Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 7.4 – அறிவுசால் ஔவையார்

 பாடம் 7.4 அறிவுசால் ஔவையார்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 7.4 – “அறிவுசால் ஔவையார்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதிப்பீடு

அறிவுசால் ஔவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

முன்னுரை

அறிவுசால் ஒளவையார் நாடகம் வழியாக அதியாமான், தொண்டைமான் ஆகியோரின் போரினை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பதைக் காண்போம்.

நெல்லிக்கனி

அதியமான் காட்டு வளத்தைக் கண்டு இரசித்து விட்டு அங்கிருந்து, அதிசய நெல்லிக்கனி ஒன்றைப் பறித்து வந்தார். ஒளவையாரை உண்ணச் செய்தார். நெல்லிக்கனி உண்ட ஒளவையார், “இவ்வளவு சுைவயான கனியைத் தான உண்டதில்லை. இது என்ன கனி?” என்று கேட்கிறார். அதற்கு அமைச்சர் கிடைப்பதற்கு அரிய நெல்லிக்கனி இது. நீண்ட நாட்களுக்கு ஒரு முறை பழுக்கும் இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்வார்கள் என்று அமைச்சர் கூறினார்.

ஒளவையாரின் வருத்தம்

அதியமானே! நாட்டைக் காக்கும் நீ இதை உண்ணாமல், எனக்குக் கொடுத்துவிட்டாயே!  இந்த அதிசய நெல்லிக்கனிப் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் உன்னைச் சாப்பிட வைத்திருப்பேன் என்றார். அதற்கு அதியமான் என்னைப் போன்ற  அரசன் இறந்தால் வேறு ஒருவர் அரசர் வருவார். ஆனால், உங்களைப் போன்ற அறிவில் சிறந்த புலவர் ஒருவர் மறைந்தல், அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதனால் தான் எதுவும் கூறாமல் நெல்லிக்கனியை உங்களை உண்ணச் செய்தேன் என்றார்.

அதியமானின் கவலை

அதியமான் கவலையாக இருப்பதை பார்த்து, ஒளவையார் கவலைக்குரிய காரணத்தைக் கேட்கிறார். தொண்டைமான் நம் நாட்டுடன் போர் செய்யப் போகிறான் என்றார். அதியமானே! வீரம் கொண்ட நீ போருக்கு பயந்தவன் இல்லை. போரினால் எத்தனை உயிரிழப்பு! எத்தனை அழிவு! “தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள்” என எத்தனை பேரின் கண்ணீர், ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் இது மறைந்து இருக்கிறது. எனவே இந்தப் போரைத் தவிர்த்தால் என்ன? என்றார் அதியமான்.

தொண்டைமானுக்கு அறிவுரை

ஒளவையார் தொண்டைமானைப் பார்க்கச் சொல்கிறார். அப்போது தொண்டைமான் அவரைப் போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, புதிய போர்க் கருவிகளின் பெருமைகளைப் பற்றி பேசுகிறார். அதற்கு ஒளவையார் அதியமானின் போர்க்கருவிகள் இவ்வளவு அழகாக இல்லை. அடிக்கடி போர் புரிந்து படைக்கருவிகள் எலலாம் இரத்தக்கறை படிந்து, நுனி ஒடிந்தும், கூர்மை மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன என்றார். ஒளவையார் கூறியதைக் கேட்டு அதியமானின் போர்த் திறமையை உணர்ந்து போரைத் தவிரத்து விட்டான் தொண்டைமான்.

முடிவுரை

கற்றோரால் போரைக் கூட தடுத்தி நிறுத்த முடியும் என்பதை இந்நாடகம் உணர்த்தியுள்ளது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment