Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 4.1 – கல்வி அழகே அழகு

பாடம் 4.1 கல்வி அழகே அழகு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 4.1 – “கல்வி அழகே அழகு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • கலன் – அணிகலன்
  • முற்றை – ஒளிர
  • வேண்டாவாம் – தேவையில்லை

பாடலின் பொருள்

ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அது போலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்கு தேவையில்லை.

நூல் வெளி

  • குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.
  • கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
  • மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
  • நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.
  • இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்கு பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது …………….

  1. தங்கம்
  2. வெள்ளி
  3. வைரம்
  4. கல்வி

விடை : கல்வி

2. கலனல்லால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..

  1. கலன் + லல்லால்
  2. கலம் + அல்லால்
  3. கலன் + அல்லால்
  4. கலன் + னல்லால்

விடை : கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு

விடை : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. கற்றவர்

விடை : கல்வி கற்றவர்கள் உலகில் சிறந்தவராய் விளங்குவார்கள்.

3. அணிகலன்

விடை : மனிதனுக்கு கல்விதான் சிறந்த அணிகலன்

குறு வினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

V. சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

  • ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
  • ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • நம்முள் புதைந்து கிடைக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  • பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  • துன்பம் வரும் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  • மெய்பொருள் காணும் அறிவைத் தரும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குமரகுருபரரின் காலம் …………….

  1. கி.பி. 15
  2. கி.பி. 17
  3. கி.பி. 18
  4. கி.பி. 16

விடை : கி.பி. 17

2. நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள்  …………….

  1. 100
  2. 102
  3. 103
  4. 104

விடை : 102

3. அழகு என்பதற்கு பொருள்  …………………..

  1. எழில்
  2. வாய்மை
  3. பொய்
  4. நேர்மை

விடை : எழில்

3. கலன் என்பதற்கு பொருள்  ________.

  1. அழகு
  2. வனப்பு
  3. அணிகலன்
  4. பாவை

விடை : அணிகலன்

குறு வினா

1. நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் கூறுக

மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

2. நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளது?

நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது.

3. குமரகுருபரர் படைத்துள்ள சிற்றிலக்கியங்கள் எவை?

  • சுந்தர் கலிவெண்பா
  • கயிலைக் கலம்பகம்
  • சகலகலாவல்லி மாலை
  • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறு வினா

குமரகுருபரர் – குறிப்பு வரைக

குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.

சுந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment