Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 4.4 – எச்சம்

பாடம் 4.4 எச்சம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 4.4 – “எச்சம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _______ எனப்படும்.

  1. முற்று
  2. எச்சம்
  3. முற்றெச்சம்
  4. வினையெச்சம்

விடை : எச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்

  1. படித்து
  2. எழுதி
  3. வந்து
  4. பார்த்த

விடை : பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் _______ வெளிப்படையாகக் காட்டாது.

  1. காலத்தை
  2. வினையை
  3. பண்பினை
  4. பெயரை

விடை : காலத்தை

பொருத்துக

1. நடந்துஅ. முற்றெச்சம்
2. பேசியஆ. குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன். உண்டான்இ. பெயரெச்சம்
4. பெரியஈ. வினையெச்சம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

பெயரெச்சம்வினையெச்சம்
நல்லபடுத்து
எறிந்தபாய்ந்து
வீழ்ந்தகடந்து
மாட்டியபிடித்து
அழைத்தபார்த்து

சிறு வினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்

2. அழகிய மரம் எச்ச வகையை விளக்குக.

  • ‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.
  • இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக

வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்

தெரிநிலை வினையெச்சம் :-

எழுதி வந்தான்

இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம் :-

மெல்ல வந்தான்

இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

கூடுதல் வினாக்கள்

1. பெயரெச்சம் என்றால் என்ன?

பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.

2. வினையெச்சம் என்றால் என்ன?

இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

3. பெயரெச்சம் எத்தனை காலத்தில் வரும்? சான்று தருக.

பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்

சான்று :-

  • பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
  • பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
  • பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

4. பெயரெச்சத்தின் வகைகளை விளக்குக

பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்

தெரிநிலை பெயரெச்சம்

எழுதிய கடிதம்

இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்

சிறிய கடிதம்

இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது.

இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்:-

1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது. 

  • மத்தளம்

2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி 

  • வீணை

7. இயற்கைக் கருவி 

  • சங்கு

12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட கருவி 

  • கொம்பு

வலமிருந்து இடம்:-

4. வட்டமான மணி போன்ற கருவி 

  • சேகண்டி

8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி 

  • குடமுழா

9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் 

  • பாணர்

மேலிருந்து கீழ்:-

1. 19 நரம்புகளைக் கொண்ட யாழ்

  • மகரயாழ்

3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை ________க் கருவி

  • கஞ்ச

5. சிறியவகை உடுக்கை. 

  • குடுகுடுப்பை

6. பறை ஒரு ________ கருவி

  • தோல்

கீழிருந்து மேல்:-

8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக்கருவி 

  • குழல்

10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை 

  • ஏழு

11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.

  • குடமுழா 

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

கைவினைப் பொருட்கள் – Craftsபின்னுதல் – Knitting
புல்லாங்குழல் – Fluteகொம்பு – Horn
முரசு – Drumகைவினைஞர் – Artisan
கூடை முடைதல் – Basketryசடங்கு – Rite

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment