?

சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.

14. சுஜாதாவின் முக்கிய பணி யாது?

மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.

15. சுஜாதாவின் படைப்பு யாவை?

என் இனிய எந்திரா, மீண்டம் ஜீனோ, ஸ்ரீரங்ககத்துத் தேவைகள், தூண்டில் கதைகள் தலைமைச்செயலகம்

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment