பாடம் 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 5.3 – “நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………..
- கல்வெட்டுகள்
- செப்பேடுகள்
- பனையோலைகள்
- மண்பாண்டங்கள்
விடை : பனையோலைகள்
2. பானை ……………….. ஒரு சிறந்த கலையாகும்.
- செய்தல்
- வனைதல்
- முடைதல்
- சுடுதல்
விடை : வனைதல்
3. மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
- மட்டு + மல்ல
- மட்டம் + அல்ல
- மட்டு + அல்ல
- மட்டும் + அல்ல
விடை : மட்டும் + அல்ல
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
- கயிற்றுக்கட்டில்
- கயிர்க்கட்டில்
- கயிறுக்கட்டில்
- கயிற்றுகட்டில்
விடை : கயிற்றுக்கட்டில்
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. முழுவதும்
விடை : பாடநூல் முழுவதும் வாசித்தால் தான் தெளிவு கிடைக்கும்
2. மட்டுமல்லாமல்
விடை : ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும் கற்க வேண்டும்
3. அழகுக்காக
விடை : பூச்செடிகளை அழகுக்காக வீட்டின் முன் வளர்த்தேன்
4. முன்பெல்லாம்
விடை : முன்பெல்லாம் விவசாயத்திற்கு காளை மாடுகளை அதிகமாக பயன்படுத்தினர்
குறு வினா
1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
- மண் பொம்மைகள் செய்தல்
- மரப்பொம்மைகள் செய்தல்
- காகிதப் பொம்மைகள் செய்தல்
- தஞ்சாவூர்த் தட்டு செய்தல்
- சந்தன மாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல்
- மாட்டுக் கொம்பினால் கலைப்பொருட்கள் செய்தல்
ஆகியவற்றை எல்லாம் கைவினைக் கலைகள் எனக்கூறுகிறோம்
2. மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக
மண்பாண்டம் | சுடுமண் சிற்பம் |
களிமண்ணை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மெல்லி மணல் மற்றும் சாம்பல் சேர்த்து சக்கரத்தால் செய்வது மண்பாண்டம் | களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எரித்து எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் |
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
- குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை பொம்மைகள்
- பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான்
- பெரிய கூடை
- சுளகு
- விசிறி
- தொப்பி
- ஓலைப்பாய்
- பனை மட்டை நாரிலிருந்து கயிறு
- கட்டில்
- கூடை
போன்றவை செய்யப்படுகின்றன.
சிறு வினா
1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
- பிரம்பு என்பது ஒரு தாவரம். முதலில் பிரம்புகளை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.
- சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு பாறைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும்.
- அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல் வளையும்.
- பின்னர் அதனை தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அது அப்படிேய நிலைத்து விடும்.
- பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.
2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
மட்டக்கூடை | தட்டுக்கூடை |
முறம் | ஏணி |
கூரைத்தட்டி | தெருக்கூட்டும் துடைப்பம் |
பூக்கூடை | மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி |
கட்டில் | கால்நடைகளுக்கு மருந்து புகட்டு குழாய் |
புட்டுக்குழாய் | தொட்டில் |
கொட்டுக்கூடை | பூத்தட்டு |
சதுரத்தட்டி | புல்லாங்குழல் |
பழக்கூடை | பாடை |
ஆகியவை அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்
நெடு வினா
தமிழக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக
மண்பாண்டக் கலை:-
- குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகிய அனைத்து பொருட்களும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவை
- பக்குவப்படுத்தப்பட்ட களிமண், மெல்லிய மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- சக்கரத்தின் நடுவே வைத்து உரிய வடிவத்தால் அதைக் கொண்டு வர வேண்டும்.
- பிறகு அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காய வைக்க வேண்டும். பிறகு உரிய மண்பாண்டம் தயாராகிவிடும்.
- மண்பாண்டங்களில் சமைத்த உணவு உடலுக்கு நல்லது.
- திருவிழாக் காலங்களில் சமயச் சடங்குகளிலும் மண்பானைகள் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மூங்கில் கலை:-
- மூங்கில் கொண்டு பல கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன.
- மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டு குழாய், தொட்டில், பாடை ஆகிய அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்
- முன்பு எல்லாம் திருமணத்தின் போது சீர்த்தட்டுகளாக பயன்படுத்தினர்.
பனையோலைக் கலை:-
- பனையோலையில் பல கைவினைப் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
- குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய், பனை மட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன
பிரம்புக் கலை:-
- பிரம்பு என்பது ஒரு தாவரம். முதலில் பிரம்புகளை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.
- சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு பாறைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும். அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல் வளையும்.
- பின்னர் அதனை தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அது அப்படிேய நிலைத்து விடும். பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.
- பிரம்பு மிகவும் குளிர்ச்சியானது. எனேவ அதில் அமர்வது உடலுக்கு நல்லது.
- மேலும் பிரம்புப் பொருள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
சிந்தனை வினா
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
- கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருளால் தயாரிக்கப்படுவை
- செயற்கையான பொருளோ தீங்கு விளைவிக்கும் இரசாயனமோ இதில் பயன்படுத்துவது இல்லை.
- இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றை முதன்மைப் பொருளாக கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
- கைவினைக் கலைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களின் மீதத்தைப் பூமியில் புதைத்தாலும், அவை மக்கி விடம். இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்த தீங்க ஏற்படாது.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம் ……………
- கீழடி
- சிந்துசமவெளி
- ஆதிச்சநல்லூர்
- செம்பியன் கண்டியூர்
விடை : சிந்துசமவெளி
2. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம் …………….
- கீழடி
- சிந்துசமவெளி
- ஆதிச்சநல்லூர்
- செம்பியன் கண்டியூர்
விடை : ஆதிச்சநல்லூர்
3. மிகவும் பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று ………………
- பிரம்புக்கலை
- பனை ஒலைக் கலை
- மூங்கில் கலை
- மண்பாண்டக் கலை
விடை : மண்பாண்டக் கலை
4. குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும் …………..
- உவர் மண்
- களிமண்
- செம்மண்
- வண்டல் மணி
விடை : களிமண்
5. பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர்…………..
- திருவை
- சுழல்
- நூல்
- ஊசி
விடை : திருவை
6. குழந்தைகளைப் படுக்க வைக்க உதவும் பாய் …………..
- பந்திப்பாய்
- திண்ணைப்பாய்
- தடுக்குப் பாய்
- பட்டுபாய்
விடை : தடுக்குப் பாய்
7. பானை செய்தலை ……………. என்று சொல்வது மரபு
- பானை குடைதல்
- பானை உருவாக்கல்
- பானை வனைதல்
- பானை உடைத்தல்
விடை : பானை வனைதல்
8. மண்பாண்டக்கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை ______________
- மா
- பனை ஒலைக் கலை
- சுடுமண் சிற்பக்கலை
- மூங்கில் கலை
விடை : சுடுமண் சிற்பக்கலை
7. தமிழ்நாட்டின் மாநில மரம் ______________
- பனை மரம்
- மா மரம்
- வாழை மரம்
- பலா மரம்
விடை : பனை மரம்
பொருத்துக
1. உண்ண உதவுவது | அ. திண்ணைப்பாய் |
2. உட்காரவும், படுக்கவும் உதவுவது | ஆ. பட்டுப்பாய் |
3. திருமணத்திற்கு பயன்படுத்துவது | இ. பந்திப்பாய் |
4. தொழுகைக்கு பயன்படுத்துவது | ஈ. தடுக்குப்பாய் |
5. குழந்தைகளைப் படுக்க வைப்பது | உ. தொழுகைப்பாய் |
விடை : 1 – இ, 2 – அ – 3 – ஆ, 4 – உ, 5 – ஈ |
சிறு வினா
1. பனைமட்டையின் நாரிலிருந்து செய்யப்படும் பொருள்கள் எவை?
கயிறு, கட்டில், கூடை
2. பாய்களின் வகைகளை கூறு
- குழந்தைகளை படுக்க வைப்பது தடுக்குப்பாய்
- உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய்
- உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய்
- திருமணத்திற்கு பயன்படுத்துவது பட்டுப்பாய்
- இசுலாமியர் தொழுகைக்கு பயன்படுத்துவது தொழுகைப்பாய்
3. மூங்கிலில் வகைகள் யாவை?
கூல் மூங்கில், மலை மூங்கில், கூட்டு மூங்கில் என மூன்று வகைப்படும்.
4. கைவினைக் கலைகள் என்றால் என்ன?
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக் கலைகள் என்பர்.
5. கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் எது?
கூட்டு மூங்கில்
6. பிரம்பு தருவிக்கப்படும் இடங்கள் யாவை?
அஸ்ஸாம், அந்தான், மலேசியா
7. சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன?
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
8. சுடுமண் சிற்பங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவர்?
டெரகோட்டா
9. பாய்மரக்கப்பல்களில் பாய் பயன்படுத்தியதாக புறநானூறு குறிப்பிடும் வரி யாது?
கூம்பொடு மீப்பாய் களையாது