Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 2.2 – பட்ட மரம்

 பாடம் 2.2 பட்ட மரம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 2.2 – “பட்ட மரம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • குந்த – உட்கார
  • கந்தம் – மணம்
  • மிசை – மேல்
  • விசனம் – கவலை
  • எழில் – அழகு
  • துயர் – துன்பம்

இலக்கணக்குறிப்பு

  • வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சம்
  • மூடுபனி, ஆடுகிளை – வினைத்தொகை
  • வெறுங்கனவு – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. விரித்த = விரி + த் + த் +அ

  • விரி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரச்ச விகுதி

2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ

  • குமை – பகுதி
  • த் – சந்தி
  • த்-ந் ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • கவிஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

பலவுள் தெரிக.

1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?

  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை

விடை : கீழே

சிறு வினா

பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.
  • இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருந்தியது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர் ………………

  1. தமிழ் ஒளி
  2. தமிழன்பன்
  3. சேக்கிழார்
  4. திருவள்ளுவர்

விடை : தமிழ் ஒளி

2. ‘பட்டமரம்’ கவிதை இடம் பெறும் நூல்  ___________

  1. நிலைபெற்ற சிலை
  2. வீராயி
  3. தமிழ் ஒளியின் கவிதைகள்
  4. மாதவி

விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்

3. குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்த இலை – இவ்வடியில் “மணம்” என்னும் பொருள் தரும் சொல் எது?

  1. குந்த
  2. கந்தம்
  3. கூரை
  4. விரித்த

விடை : கந்தம்

3. குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்த இலை – இவ்வடியில் உள்ள அடிஎதுகையைக்  கண்டறிக?

  1. குந்த – கூரை
  2. குந்த – கந்த
  3. மலர் – நிழல்
  4. நிழல் – விரித்த

விடை : குந்த – கந்த

பொருத்துக

1. குந்தஅ. மணம்
2. கந்தம்ஆ. உட்கார
3. மிசைஇ. கவலை
4. விசனம்ஈ. மேல்
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. நம் முன்னோரின் வாழ்க்கை எதனோடு இயைந்தது?

நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.

2. நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் போற்றி காத்தனர்?

நம் முன்னோர்கள் மரம், செடி, கொடிகளையும் பாேற்றிக் காத்தனர்.

3. எது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது?

மரம் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது.

4. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் எது?

பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் “தமிழ் ஒளியின் கவிதைகள்”

5. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் யார்?

பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் “தமிழ் ஒளி (விஜயரங்கம்)”

6. மரம் எதைப்போல் எய்தி உழன்றது?

காலமாகிய பயுல் தாக்கம்போது அழுது கை நீட்டிக் கதறும் மனிதன் போல மரம் உழன்றது.

7. மரங்கள் இல்லை என்றால் நமக்கு எவை கிடைக்காமல் போய்விடும்?

மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும்.

 குறு வினா

கவிஞர் தமிழ் ஒளி – குறிப்பு வரைக

  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • வாழ்ந்த காலம் : 1924–1965
  • இவர் புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுகககாகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment