பாடம் 7.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 7.5 – “வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
சுட்டுத் திரிபு | வல்லினம் மிகும் |
திசைப் பெயர்கள் | வல்லினம் மிகும் |
பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
உவமைத் தொகை | வல்லினம் மிகும் |
நான்காம் வேற்றுமை விரி | வல்லினம் மிகும் |
இரண்டாம் வேற்றுமை தொகை | வல்லினம் மிகாது |
வினைத் தொகை | வல்லினம் மிகாது |
உருவகம் | வல்லினம் மிகும் |
எழுவாய்த் தொடர் | வல்லினம் மிகாது |
எதிர்மறைப் பெயரெச்சம் | வல்லினம் மிகாது |
சிறு வினா
1. சந்திப்பிழை என்றால் என்ன?
வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் கூறுவர்
2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.
சான்று : தலையைக் காட்டு, எனக்குத் தெரியும்
3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
- அது சென்றது
- காய் தின்றேன்
- இலை பறித்தேன்
- எழுதாத பாடல்
- எழுதும்படி சொன்னேன்
மொழியை ஆள்வோம்
அறிந்து பயன்படுத்துவோம்.
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை
ஒருமை – நான் அல்லேன். |
பன்மை – நாம் அல்லோம். |
முன்னிலை
ஒருமை – நீ அல்லை. |
பன்மை – நீவீர் அல்லீர். |
படர்க்கை
ஆண்பால் – அவன் அல்லன். |
பெண்பால் – அவள் அல்லள். |
பலர்பால் – அவர் அல்லர். |
ஒன்றன்பால் – அஃது அன்று. |
பலவின் பால் – அவை அல்ல. |
‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
விடை : அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.
விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர்.
விடை : பகைவர் நீவீர் அல்லீர்
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
விடை : அல்ல
2. உங்களோடு வருவோர் ……………… அல்லோம்.
விடை : நாம்
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ……………..
விடை : அல்லள்
4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………….
விடை : அல்ல
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………………… அல்லை.
விடை : நீ
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக
கருமை | கடுமை | பல் |
கரும்பு | கடமை | வேல் |
நாடு | பழமை | புல் |
களை | கடம் | நாற்று |
வித்து | வேற்றுமை | நாடகம் |
வேழம் | கல் | நாம் |
கற்பு | புதுமை | வேம்பு |
கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
- தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
- தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
- ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
- அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
- தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
- தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
விடை :-
- அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
- தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
- தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
- ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
- தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
- தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
குதிரையேற்றம் – Equestrian | முதலமைச்சர் – Chief Minister |
ஆதரவு – Support | தலைமைப்பண்பு – Leadership |
கதாநாயகன் – The Hero | வெற்றி – Victory |
வரி – Tax | சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly |