பாடம் 7.2 மெய்ஞ்ஞான ஒளி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 7.2 – “மெய்ஞ்ஞான ஒளி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- பகராய் – தருவாய்
- பராபரம் – மேலான பொருள்
- ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
- அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
நூல்வெளி
- குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
- இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
- சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
- எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
- நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
எதுகை
- கள்ள – உள்ளிருக்கும்
- காசை – ஆசை
மோனை
- கள்ள – கருத்துகளை – கட்டோடு
முரண்
- விரும்பி – விரும்பாது ஆகியன எதிர்ச்சொற்களாக உள்ளன. இவ்வாறு அமைவதை முரண் தொடை என்பர்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _______
- பகர்ந்தனர்
- நுகர்ந்தனர்
- சிறந்தனர்
- துறந்தனர்
விடை : பகர்ந்தனர்
2. ஆனந்தவெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஆனந்த + வெள்ளம்
- ஆனந்தன் + வெள்ளம்
- ஆனந்தம் + வெள்ளம்
- ஆனந்தர் + வெள்ளம்
விடை : ஆனந்தம் + வெள்ளம்
3. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- உள்ளேயிருக்கும்
- உள்ளிருக்கும்
- உளிருக்கும்
- உளருக்கும்
விடை : உள்ளிருக்கும்
குறு வினா
1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?
உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் இன்பப் பெருக்காய்க் கரை கடந்து பொங்கிடும் கடலாக, மேலான பரம் பொருள் விளங்குகின்றது.
2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?
மேலான பொருளின் மீது பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் மனிதனின் மனம் கலங்கும்
சிறு வினா
குணங்குடியார் பாரபரத்திடம் வேண்டுவன யாவை?
- மேலான பொருளையும் தம் தீய எண்ணங்களையும் அடியோடு அழித்தவர்கள், மனதில் உள்ளே இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!
- உன் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
- நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்திற்குள் இன்பப்பொருக்காய் கரை கடந்து பொங்கும் கடலாக விளங்கி நிற்கின்றாள்
- மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.
சிந்தனை வினா
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?
கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகியன ஐம்பொறிகள் ஆகும்.
- கண்கள் மூலம் உயிர் இரக்கம் காட்டுதல் வேண்டும்.
- செவி மூலம் பெரியோர்களின் நற்சொல் கேட்டல் வேண்டும்.
- வாய்மூலம் துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறியும் இரக்கமான சொற்களையும் கூறுதல் வேண்டும்.
- மூக்கின் மூலம் எரிவாயு கசிவு உள்ளிட்டவற்றை உணர்ந்து, விபத்திலிருந்து தடுக்க உதவுதல் வேண்டும்.
- நம் உடல் மூலம் ஏழை எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் உதவுதல் வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சுல்தான் அப்துல்காதர் என்னும் இயற்பெயர் கொண்டவர்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- பாரதி
- சுரதா
- பாரதிதாசன்
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு
2. இளம் வயதிலேய முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்
- வள்ளலார்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- பட்டினத்தார்
- பாரதிதாசன்
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு
3. மனிதர்கள் தம் _______ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
- ஐந்திணைகளை
- அறுசுவைகளை
- நாற்றிசைகளை
- ஐம்பொறிகளை
விடை : ஐம்பொறிகளை
4. பகராய் என்பதன் பொருள் தருக
- மேலான பொருள்
- இன்பப்பெருக்கு
- நீக்கியவர்க்கு
- தருவாய்
விடை : தருவாய்
5. சதுரகிரி, பறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவமியற்றி ஞானம் பெற்றவர்
- வள்ளலார்
- பட்டினத்தார்
- பாரதிதாசன்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு
சிறு வினா
1. வாழ்வாங்கு வாழ என்ன செய்ய வேண்டும்?
ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம்.
2. ஐம்பொறிகள் யாவை?
கண், செவி, வாய், மூக்கு, மெய் ஆகியன ஐம்பொறிகள் ஆகும்.
3. குணங்குடி மஸ்தான் சாகிபு குறிப்பு வரைக
- குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர்.
- இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார்.
- சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
- எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.