Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 1.2 – திராவிட மொழிக்குடும்பம்

பாடம் 1.2 திராவிட மொழிக்குடும்பம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 1.2 – “திராவிட மொழிக்குடும்பம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?

  1. தமிழ்
  2. தெலுங்கு
  3. மலையாளம்
  4. கன்னடம்

விடை: மலையாளர்

குறு வினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது.

2. தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா, படகா

சிறு வினா

திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

திராவிடமொழிகளின் பிரிவுகள்

தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்

தமிழின் தனித்தன்மைகள்

  • தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
  • இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
  • பிற திராவிட மொழிகளை விட தனித்த இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்
  • பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும்.

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

மூணு – மலையாளம்மூரு – கன்னடம்
மூடு – தெலுங்குமூஜி – துளு

நெடு வினா

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

  • தொன்மையும் இலக்கண இலக்கியவளமும் உடையது தமிழ் மொழியாகும்.
  • இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
  • திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.
  • தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.
  • ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.
  • இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  • தமிழின் பல வேர்ச்சொற்களின் ஒலியன்கள் (அடிப்படை ஒலிகள்), ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.
  • அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது. எனவே பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந் துணையாக அமைந்துள்ளது.
    தமிழ் மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

  1. குமரிலபட்டர்
  2. ச.அகத்தியலிங்கம்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : குமரிலபட்டர்

2. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி

  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. தெலுங்கு
  4. மலையாளர்

விடை : ஆங்கிலம்

3. பணத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள்

  1. மலேசியா, சிங்கப்பூர்
  2. பர்மா, பிஜித்தீவு
  3. கயானா, மடாஸ்கர்
  4. மொரிசியஸ், இலங்கை

விடை : மொரிசியஸ், இலங்கை

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ______க்கும் மேற்பட்டது.

  1. 1100
  2. 1200
  3. 1300
  4. 1400

விடை : 1300

5. இந்திய மொழிக்குடும்ப வகைகள்

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 4

6. ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்ட அறிஞர்

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : வில்லியம் ஜோன்ஸ்

7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : கால்டுவெல்

8. திராவிட மொழிகள் மொத்தம் _______ எனக் கூறுவர்

  1. 29
  2. 26
  3. 27
  4. 28

விடை : 28

9. கிரேக்க மொழியுடன் தமிழ்மொழியாளரின் உறவு தொடங்குவதற்கு முன்னரே, தமிழ்மொழி செம்மொழி தகுதியை அடைந்துவிட்டது என்றவர்

  1. கில்பர்ட் சிலேட்டர்
  2. வின்சுலோ
  3. பியரி மெய்லி
  4. ஆந்திரனோவ்

விடை : கில்பர்ட் சிலேட்டர்

10. மால்தோ, தோடா, கொண்டி முதலான மொழிகளை ஆய்ந்தவர்

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. ஹோக்கன்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : ஹோக்கன்

11. தெலுங்கு மொழி _______ திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

  1. வட
  2. தென்
  3. கிழக்கு
  4. நடு

விடை : நடு

12. வட திராவிட மொழிக்கு பொருந்தாத மொழியைக் கண்டறிந்து எழுதுக

  1. குருக்
  2. இருளா
  3. மால்தோ
  4. பிராகு

விடை : இருளா

13. லீலா திலகம் எழுதப்பட்ட நூற்றாண்டு

  1. 12
  2. 13
  3. 14
  4. 15

விடை : 15

14. உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமா என்ற பாடல் வரிகளை எழுதியவர்

  1. பெரியார்
  2. அண்ணா
  3. அயோத்திதாசர்
  4. கருணாநிதி

விடை : கருணாநிதி

15. 2010-ல் செம்மொழி மாநாட்டினை நடத்தியவர்

  1. ஜெயலலிதா
  2. கருணாநிதி
  3. எம்.ஜி.ஆர்
  4. அண்ணா

விடை : கருணாநிதி

16. தமிழ்மொழி கிரேக்க மொழியை விடச் செறிவானதென்றும், இலத்தீன் மொழியை விட மேன்மையானது என்றும் ஆங்கிலம் மற்றும் செருமன் மொழியைவிட ஆற்றல் வாய்ந்தது என்று குறிப்பிட்டவர்

  1. கில்பர்ட் சிலேட்டர்
  2. வின்சுலோ
  3. பியரி மெய்லி
  4. ஆந்திரனோவ்

விடை : வின்சுலோ

17. செம்மொழித் தமிழின் சங்கப் பாடல்கள், கிரேக்க மொழியின் நுட்பமான கவிதைத் தொகுதிகளுக்கு அறைகூவலாக விளங்குகின்றன என்று கூறியவர்

  1. ஆந்திரனோவ்
  2. கில்பர்ட் சிலேட்டர்
  3. வின்சுலோ
  4. பியரி மெய்லி

விடை : பியரி மெய்லி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திராவிட மொழிகளுள் _______ தமிழ்.

விடை : மூத்த மொழி

2. தழிழ் மொழியில் பழமையான இலக்கண நூல் _______

விடை : தொல்காப்பியம்

3. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் _______

விடை : லீலாதிலகம்

4. நீ என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் _______

விடை :

5. மரம் என்ற தமிழ்ச்சொல் தெலுங்கு மொழியில் _______

விடை : மானு

6. சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் _______ எனப்படும்

விடை : அடிச்சொல்

7. குவி என்றழைக்கப்படும் நடுத்திராவிட மொழி _______

விடை : கூவி

8. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி _______

விடை : மொழி

9. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் _______ கருதப்படுகிறது.

விடை : தாய் மொழியாகக்

பொருத்துக

1. தமிழ்அ. லீலா திலகம்
2. கன்னடம்ஆ. ஆந்திர பாஷா பூஷனம்
3. தெலுங்குஇ. தொல்காப்பியம்
4. மலையாளம்ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. தமிழ்அ. பாரதம்
2. கன்னடம்ஆ. ராமசரிதம்
3. தெலுங்குஇ. சங்க இலக்கியம்
4. மலையாளம்ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பொருத்துக

1. தமிழ்அ. ஒண்ணு
2. கன்னடம்ஆ. ஒன்று
3. தெலுங்குஇ. ஒந்து
4. மலையாளம்ஈ. ஒகடி
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. தமிழ்அ. மூணு
2. கன்னடம்ஆ. மூன்று
3. தெலுங்குஇ. மூரு
4. மலையாளம்ஈ. மூடு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. எத்தகைய ஆற்றல் தமிழுக்கு உண்டு?

எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

2. யார் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்?

தமிழாய்ந்த அயல்நாட்டறிஞர் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்

3. மொழிகள் எவ்வாறு உருவாகின?

மனிதஇனம் வாழ்ந்த இடஅமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின.

4. பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் எவை?

மொரிசியஸ், இலங்கை

5. அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள் யாவை?

எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

6. தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

7. தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி

8. வட திராவிட மொழிகள் யாவை?

குரூக், மால்தாே, பிராகுய் (பிராகுயி)

சிறு வினா

1. திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள் யார்?

ஸ்டென்கனோகே.வி.சுப்பையா
எல்.வி.இராமசுவாமிபரோ
எமினோகமில்
சுவலபில்ஆந்திரனோவ்
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

2. மொழிக்குடும்பங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன? அதன் பிரிவுகள் யாவை?

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு , தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டன

இந்தோ – ஆசிய மொழிகள்ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
திராவிட மொழிகள்சீன – திபெத்திய மொழிகள்

3. தென் திராவிட மொழிகள் யாவை?

தமிழ்காேத்தா
மலையாளம்தாேடா
கன்னடம்காெரகா
குடகு (காெடகு)இருளா
துளுபடகா (படகு)

4. நடுத் திராவிட மொழிகள் யாவை?

தெலுங்குகூயிகூவி (குவி)
காேண்டாகாேலாமி (காெலாமி)பர்ஜி
நாய்க்கிபெங்காேமண்டா
கதபாகாேண்டிகாேயா

5. திராவிட நாகரிகம், திராவிட மொழி குறித்து கூறு

  • உலகின் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று
  • மொகஞ்சதாரா – ஹரப்பா நாகரித்திற்குப் பிறகு இது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
  • இதைத் திராவிட நாகரிகம் என்று கருதுகின்றனர்.
  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகின்றது.

6. கலைஞரின் படைப்புகளை எழுதுக

  • தொல்காப்பியா பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் உரை, சிலப்பதிகார நாடகம், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் என 178க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.

7. செம்மொழிக்குரிய தகுப்பாடுகள் சிலவற்ற கூறுக

  1. தொன்மை
  2. பிறமொழித் தாக்கமின்மை
  3. தூய்மை
  4. தனித்தன்மை
  5. இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு
  6. பொதுமைப் பண்பு
  7. நடுவுநிலைமை
  8. பண்பாடு, கலை பட்டறவு வெளிப்பாடு
  9. உயர்சிந்தனை
  10. கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
  11. மொழிக்கோட்பாடு

நெடு வினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

“தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியது என்றார்.

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment