பாடம் 5.1 வளம் பெருகுக
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 5.1 – “வளம் பெருகுக” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- வாரி – வருவாய்
- எஞ்சாமை – குறைவின்றி
- முட்டாது – தட்டுப்பாடின்றி
- ஒட்டாது – வாட்டம்இன்றி
- வைகுக – தங்குக
- ஓதை – ஓசை
- வெரீஇ – அஞ்சி
- யாணர் – புதுவருவாய்
நூல் வெளி
- ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
- தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது.
- இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
- இநநூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய _______ எல்லாம் முளைத்தன.
- சத்துகள்
- பித்துகள்
- முத்துகள்
- வித்துகள்
விடை : வித்துகள்
2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு _______ பெருகிற்று.
- காரி
- ஓரி
- வாரி
- பாரி
விடை : வாரி
3. அக்களத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அ + களத்து
- அக் + களத்து
- அக்க + அளத்து
- அம் + களத்து
விடை : அ + களத்து
4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- கதிரென
- கதியீன
- கதிரீன
- கதிரின்ன
விடை : கதிரீன
குறு வினா
1. பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது யாது?
தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.
2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்
சிறு வினா
உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
- சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கிறது.
- அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.
- முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுபாடின்றி மழை பொழிகின்றது.
- தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.
- செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.
- அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.
- நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஒலி எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சி தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.
சிந்தனை வினா
உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
உழவுத் தொழில் உயிர்தொழில்
நாகரீகம் என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம் உழவுத்தொழில் செய்தல் வேண்டும். உழவுத்தொழில், அரசுப் பணியில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும் உழவுத்தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப் பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உழவுத்தொழில் நிச்சயம் சிறக்கும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ______க்கு உண்டு
- மழை
- வெயில்
- காற்று
- நெருப்பு
விடை : மழை
2. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்
- நெய்தல் தொழில்
- மீன்பிடித் தொழில்
- மண்பாண்டத் தொழில்
- உழவுத் தொழில்
விடை : உழவுத் தொழில்
3. புதுவருவாய் என்னும் பொருளினைக் குறிக்கும் சொல்
- வாரி
- எஞ்சாமை
- ஒட்டாது
- யாணர்
விடை : யாணர்
4. வளம் பெருக பாடல் ______ மன்னர் பற்றியது
- சேரர்
- சோழர்
- பாண்டியர்
- பல்லவர்
விடை : சேரர்
5. தர்மபுரியின் பழைய பெயர்
- மாமண்டூர்
- வடுவூர்
- தகடூர்
- பல்லவர்
விடை : தகடூர்
6. அக்கிளை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அக் + கிளை
- அ + கிளை
- அக்க + கிளை
- அம் + கிளை
விடை : அ + கிளை
7. பெடை + ஓடு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- பெடையோடு
- பெடைஒடு
- பெட்டையோடு
- பெடையாடு
விடை : பெடையோடு
8. ஓதை என்பதன் இருபொருள் தருக
- ஓசை, ஒலி
- ஒழி, கேட்டல்
- குறைவு, அஞ்சி
- தங்குதல், குறைவு
விடை : ஓசை, ஒலி
9. வாரி என்பதன் பொருள் தருக
- தங்குக
- அஞ்சி
- வருவாய்
- வாட்டமின்றி
விடை : வருவாய்
பிரித்தெழுதுக
- அக்கதிர் = அ + கதிர்
- உருகெழும் = உருகு + எழும்
- அகன்றலை = அகன்ற + அலை
- கதிரீன = கதிர் + ஈன
குறு வினா
1. சேரநாட்டில் வருவாய் சிறந்து விளங்கக் காரணம் யாது?
பெருகிய மழை சேரநாட்டில் வருவாய் சிறந்து விளங்கக் காரணமாகும்
2. அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் எங்கு நிறைகின்றன?
அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் ஏறினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைகின்றன.
3. நாரை இனங்கள் பெண்பாற் பறவைகளோடு பிரிந்து செல்லக் காரணம் யாது?
நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பு ஆரவார ஒலியால், நாரை இனங்கள் தன் பெண்பாற் பறவைகளோடு பிரிந்து செல்கின்றன.
4. மழை நீரின் பயன் பற்றி கூறு
மண்ணில் பொழியும் மழை நீரே சத்தான வித்துகளை நித்தமும் முளைக்கச் செய்து உணவைத் தந்து உலக உயிர்களை ஊட்டி வளர்க்கின்றது