Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 1.1 – திராவிட மொழிக்குடும்பம்

 பாடம் 1.1 திராவிட மொழிக்குடும்பம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 1.1 – “திராவிட மொழிக்குடும்பம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

குறு வினா

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது.

சிறு வினா

திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

திராவிடமொழிகளின் பிரிவுகள்

தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்

தமிழின் தனித்தன்மைகள்

  • தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
  • இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
  • பிற திராவிட மொழிகளை விட தனித்த  இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்
  • பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும்.

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

மூணு – மலையாளம்மூரு – கன்னடம்
மூடு – தெலுங்குமூஜி – துளு

நெடு வினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

“தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியது என்றார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் …………………….

  1. குமரிலபட்டர்
  2. ச.அகத்தியலிங்கம்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : குமரிலபட்டர்

2. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி …………………….

  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. தெலுங்கு
  4. மலையாளர்

விடை : ஆங்கிலம்

3. பணத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் …………………….

  1. மலேசியா, சிங்கப்பூர்
  2. பர்மா, பிஜித்தீவு
  3. கயானா, மடாஸ்கர்
  4. மொரிசியஸ், இலங்கை

விடை : மொரிசியஸ், இலங்கை

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………………….. க்கும் மேற்பட்டது.

  1. 1100
  2. 1200
  3. 1300
  4. 1400

விடை : 1300

5. இந்திய மொழிக்குடும்ப வகைகள்…………………

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 4

6. ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்ட அறிஞர் ………………..

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : வில்லியம் ஜோன்ஸ்

7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ………………….

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : கால்டுவெல்

8. திராவிட மொழிகள் மொத்தம் ________ எனக் கூறுவர்

  1. 29
  2. 26
  3. 27
  4. 28

விடை : 28

9. 18-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் …………………. மொழியே மூலம் என்றனர்.

  1. வட
  2. தென்
  3. ஆங்கில
  4. இலத்தீன்

விடை : வட

10. மால்தோ, தோடா, கொண்டி முதலான மொழிகளை ஆய்ந்தவர் …………..

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. ஹோக்கன்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : ஹோக்கன்

11. தெலுங்கு மொழி …………………. திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

  1. வட
  2. தென்
  3. கிழக்கு
  4. நடு

விடை : நடு

12. வட திராவிட மொழிக்கு பொருந்தாத மொழியைக் கண்டறிந்து எழுதுக

  1. குருக்
  2. இருளா
  3. மால்தோ
  4. பிராகு

விடை : இருளா

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திராவிட மொழிகளுள் ………………… தமிழ்.

விடை : மூத்த மொழி

2. தழிழ் மொழியில் பழமையான இலக்கண நூல் ……………………

விடை : தொல்காப்பியம்

3. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் ……………..

விடை : லீலாதிலகம்

4. நீ என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ………….

விடை :

5. மரம் என்ற தமிழ்ச்சொல் தெலுங்கு மொழியில் ………….

விடை : மானு

6. சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் …………. எனப்படும்

விடை : அடிச்சொல்

7. குவி என்றழைக்கப்படும் நடுத்திராவிட மொழி …………….

விடை : கூவி

8. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி ……………..

விடை : மொழி

9. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் ……………… கருதப்படுகிறது.

விடை : தாய் மொழியாகக்

பொருத்துக

1. தமிழ்அ. லீலா திலகம்
2. கன்னடம்ஆ. ஆந்திர பாஷா பூஷனம்
3. தெலுங்குஇ. தொல்காப்பியம்
4. மலையாளம்ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. தமிழ்அ. பாரதம்
2. கன்னடம்ஆ. ராமசரிதம்
3. தெலுங்குஇ. சங்க இலக்கியம்
4. மலையாளம்ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பொருத்துக

1. தமிழ்அ. ஒண்ணு
2. கன்னடம்ஆ. ஒன்று
3. தெலுங்குஇ. ஒந்து
4. மலையாளம்ஈ. ஒகடி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. தமிழ்அ. மூணு
2. கன்னடம்ஆ. மூன்று
3. தெலுங்குஇ. மூரு
4. மலையாளம்ஈ. மூடு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. எத்தகைய ஆற்றல் தமிழுக்கு உண்டு?

எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

2. யார் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்?

தமிழாய்ந்த அயல்நாட்டறிஞர் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்

3. மொழிகள் எவ்வாறு உருவாகின?

மனிதஇனம் வாழ்ந்த இடஅமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின.

4. பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் எவை?

மொரிசியஸ், இலங்கை

5. அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள் யாவை?

எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

6. தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

7. தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி

8. வட திராவிட மொழிகள் யாவை?

குரூக், மால்தாே, பிராகுய் (பிராகுயி)

சிறு வினா

1. திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள் யார்?

ஸ்டென்கனோகே.வி.சுப்பையா
எல்.வி.இராமசுவாமிபரோ
எமினோகமில்
சுவலபில்ஆந்திரனோவ்
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

2. மொழிக்குடும்பங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன? அதன் பிரிவுகள் யாவை?

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு , தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டன

இந்தோ – ஆசிய மொழிகள்ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
திராவிட மொழிகள்சீன – திபெத்திய மொழிகள்

3. தென் திராவிட மொழிகள் யாவை?

தமிழ்மலையாளம்துளு
கன்னடம்குடகு (காெடகு)தாேடா
காேத்தாகாெரகாஇருளா

4. நடுத் திராவிட மொழிகள் யாவை?

தெலுங்குகூயிகூவி (குவி)
காேண்டாகாேலாமி (காெலாமி)பர்ஜி
நாய்க்கிபெங்காேமண்டா
கதபாகாேண்டிகாேயா

5. திராவிட நாகரிகம், திராவிட மொழி குறித்து கூறு

  • உலகின் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று
  • மொகஞ்சதாரா – ஹரப்பா நாகரித்திற்குப் பிறகு இது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
  • இதைத் திராவிட நாகரிகம் என்று கருதுகின்றனர்.
  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகின்றது.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment