பாடம் 2.3 புறநானூறு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 2.3 – “புறநானூறு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- யாக்கை – உடம்பு
- புணரியோர் – தந்தவர்
- புன்புலம் – புல்லிய நிலம்
- தாட்கு – முயற்சி, ஆளுமை
- தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்
இலக்கணக்குறிப்பு
- மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகை
- நிறுத்தல் – தொழிற்பெயர்
- அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
- நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மை
- அடுபோர் – வினைத்தொகை
- கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
நிறுத்தல் – நிறு + த் + தல்
- நிறு – பகுதி
- த் – சந்தி
- அன் – சாரியை
- தல் – தொழில் பெயர் விகுதி
காெடுத்தோர் – காெடு +த் + த் + ஓர்
- காெடு – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி
நூல் வெளி
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
- இது பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
- இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
குடபுலவியனார்
- பழஞ்செந்தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளுள் குட நாடும் ஒன்று. இது குடபுலம் எனவும் வழங்கப்பெறும்.
- குட நாட்டில் பிறந்ததால், குடபுலவியனார் என இப்புலவர் அழைக்கப்படுகிறார்.
- குடபுலவியனார் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவை இரண்டும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றிப் பாடப்பட்டவை.
- அவற்றுள் ஒன்று, அவன் பேராண்மையினைப் பாராட்டுவதோடு, புலவருடைய போர்க்களம்பாடும் திறனையும் புலப்படுத்துகிறது.
- மேலும் அரசனுக்கு அரிய அறவுரையினைச் சொல்வதாகவும் உழவின் சிறப்பையும் நீர் நிலைகளின் தேவையையும் உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.
சிறுபஞ்சமூலம்
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து உளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான் ஏகும் சொர்க்கத்து இனிது |
புறநானூற்றுத் தொடர்
அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! ( புறம் -18) ஆ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189) இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம்-192) ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! (புறம் – 312) உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! (புறம்-183) |
பொதுவியல் திணை
வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன் உள்ள திணைகளில் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
முதுமொழிக்காஞ்சித் துறை
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையை கூறுதல்
பகுபத உறுப்பிலக்கணம்
பலவுள் தெரிக.
மல்லல் மூதூர் வயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
- மறுமை
- பூவரசு மரம்
- வளம்
- பெரிய
விடை : வளம்
சிறுவினா
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே குறிப்பு தருக.
நீர் இல்லாமல் அமையாத உடல் உணவால் அமையும். உணவே முதன்மையானக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.
குறுவினா
நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
- வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடையவோ, உலகு முழுவதையும் வெல்லவோ, நிலையான புகழைப் பெற விரும்பினால் நான் சொல்வதைக் கேள்!
- நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமையும். உணவையே முதன்மையாக உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
- உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
- தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனுக்கு சிறிதும் உதவாது. அதனால், நான் கூறியதை விரைவாகக் கடைப்பிடிப்பாயாக!
- நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
- நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும்
பெறுவர்.
- இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலம்
- பெரியபுராணம்
- தமிழ்விடுதூது
- தமிழோவியம்
- புறநானூறு
விடை : புறநானூறு
2. நீரின்று அமையா யாக்கை என்று பாடியவர்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- குடபுலவியனார்
- திருவள்ள்ளுவர்
- மணிமேகலை
விடை : குடபுலவியனார்
3. வான் உடனும் வடிநீண் மதில் எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்ட மன்னன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- திருவள்ள்ளுவர்
- குடபுலவியனார்
- மணிமேகலை
விடை : குடபுலவியனார்
4. புறநானூறு _______ நூல்களுள் ஒன்று
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- பதினென்கீழ்கணக்கு
- இவற்றில் எதுவுமில்லை
விடை : எட்டுத்தொகை
5. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் இத்தொடரைப் பாடியவர்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- திருவள்ள்ளுவர்
- குடபுலவியனார்
- மணிமேகலை
விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்
6. குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வழங்கிய அறிவுரை
- வேளாண்மை பெருக்கு
- நீர்நிலை பெருக்குதல்
- போர் செய்யாமை
- அறம் செய்
விடை : நீர்நிலை பெருக்குதல்
7. குட நாடு ______ என்று வழங்கப்படுகிறது.
- வடபுலம்
- குடபுலம்
- தென்புலம்
- மேற்புலம்
விடை : குடபுலம்
8. குடபுலவியனார் புறநானூற்றில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை
- 1
- 3
- 2
- 4
விடை : 2
8. குடபுலவியனார் புறநானூற்றில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை
- 1
- 3
- 2
- 4
விடை : 2
கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பண்பாட்டு கருவூலமாக _______ திகழ்கிறது.
விடை : புறநானூறு
2. புறநானூறு _______ நூல்களுள் ஒன்று.
விடை : எட்டுத்தொகை
3. யாக்கை என்பதன் பொருள் _______
விடை : உடம்பு
4. _______ கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
விடை : உண்டி
5. குடபுலயனானர் அறிவுரை வழங்கிய பாண்டிய மன்னன் _______
விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்
6. உலகில் உள்ள அனைத்தையும் மிகுதியாகக் கொண்டுள்ளவன் _______
விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்
குறுவினா
1. உயிரை உருவாக்குபவர்கள் என்று நம்முன்னோர் யாரைப் போற்றினர்?
நீர்நிலைகளை உருவாக்குபவர்கள் நம்முன்னோர்கள் உயிரை உருவாக்குபவர்கள் என்று போற்றினர்.
2. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர் பொருள் யாது?
உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவர்
3. உணவு எனப்படுவது யாது?
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.
4. எவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்?
இயற்கை நமக்கு கொடையாக தந்திருக்கும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
5. யார் வீணாக மடிவர் என குடபுலவியனார் கூறுகிறார்?
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.
6. பொதுவியல் திணை என்றால் என்ன?
வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
7. பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன?
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்து உரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்.
8. யார் நிலைத்த புகழ் அடைவர் என்று குடபுலவியனார் கூறுகிறார்?
நிலம் குழிந்த இடங்களில் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும் நிலத்துடன் நீரைக் கூட்டியவர் மூவகை இன்பத்தையும் நிலைத்து புகழையும் அடைவர்.
9. தள்ளாதோர் இவண் தள்ளாதோரே தொடர் பொருள் விளக்கம் தருக.
குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
சிறுவினா
புறநானூறு குறிப்பு வரைக
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புற வாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது.
- பண்டைய மக்களின் புறவாழ்வைக் காட்டுகின்றது.
- பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.