பாடம் 6.4 இடைச்சொல், உரிச்சொல்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 10 Tamil Chapter 6.4 “இடைச்சொல், உரிச்சொல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
விடை: இடைச்சொல்
2 உறுபசி என்னும் சொல்லில் உறு என்பதன் பொருள்
- குறைவு
- காவல்
- மிகுதி
- கூர்மை
விடை: மிகுதி
3. கடிநகர் என்பதன் பொருள்
- மணமிக்க நகர்
- காவல்மிக்க நகர்
- செல்வம் மிக்க நகர்
- கல்வி மிக்க நகர்
விடை: காவல்மிக்க நகர்
சிறுவினா
1. சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சொற்கள் நான்கு வகைப்படும். அவை:
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
2. இடைச்சொல் என்றால் என்ன? இடைச்சொற்களின் வகைகளை எழுதுக.
பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும் முன்னாலோ பின்னாலோ இணைந்து நின்று அச்சொற்களின் பொருளைத் தெளிவுபடுத்துவது இடைச்சொல் ஆகும்.
இடைச்சொல் வகைகளுள் சில:
வேற்றுமை உருபுகள்:
ஐ, ஆல், கு, இன், அது, கண்
விகுதிகள்:
என், ஆன், ஆள், ஆர், தல்
சாரியைகள்:
அத்து, அற்று, அம்
உவம உருபுகள்:
போல, போன்ற
சொல்லுருபுகள்:
மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை,
3. உரிச்சொல் என்றால் என்ன?
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும். இது பெயருக்கும் வினைக்கும் அடையாக வரும்.
சான்று:
சால – சாலச்சிறந்தது
4. ஒரு சொல் பல பொருள்களில் வருவதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உரிச்சொற்களில் ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவது உண்டு.
சான்று:
கடிமலர் – மணம் மிக்க மலர்
கடிநகர் – காவல் மிக்க நகர்
கடிவிடுதும் விரைவாக விடுவோம்
கடிநுனி – கூர்மையான நுனி
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் _______ ஒரே பொருளில் வருகின்றன
- கடி
- சால
- கழி
- மிகுதி
விடை: மிகுதி
2 கடி என்ற சொல் தரும் பொருள்களில் பொருந்தாதது
- மணம்
- காவல்
- மிகுதி
- கூர்மை
விடை: மிகுதி
மொழியை ஆள்வோம்
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை
- ஒருமை – நான் அல்லேன்.
- பன்மை – நாம் அல்லோம்.
முன்னிலை
- ஒருமை – நீ அல்லை.
- பன்மை – நீவீர் அல்லீர்.
படர்க்கை
- ஆண்பால் – அவன் அல்லன்.
- பெண்பால் – அவள் அல்லள்.
- பலர்பால் – அவர் அல்லர்.
- ஒன்றன்பால் – அஃது அன்று.
- பலவின் பால் – அவை அல்ல.
வேறு, உண்டு, இல்லை ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை : அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை : பகைவர் நீவீர் அல்லீர்
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக
கருமை | கடுமை |
கரும்பு | கடமை |
நாடு | பழமை |
களை | கடம் |
வித்து | வேற்றுமை |
வேழம் | கல் |
கற்பு | புதுமை |
பல் | நாற்று |
வேல் | நாடகம் |
புல் | நாம் |
சொற்களை வரிசைப்படுத்திச் சரியான தொடரை எழுதுக.
1. பார்க்கும் பொழுது உள்ளது அதிசயமாக உன்னை சிங்கி
விடை: உன்னைப் பார்க்கும் பொழுது அதிசயமாக உள்ளது சிங்கி
2. சிறுசிறு எம்.ஜி.ஆர் நாடகங்களில் தொடங்கினார் வேடங்களில் நடிக்கத்
விடை: நாடகங்களில் சிறு சிறு வேடங்களின் நடிக்கத் தொடங்கினர் எம்.ஜி.ஆர்
3. வேலையை நோய் குப்புசாமி இழந்து இருந்தார் காரணமாக
விடை: நோய் காரணமாக குப்புசாமி வேலையை இழந்து இருந்தார்
5. இயல்பு மாற்றமும் எவ்வித இணைவது புணர்ச்சி இன்றி
விடை: எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
கதாநாயகன் – The Hero | வரி – Tax |
முதலமைச்சர் – Chief Minister | வெற்றி – Victory |
தலைமைப்பண்பு – Leadership | சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly |
குதிரையேற்றம் – Equestrian | ஆதரவு – Support |