Class 8th Tamil Book Solution for CBSE | Lesson 9.1 – உயிர்க்குணங்கள்

 பாடம் 9.1 உயிர்க்குணங்கள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 8 Tamil Chapter 9.1 – “உயிர்க்குணங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நிறை – மேன்மை
  • அழுக்காறு – பொறாமை
  • பொறை – பொறுமை
  • மதம் – கொள்கை
  • பொச்சாப்பு – சோர்வு
  • இகல் – பகை
  • மையல் – விருப்பம்
  • மன்னும் – நிலைபெற்ற
  • ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

பாடலின் பொருள்

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை இவ்வுலகில் நிலைபெற்ற மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும். இவற்றையுடைய மனித குலத்தில் பிறந்த பெண்ணே! நற்பண்புகள் எவையென அறிவுறுத்த இறைவனின் திருக்குமாரன் வந்த பின்னும் நீ உறங்கலாமா? உண்மையை உணர, புன்னகை பூத்து நீ புறப்படுவாயாக!

தெரிந்து கொள்வோம் – பாவை நூல்கள்

  • மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.
  • திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும். ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.
  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும். இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

நூல் வெளி

  • இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு ……………….. கொள்ளக்கூடாது.

  1. உவகை
  2. நிறை
  3. அழுக்காறு
  4. இன்பம்

விடை : அழுக்காறு

2. நாம் நீக்க வேண்டியவற்றுள் ஒன்று ………………..

  1. பொச்சாப்பு
  2. துணிவு
  3. மானம்
  4. எளிமை

விடை : பொச்சாப்பு

3. இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………..

  1. இன்பம் + துன்பு
  2. இன்பம் + துன்பம்
  3. இன்ப + அன்பம்
  4. இன்ப + அன்பு

விடை : இன்பம் + துன்பம்

4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….

  1. குணங்கள்எல்லாம்
  2. குணமெல்லாம்
  3. குணங்களில்லாம்
  4. குணங்களெல்லாம்

விடை : குணங்களெல்லாம்

பொருத்துக

1. நிறைஅ. பொறுமை
2. பொறைஆ. விருப்பம்
3. மதம்இ. மேன்மை
4. மையல்ஈ. கொள்க
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

அறிவுகருணைஆசை
அச்சம்அன்புஇரக்கம்
சினம்நாணம்மேன்மை
பொறாமைஎளிமைநினைவு
துணிவுஇன்பம்துன்பம்
பொறுமைகொள்கையைப் பின்பற்றுதல்சோர்வு
மானம்அறம்வெறுப்பு
மகிழ்ச்சிஊக்கம்விருப்பம்
வெற்றிபகைஇளமை
முதுமைமறதிஆராய்ந்து தெளிதல்
ஆகியன மனிதர்களின் பொது இயல்புகள் ஆகும்

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

அறிவுகருணைஅன்பு
இரக்கம்மேன்மைஎளிமை
பொறுமைஅறம்வெற்றி

கொள்கையைப் பின்பற்றுதல் ஆகியனவாகும்

சிறு வினா

மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

அறிவுகருணை
அச்சம்அன்பு
சினம்நாணம்
பொறாமைஎளிமை
துணிவுஇன்பம்
பொறுமைகொள்கையைப் பின்பற்றுதல்
மானம்அறம்
மகிழ்ச்சிஊக்கம்
வெற்றிபகை
முதுமைமறதி
ஆசைசோர்வு
இரக்கம்வெறுப்பு
மேன்மைவிருப்பம்
நினைவுஇளமை
துன்பம்ஆராய்ந்து தெளிதல்

ஆகியன மனிதர்களின் பொது இயல்புகள் ஆகும்

சிந்தனை வினா

மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளையும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

வளர்க்க வேண்டிய பண்புகள்

உண்மைசினம் கொள்ளாமை
இரக்கம் கொள்ளுதல்நேர்மை
தன்னம்பிக்கைஏழைக்கு உதவுதல்
கருணைமுயற்சி
மூத்தோரை மதித்தல்அறம்
கடிண உழைப்புஅறிவு
சான்றோர்களைப் பின்பற்றுதல்

விலக்க வேண்டிய பண்புகள்

பொய்மறதி
களவுஅச்சம்
சோம்பல்ஆசை
சினம்ஆடம்பரம்
புறம் கூறுதல்பொறாமை

கூடுதல் வினாக்கள்

பிரித்து எழுதுக

  1. அறிவருள் = அறிவு + அருள்
  2. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
  3. குறைவற = குறைவு + அற
  4. குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம்
  5. பூத்தேலோ = பூத்து + ஏலோ
  6. பெண்ணரசி = பெண் + அரசி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திருப்பாவை என்றும் நூலைப் பாடியவர் ……………

  1. சேகராசா
  2. மாணிக்கவாசகர்
  3. ஆண்டாள்
  4. இறையரசன்

விடை : ஆண்டாள்

2. திருவெம்பாவை நூலை இயற்றியவர் ______________

  1. சேகராசா
  2. மாணிக்கவாசகர்
  3. ஆண்டாள்
  4. இறையரசன்

விடை : மாணிக்கவாசகர்

3. பெண்ணரசி என்னும் சொல்லை பிரித்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..

  1. பெண் + அரசி
  2. பெண்மை + அரசி
  3. பெண்ண + அரசி
  4. பெண் + ணரசி

விடை : பெண் + அரசி

4. பொறாமை என்னும் பொருள் தரும் சொல் ………………..

  1. அழுக்காறு
  2. மதம்
  3. கல்
  4. நிறை

விடை : அழுக்காறு

5. “இகல்” என்னும் சொல்லின் பொருள் ………………..

  1. பொறாமை
  2. கொள்கை
  3. நிலைபெற்ற
  4. பகை

விடை : பகை

சிறு வினா

1. பாவை நூல் யாவை?

திருப்பாவை. திருவெம்பாவை. கன்னிப்பாவை

2. பாவை நோன்பு என்றால் என்ன?

மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.

3. திருப்பாவை – பற்றிக் குறிப்பிடுக.

  • திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும்.
  • ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.

4. திருவெம்பாவை – பற்றிக் குறிப்பிடுக

  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருப்பாவை ஆகும்.
  • இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

5. எந்நூலைத் தழுவித் கன்னிப்பாவை நூலை இறையரசன் எழுதினார்?

திருப்பாவை தழுவித் கன்னிப்பாவை நூலை இறையரசன் எழுதினார்?

6. கன்னிப்பாவை நூலை எழுதியவர் யார்?

கன்னிப்பாவை நூலை எழுதியவர் இறையரசன்

7. இறையரசன் – குறிப்பு வரைக

  • இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்
  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: