பாடம் 8.6 திருக்குறள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 8.6 – “திருக்குறள் ” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆண்மையின் கூர்மை ………………
- வறியவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- நண்பனுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்
விடை : பகைவருக்கு உதவுதல்
2. வறுமை வந்த காலத்தில் ………………… குறையாமல் வாழ வேண்டும்.
- இன்பம்
- தூக்கம்
- ஊக்கம்
- ஏக்கம்
விடை : ஊக்கம்
3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
- பெரிய + செல்வம்
- பெருஞ் + செல்வம்
- பெரு + செல்வம்
- பெருமை + செல்வம்
விடை : பெருமை + செல்வம்
4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
- ஊர் + ஆண்மை
- ஊராண் + மை
- ஊ + ஆண்மை
- ஊரு + ஆண்மை
விடை : ஊர் + ஆண்மை
5. ‘திரிந்து + அற்று’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
- திரிந்ததுஅற்று
- திரிந்தற்று
- திரிந்துற்று
- திரிவுற்று
விடை : திரிந்தற்று
II. பொருத்துக.
1. இன்பம் தருவது | அ. நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் |
2. நட்பு என்பது | ஆ. குன்றிமணியளவு தவறு |
3. பெருமையை அழிப்பது | இ. செல்வம் மிகுந்த காலம் |
4. பணிவு கொள்ளும் காலம் | ஈ. சிரித்து மகிழ மட்டுமன்று |
5. பயனின்றி அழிவது | உ. பண்புடையவர் நட்பு |
விடை :- 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
குறு வினா
1. எது பெருமையைத் தரும்?
காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறி வைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.
2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?
துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.
3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?
பண்பு உடைய சான்றோர்களால் இவ்வுலகம் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது
4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று;
- நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
கூடுதல் வினாக்கள்
சிறு வினா
1. எதனை ஆண்மை என்று கூறுவர்?
பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர்.
2. ஆண்மையின் கூர்மை என்றால் என்ன?
பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
3. நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது போலப் இன்பம் தருவது எது?
நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
4. செல்வம் மிகுந்த காலத்திலும், வறுமை வந்த காலத்திலும் எவ்வாறு வாழவேண்டும்?
செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.
5. நற்பண்பு இல்லாதவன் பற்றி திருக்குறள் கூறுவதென்ன?
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.
6. எதனால் பெருமை அழிந்துவிடும் என திருக்குறள் கூறுகிறது?
மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்துவிடும்
குறு வினா
1. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. – இப்பாடலின் பயின்று வரும் அணி எது? விளக்கம் தருக
இப்பாடலின் பயின்று வரும் அணி : பிறிது மொழிதல் அணி
இலக்கணம்:-
உவமை மட்டும் பொருளை பெற வைப்பது பிறது மொழிதல் அணி ஆகும்.
விளக்கம்:-
மேலே குறிபிப்பிடப்பட்டுள்ள திருக்குறளில் உள்ள உவமை, “விடா முயற்சியே பெருமை தரும்” என்னும் பொருளை பெற வைப்பதால் பிறது மொழிதல் அணி ஆயிற்று
2. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. – இப்பாடலின் பயின்று வரும் அணி எது?
இப்பாடலின் பயின்று வரும் அணி
உவமையணி
3. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று. – இப்பாடலின் பயின்று வரும் அணி எது?
இப்பாடலின் பயின்று வரும் அணி
உவமையணி