பாடம் 1.1 தமிழ்விடு தூது
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 1.1 – “தமிழ்விடு தூது” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
நூல்வெளி
- தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒன்று.
- இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தில் ஒன்றைத் தூது விடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவதாகும்.
- தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
- இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
- தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.
- 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
- இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
சொல்லும் பொருளும்
- குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
- மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
- சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
இலக்கணக்குறிப்பு
- முத்திக்கனி – உருவகம்
- தெள்ளமுது – பணபுத்தொகை
- சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- நா – ஓரெழுத்து ஒரு மொழி
- செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
1. கொள்வார் – கொள் + வ் +ஆர்
- கொள் – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ
- உணர் – பகுதி
- த் – சந்தி
- த் – ந் ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. தமிழ் விடு தூது _______ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
- தொடர்நிலைச் செய்யுள்
- புதுக்கவிதை
- சிற்றிலக்கியம்
- தனிப்பாடல்
விடை : சிற்றிலக்கியம்
2. சிந்தா மணி இலக்கணக்குறிப்பு
- வேற்றுமைத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குறு வினா
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி. அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும்.
சிறு வினா
தமிழ்விடுதூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக
- தித்திக்கும் தெளிந்த அமுதமாய் முத்திக்கனியாய் உள்ளது.
- இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்குகிறது.
- அறிவால் உண்ணப்படும் தேனானது.
- பாவின் திறம் அனைத்தும் கைவரப் பெற்றது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1. கலிவெண்பாவால் பாடப்பெறும் சிற்றிலக்கியம்
- பிள்ளைத்தமிழ்
- கலம்பகம்
- மாலை
- தூது
விடை : மாலை
2. தமிழ்விடும் தூதில் தூது விடும் பொருட்கள் _____
- 12
- 10
- 11
- 9
விடை : 10
3. உ.வே.சா. தமிழ் விடு தூது நூலைப் பதுப்பித்த ஆண்டு
- 1928
- 1930
- 1932
- 1934
விடை : 1930
4. தமிழ் விடு தூது நூலில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
- 260
- 258
- 250
- 268
விடை : 268
5. தூது ________ வகைகளுள் ஒன்று
- பேரிலக்கிய
- சிற்றிலக்கிய
- காப்பிய இலக்கிய
- பக்தி இலக்கிய
விடை : சிற்றிலக்கிய
பொருத்துக
1. முத்திக்கனி | பண்புத்தொகை |
2. தெள்ளமுது | ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் |
3. சிந்தா மணி | உருவகம் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
குறு வினா
1. தூது இலக்கியத்தின் வேறு பெயர்கள் யாவை?
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
2. தூது இலக்கியம் குறிப்பு வரைக
தலைவன் மீது அன்பு கொண்ட தலைவி ஒருத்தி, தலைவனிடம் தூது அனுப்பி மாலை வாங்கி வருமாறு அன்னம் முதலிய 10 பொருள்களில் ஏதேனும் ஒன்றினை தூது அனுப்புவது தூது இலக்கியம் ஆகும். இது கலி வெண்பாவால் பாடப்படும்.
3. மூவகைப் பாவினங்கள் எவை?
துறை, தாழிசை, விருத்தம்
சிறு வினா
தமிழ் விடு தூது குறிப்பு வரைக
- மதுரை சொக்கநாதர் மீது கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறிவர தமிழை தூது விடுவதாக அமைந்துள்ளது.
- 268 கண்ணிகளை உடையது
- 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
- இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.