பாடம் 5.2 பாடறிந்து ஒழுகுதல்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 5.2 – “பாடறிந்து ஒழுகுதல் ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- அலந்தவர் – வறியவர்
- செறாஅமை – வெறுக்காமை
- கிளை – உறவினர்
- பேதையார் – அறிவற்றவர்
- நோன்றல் – பொறுத்தல்
- மறாஅமை – மறவாமை
- போற்றார் – பகைவர்
- பொறை – பொறுமை
பாடலின் பொருள்
இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.
நூல் வெளி
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
- குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
- கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
- நெய்தற்கலிப் பாடல்கள் இயற்றியவரும் இவரே.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பசியால் வாடும் …………… உணவளித்தல் நமது கடமை.
- பிரிந்தவர்க்கு
- அலந்தவர்க்கு
- சிறந்தவர்க்கு
- உயர்ந்தவர்க்கு
விடை : அலந்தவர்க்கு
2. நம்மை ……………..ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.
- இகழ்வாரை
- அகழ்வாரை
- புகழ்வாரை
- மகிழ்வாரை
விடை : இகழ்வாரை
3. மறைபொருளைக் காத்தல் …………… எனப்படும்.
- சிறை
- அறை
- கறை
- நிறை
விடை : நிறை
4. பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
- பாட் + அறிந்து
- பா + அறிந்து
- பாடு + அறிந்து
- பாட்டு + அறிந்து
விடை : பாடு + அறிந்து
5. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
- முறையப்படுவது
- முறையெனப்படுவது
- முறைஎனப்படுவது
- முறைப்படுவது
விடை : முறையெனப்படுவது
குறு வினா
1. பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
- பண்பு என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
- அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.
2. முறை, பொறை என்பவற்றுக்குக கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
- முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்
- பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.
சிறு வினா
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
- இல்வாழ்க்கை என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.
- பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
- அன்பு என்பது உறவினர்களோடு வெறப்பின்றி வாழ்தல்.
- அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்தல்.
- செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
- நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.
- முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
- பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.
இத்தகைய பண்புகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.
சிந்தனை வினா
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
உண்மை, உழைப்பு,நேர்மை, அன்பு, அறம்,சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, தன்னம்பிக்கை, ஊக்கப்படுத்துதல், பொறாமை கொள்ளாமை, ஏழைகளுக்கு உதவுதல், பெரியோரை மதித்தல், மனிதநேயத்துடன் இருத்தல், பிறர் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியன வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நாங்கள் கருகின்றோம்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கலித்தொகை ……………….. நூல்களுள் ஒன்று.
- பதினெண்மேல்கணக்கு
- பதினெண்கீழ்கணக்கு
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
விடை : எட்டுத்தொகை
2. கலித்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………………
- 401
- 400
- 151
- 150
விடை : 150
3. கலித்தொகையை தொகுத்தவர் …………..
- நல்லந்துவனார்
- ஓரம்போகியார்
- பெருங்கடுங்கோ
- அம்மூவணார்
விடை : நல்லந்துவனார்
4. கலித்தொகையில் நெய்தல் கலி பாடியவர் ………………..
- ஓரம்போகியார்
- பெருங்கடுங்கோ
- நல்லந்துவனார்
- அம்மூவணார்
விடை : நல்லந்துவனார்
5. கிளை என்பதற்கு ……………… என்று பொருள்
- பகைவர்
- வறியவர்
- உறவினர்
- அறிவற்றவர்
விடை : உறவினர்
சிறு வினா
1. ஆற்றுதல், போற்றுதல் குறித்து கலித்தொகையில் குறிப்பிவன யாவை?
- ஆற்றுதல் – ஏழைகளுக்கு உதவி செய்வது போற்றுதல்
- போற்றுதல் – அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்
2. பொறுமை எனப்படுவது யாது?
பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரை பொறுத்தல் ஆகும்.
3. நீதிமறை எனப்படுவது யாது?
நீதிமறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல் ஆகும்
4. அறிவு. செறிவு குறித்து நல்லந்துவனார் கூறுவன யாவை?
- அறிவு – அறிவற்றவர்கள் கூறும் சொற்களை பொறுத்து கொள்ளுதல்
- போற்றுதல் – செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
4. ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்குணங்கள் ஆகும்?
அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்குணங்கள் ஆகும
குறு வினா
1. நல்லந்துவனார் – குறிப்பு வரைக
- கலித்தொகையைச் தொகுத்த நல்லந்துவனார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர்
- கலித்தொகையின் நெய்தல்கலிப் பாடல்களை இயற்றியவர்
2. கலித்தொகையின் பிரிவுகளை எழுதுக
- குறிஞ்சிக்கலி
- முல்லைக்கலி
- மருதக்கலி
- நெய்தற்கலி
- பாலைக்கலி
என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
3. கலித்தொகை குறிப்பு வரைக
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- கலிப்பா என்னும் பாவகையால் ஆனது
- 150 பாடல்களை கொண்டது
- குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
- கலித்தொகையை தொகுத்தவர் நல்லந்துவனார்