Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 4.2 – புத்தியைத் தீட்டு

பாடம் 4.2 புத்தியைத் தீட்டு

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 4.2 – “புத்தியைத் தீட்டு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • தடம் – அடையாளம்
  • அகம்பாவம் – செருக்கு
  • புத்தி – அறிவு
  • உள்ளம் – மனம்
  • லாபம் – பலன்
  • எண்ணி – நினை

நூல் வெளி

  • ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ……………. இன்றி வாழ்ந்தார்.

  1. சோம்பல்
  2. அகம்பாவம்
  3. வருத்தம்
  4. வெகுளி

விடை : அகம்பாவம்

2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..

  1. கோ + அப்பா
  2. கோயில் + லப்பா
  3. கோயில் + அப்பா
  4. கோ + இல்லப்பா

விடை : கோயில் + அப்பா

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………

  1. பகைவென்றாலும்
  2. பகைவனென்றாலும்
  3. பகைவன்வென்றாலும்
  4. பகைவனின்றாலும்

விடை : பகைவனென்றாலும்

குறு வினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்

2. பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?

பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்

சிறு வினா

புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

  • கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
  • ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
  • பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
  • மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
  • இதனை மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
  • வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
  • இவற்றை எண்ணிப் பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

சிந்தனை வினா

உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

  • முதலில் வெறுப்புக்கு காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.
  • அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
  • நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப் பேழை பகுதியை எழுதியவர் ……………………..

  1. ஆலங்குடி சோமு
  2. ஆலங்குடி வங்கனார்
  3. வாணிதாசன்
  4. குமரகுருபரர்

விடை : ஆலங்குடி சோமு

2. …………………….. தீட்ட வேண்டும் என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்

  1. கண்ணியம்
  2. ஆத்திரம்
  3. புத்தி
  4. கத்தி

விடை : புத்தி

3. …………… அன்பு பாதை விட வேண்டும்.

  1. நண்பன்
  2. மறந்தவன்
  3. ஆணவம் உடையவருக்கு
  4. பகைவன்

விடை : பகைவன்

4. தடம் என்னும் சொல்லின் பொருள் ………………

  1. ஆணவம்
  2. அடையாளம்
  3. சினம்
  4. செருக்கு

விடை : அடையாளம்

5. ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………. 

  1. பத்மபூஷன்
  2. பாரதரத்னா
  3. பத்மவிபூஷன்
  4. கலைமாமணி

விடை : கலைமாமணி

குறு வினா

1. எவ்வாறு தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்?

கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

2. எப்போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்?

ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்

3. ஆலங்குடி சோமு எவற்றை எவற்றை எண்ணிப் பார்க்க சொல்கிறார்?

பூமியல் வாழ்வது சில காலமம். அதற்குள் ஏன் அகம்பாவம்? அகம்பாவத்தால் இலாபமும் கிடைக்காது. எனவே இவற்றை மனிதர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

4. நமக்குப் பெருமை என்பது எது?

அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை ஆகும்

5. ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக

  • ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்.
  • சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment