பாடம் 2.5 பகுபத உறுப்பிலக்கணம்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 2.5 – “பகுபத உறுப்பிலக்கணம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பலவுள் தெரிக
பகுதி, விகுதி மட்டும் இடம் பெறும் சொல் எது
- வென்றார்
- நடந்த
- வளர்க
- பொருந்திய
விடை: வளர்க
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பொருந்தாததை தேர்க
- மண்
- உண்
- பிற
- ஊரன்
விடை: ஊரன்
2. பகுபத உறுப்புகள் _____ வகைப்படும்
- 4
- 6
- 5
- 3
விடை: 6
3. நடிகன் என்ற சொல்லின் பகுதி
- நடி
- நடு
- நடிப்பு
- நடித்தல்
விடை: நடி
4. கடைநிலை என்று எதனை அழைப்பர்
- பகுதி
- விகாரம்
- எழுத்துப்பேறு
- விகுதி
விடை: விகுதி
5. பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றம்
- சந்தி
- விகாரம்
- எழுத்துப்பேறு
- விகாரம்
விடை: விகுதி
சிறுவினா
1. சொல் என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்தோ வந்து பொருளை உணர்த்துமானால் அது சொல் எனப்படும்
2. பகுபதத்தின் வகைகள் யாவை?
பகுபதம் இருவகைப்படும் அவை
- பெயர் பகுபதம்
- வினைப் பகுபதம்
3. பகுபத உறுப்புகளினை கூறுக
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும் அவை
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
4. விகுதி எவற்றையெல்லாம் காட்டும்
விகுதியானது திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டுவதாக அமையும்
5. எழுத்துப்பேறு என்றால் என்ன?
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் ‘த்’ மட்டுமே எழுத்துப்பேறாக வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு ஆகும்.
குறுவினா
இடைநிலை என்றால் என்ன? அதன் வகைகளை கூறுக
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வருவதால் இதை இடைநிலை என்பர். இது காலம் காட்டுவதால் இதனைக் காலங்காட்டும் இடைநிலை என்றும் அழைப்பர்.
1. நிகழ்கால இடைநிலைகள்
- கிறு, கின்று, ஆநின்று என்பன நிகழ்கால இடைநிலைகள்.
2. இறந்தகால இடைநிலைகள்
- த், ட்ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள்.
3. எதிர்கால இடைநிலைகள்
- ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள்,
4. எதிர்மறை இடைநிலை
- இல், அல், ஆ என்பன எதிர்மறை இடைநிலைகள்.
5. பெயர் இடைநிலைகள்
- ஞ்,ந், வ், ச், த் என்பன பெயர் இடைநிலைகள்.
நெடுவினா
1. பகுபத உறுப்புகள் பற்றி கூறுக
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியனவாகும்.
பகுதி
- இது சொல்லின் முதலில் நிற்கும்.
- இதை முதனிலை என்றும் அழைப்பர்.
- பகுதி என்பது பகாப்பதமாக அமையும்.
- வினைச்சொல்லில் ஏவலாக அமையும்.
விகுதி
- விகுதி என்பது சொல்லின் இறுதியில் நிற்கும்.
இதனைக் கடைநிலை என்றும் அழைப்பர். - இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுவதாக அமையும்.
இடைநிலை
- பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வருவதால் இதை இடைநிலை என்பர்.
- இது காலம் காட்டுவதால் இதனைக் காலங்காட்டும் இடைநிலை என்றும் அழைப்பர்.
சந்தி
- பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்.
- பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
- சந்தியின் உறுப்புகள்: த், ப், க், ய், வ்
- இதில் ய், வ் உடம்படுமெய் சந்தி ஆகும்
சாரியை
- பகுதி, விகுதி இடைநிலைகளைச் சார்ந்து வரும்.
- பெரும்பாலும் இடைநிலைகளுக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
- சாரியை உறுப்புகள்: அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம்,தம்,நம்,நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்
விகாரம்
- விகாரம் என்பது தனி உறுப்பு அன்று.
- இது பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே ஆகும்.
2. விகுதிகளின் உறுப்புகளை அட்டவணைப்படுத்துக
ஆண்பால் வினைமுற்று விகுதி | அன், ஆன் |
பெண்பால் வினைமுற்று விகுதி | அள், ஆள் |
பலர்பால் வினைமுற்று விகுதி | அர், ஆர் |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | து, று |
பலவின்பால் வினைமுற்று விகுதி | அ, ஆ |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | என், ஏன் |
தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி | அம், ஆம், எம், ஏம், ஓம் |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | ஐ, ஆய், இ |
முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி | இர், ஈர் |
பெயரெச்ச விகுதிகள் | அ, உம் |
வினையெச்ச விகுதிகள் | உ, இ |
வியங்கோள் வினைமுற்று விகுதி | க, இய, இயர் |
தொழிற்பெயர் விகுதி | தல், அல், ஐ, கை, சி, பு |
மொழியை ஆள்வோம்!
இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்ப்பு | எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது |
பழமொழி | மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு |
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்ப்பு | சூரிய அஸ்தமனேம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான் |
பழமொழி | தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும் |
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்ப்பு | அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும் |
பழமொழி | நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை |
4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
மொழி பெயர்ப்பு | வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும். |
பழமொழி | இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும் |
பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
விடை : சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.
1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.
விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.
2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
விடை : தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.
3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.
விடை : மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்
4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
விடை : கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.
மொழியோடு விளையாடு
சொல்லுக்குள் சொல் தேடுக.
1. ஆற்றங்கரையோரம்
விடை : ஆறு, கரை, ஓரம்
2. கடையெழுவள்ளல்கள்
விடை : கடை, ஏழு, வள்ளல்கள்
3. எடுப்பார்கைப்பிள்ளை
விடை : எடு, பார், கை, பிள்ளை
4. தமிழ்விடுதூது
விடை : தமிழ், விடு, தூது
5. பாய்மரக்கப்பல்
விடை : பாய், மரம், கப்பல், கல்
6. எட்டுக்கால்பூச்சி
விடை : எட்டு, கால், பூச்சி
அகராதியில் காண்க.
1. கந்தி
விடை : கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்
2. நெடில்
விடை : நீளம், மூங்கில், நெட்டெழுத்து
3. பாலி
விடை : ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை
4. மகி
விடை : பூமி, பசு
5. கம்புள்
விடை : சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி
6. கைச்சாத்து
விடை : கையொப்பம், பொருள்பட்டி
சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.
1. அரிசி போடுகிறேன்.
- புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
- நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
2. மழை பெய்தது.
- மாலையில் மழை பெய்ததது.
- நேற்று மாலையில் மழை பெய்ததது.
- நாள்தோறும் மாலையில் மழை பெய்ததது.
- நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்ததது.
- நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்ததது.
- நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்ததது.
3. வானவில்லைப் பார்த்தேன்.
- மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
- நாள்தோறும் மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
- நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
- நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
- நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
- நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
4. குழந்தை சிரித்தது.
- தாெட்டிலில் குழந்தை சிரித்தது.
- தாெட்டிலில் அழுத குழந்தை சிரித்தது.
- அம்மாவைப் பார்த்ததும் அழுத குழந்தை சிரித்தது.
- அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.
- அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.
- அழுத குழந்தை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.
5. எறும்புகள் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகப் கல்லில் போகின்றன.
- எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள்போகின்றன.
- சர்க்கரையை நோக்கி எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
- அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.
6. படம் வரைந்தான்
- அவன் படம் வரைந்தான்.
- அவன் விலங்குகளின் படம் வரைந்தான்.
- இயற்கையைப் படம் வரைந்தான்.
- இயற்கை மரங்களை படமாக வரைந்தான்
- பறக்கும் பறவைகளை அழகாக படம் வரைந்தான்.
அகராதியில் காண்க
1. இமிழ்தல்
விடை : இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
2. இசைவு
விடை : இணக்கம், சம்மதி, பொருத்து, தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
3. துவனம்
விடை : அக்னி, நெருப்பு
4. சபலை
விடை : இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
5. துகலம்
விடை : பங்கு
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
விலங்கு | எழுதி | அகல் | கால் | அலை |
1. எண்ணெய் ஊற்றி …………… விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ……………
விடை : அகல்
2. எனக்கு ……………. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் ………………. ஐ வை.
விடை : கால்
3. கைப்பொருளைக் கடல் …………யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி ………..ந்தால் கிடைக்குமா?
விடை : அலை
4. வீட்டு …………….. ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து ……………. உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
விடை : விலங்கு
5. எழுத்தாணி கொண்டு ………….ய தமிழை, ஏவுகணையில் ………….. எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
விடை : எழுதி
ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.
குவிந்து – குவித்து | சேர்ந்து – சேர்த்து | மாறு – மாற்று |
பணிந்து – பணித்து | பொருந்து – பொருத்து |
1. விரிந்தது – விரித்தது
விடை : மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
2. குவிந்து – குவித்து
விடை : காட்டாற்று வெள்ளம் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை குவித்து வைத்தோம்
3. சேர்ந்து – சேர்த்து
விடை : காசு சேர்ந்தது; அதனால் சேர்த்து வைத்தோம்
4. பணிந்து – பணித்து
விடை : தலைவர் சொல்லுக்கு தொண்டர்கள் பணிந்து நடந்தனர்; மக்கள் பணியில் சேவை செய்யுமாறு பணித்து இருக்கிறார்
5. பொருந்து – பொருத்து
விடை : மேடைப் பேச்சுக்குப் பொருந்துமாறு, உவமைகளை பொருத்திப் பேச வேண்டும்
6. மாறு – மாற்று
விடை : கைம்மாறு எதிர்பார்க்காமல் செய்யும் வேலை அனைவரையும் உன் பக்கம் மாற்றும்
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்
- Conical Stone – குமிழிக் கல்
- Water Management – நீர் மேலாண்மை
- Irrigation Technology – பாசனத் தொழில்நுட்பம்
- Tropical Zone – வெப்ப மண்டலம்
அறிவை விரிவு செய்
- அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் – வைரமுத்து
- வாய்க்கால் மீன்கள் – வெ.இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்