Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 1.2 – தமிழாேவியம்

 பாடம் 1.2 தமிழாேவியம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 1.2 – “தமிழாேவியம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

நூல் வெளி

 • ஈரோடு தமிழன்பன் எழுதிய “தமிழோவியம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது.
 • இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில பாடலும் அப்படித்தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.
 • ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்
 • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.
 • இவரது “வணக்கம் வள்ளுவ” கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
 • “தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.
 • இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன.

இலக்கணக்குறிப்பு

 • எத்தனை எத்தனை – அடுக்குத்தொடர்
 • விட்டு விட்டு – அடுக்குத்தொடர்
 • ஏந்தி – வினையெச்சம்
 • காலமும் – முற்றுமரம்

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் – வளர் + ப் + ப் + ஆய்

 • வளர் – பகுதி
 • ப் – சந்தி
 • ப் – எதிர்கால இடைநிலை
 • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

 1. முரண், எதுகை, இரட்டைத் தொடை
 2. இயைபு, அளபெடை, செந்தொடை
 3. எதுகை, மோனை, இயைபு
 4. மோனை, முரண், அந்தாதி

விடை : எதுகை, மோனை, இயைபு

குறு வினா

1. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிரலோய் இருப்பதும் தமிழே!

என்ற அடி  என்னைக் கவர்ந்த அடிகளாகும். பழைமையான மொழியாக இருந்தாலும், காலம் கடந்து நிற்கும் மொழியாகும் என்பதை இத் தொடர் வழி அறியலாம்.

2. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் உணர்த்துவன யாவை?

இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள்  அகப்பொருள், புறபொருள் ஆகியவற்றை உணர்த்துகின்றன.

சிறு வினா

1. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

சங்க இலக்கியத்தில் எண்ணற்ற தமிழ்ச்சொற்கள் காலத்திற்கேற்றப்படி புதுபித்துக் கொள்ளும் வகையில் உள்ளன.

மேலும், ” கடி சொல் இல்லைக் காலத்துப்படினே” என்ற தொல்காப்பிய நூற்பா வரிகள் புதிய சொல்லுருவாக்கத்திற்கு வழி செய்வதாலும் காலந்தோறும் தமிழ்மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கின்றது.

2. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

 • தமிழில் உள்ள அறிவியல் செய்திகளை மேலும் வெளிக் கொணர்வோம்
 • கன்னித் தமிழ் மாறாது கண்ணித் தமிழ் ஆக்குவோம்.
 • அயல்மொழி மோகம் கொண்டு திரிவோரை அன்னைத் தமிழ் மோகம் கொள்ள வைப்போம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் எனக் கூறும் நூல் ……………

 1. வணக்கம் வள்ளுவ
 2. பிங்கல நிகண்டு
 3. தமிழோவியம்
 4. தமிழன்பன் கவிதைகள்

விடை : பிங்கல நிகண்டு

2. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதது எங்கும் காணோம் என்று பாடியவர் ……………

 1. சுரதா
 2. பாரதியார்
 3. சுப்புரத்தினம்
 4. காளமேகம்

விடை : பாரதியார்

3. காலம் பிறக்கும் முன் பிறந்தது எது?

 1. தமிழ்
 2. உருது
 3. சமஸ்கிருதம்
 4. மலையாளம்

விடை : தமிழ்

4. சென்றியு, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதைகளைத் தந்தவர் ……………

 1. சுரதா
 2. ஈரோடு தமிழன்பன்
 3. சுப்புரத்தினம்
 4. காளமேகம்

விடை : ஈரோடு தமிழன்பன்

5. உலகத் தாய்மொழி நாள் _____________

 1. மார்ச் 21
 2. ஏப்ரல் 21
 3. பிப்ரவரி 21
 4. ஜனவரி 21

விடை : பிப்ரவரி 21

6. வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது கிடைத்த ஆண்டு ………………….

 1. 2007
 2. 2005
 3. 2006
 4. 2004

விடை : 2004

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழி ………………. மொழி

விடை : தமிழ்

2. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் ……………….

விடை : தமிழ்

3. மானிட மேன்மையைச் சாதித்திட ………………. மட்டுமே போதும்.

விடை : தமிழ்

4. பல சமயங்களையும் ஏந்தி வளர்த்தால் தமிழைத் ……………….. எனலாம்

விடை : தாய்

5. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று …………………………. பாடினார்

விடை : பாரதியார்

6. புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்பாய் என்று கூறியவர் …………….

விடை : ஈரோடு தமிழன்பன்

சிறு வினா

1. உலகத்தாய்மொழி நாள் எது?

பிப்ரவரி 21

2. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?

இலங்கை, சிங்கப்பூர்

3. மானிட மேன்மையைச் சாதித்திட எதன் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்?

மானிட மேன்மையைச் சாதித்திட திருக்குறள் வழி, ஓதி நடக்க வேண்டும் என்று ஈரோடு தமிழன்பன் கூறுகின்றார்?

குறு வினா

1. ஈரோடு தமிழன்பன் குறிப்பு வரைக

 • சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்
 • ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.
 • 2004-ல் அவரின் வணக்கம் வள்ளுவ நூல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.
 • தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.

2. தமிழோவியம் கவிதையில் கவிஞர் சுட்டும் கருத்துகளை எழுதுக

 • காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழ், எந்தக் காலத்திலும் நிலையாய் இருப்பது தமிழ் மொழி ஆகும்
 • இலக்கியங்களும், இலக்கணங்களும் இணையில்லாத காப்பியத் தோட்டங்கள். அவர மனதில் ஊர்வலம் நடத்தும்.
 • இருட்டைப் போக்கும் விளக்காய், உயர்வு தரும் குறள் வழி நடந்தால் போதும்
 • பல சமயங்களை வளர்த்த தாயானவள் தமிழ்
 • புதிய சிந்தைனயைச் சித்தர் நெறிகள் கூறும்.
 • விரலில் இல்லை, வீணையில் உள்ளது இசை என்று கூறுவார்போல குறை சொல்லாமல் தமிழ் வளர்ப்போம்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment