Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 3.1 – ஏறு தழுவுதல்

   பாடம் 3.1 ஏறு தழுவுதல்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 3.1 – “ஏறு தழுவுதல்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பலவுள் தெரிக.

1. பொருந்தாத இணை எது?

  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

விடை : திருவாரூர் – கரிக்கையூர்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதைஆ) தமிழ் அகராதிஇ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ

விடை : ஆ – அ – இ

குறு வினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

ஜல்லிக்கட்டு, மாடு பிடித்தல், மஞ்சு விரட்டு

2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

ஏறுகோள், எருதுகட்டி

3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  • சேலம்
  • நீலகிரி – கரிக்கையூர்
  • மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
  • தேனி – சித்திரக்கல் புடவு
  • சிந்துசமவெளி அகழாய்வு

 சிறு வினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.

 நெடு வினா

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க

  • காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக்  ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது.
  • காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.
  • அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
  • காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.
  • வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
  • தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.
  • நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.
  • எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
  • அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

  • ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
  • நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
  • மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
  • நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கீழ்கண்டவற்றுள் இலக்கியம் சாராத “ஏறுதழுவுதல்” பற்றிக் கூறும் நூலைக் கண்டறிக

  1. கலித்தொகை
  2. புறப்பொருள் வெண்பாமாலை
  3. கண்ணுடையம்மன் பள்ளு
  4. சிலப்பதிகாரம்

விடை : புறப்பொருள் வெண்பாமாலை

2. மருதநில போர் வீரர்களைப் போன்றிருந்தது எது?

  1. ஓவியங்கள்
  2. நடுகல்
  3. காளைகள்
  4. யானைகள்

விடை : காளைகள்

3. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. கலித்தொகை – காளை
  2. சிலப்பதிகாரம் – ஏறுகோள்
  3. புறப்பொருள் வெண்பாமாலை- ஏறுகோள்
  4. கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

விடை : கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை …………….

விடை : மாடுகள்

2. தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு …………….

விடை : ஏறுதழுவுதல்

3. பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது …………..

விடை :  தமிழர் வரலாறு.

4. கலித்தொகையி்ல் ……………….. கலியில் ஏறுதழுவுதல் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன

விடை : முல்லை

5. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான ஏறு தழுவுதல் ………………ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது.

விடை : 2000

6. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் ………………….

விடை : கண்ணுடையம்மன் பள்ளு

7. காளைச்சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு ………….

விடை : ஸ்பெயின்

8. சல்லிகட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று …………………… என அழைக்ககப்படுகின்றது.

விடை : ஜல்லிக் கட்டு

9. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற ……………………

விடை : வளையத்தினை

சிறு வினா

1. எவை எருதுகள் என்று அழைக்கப்பட்டன?

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எருதுகள் என்று அழைக்கப்பட்டன

2. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் வேறு சில பெயர்கள் யாவை?

ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள்

3. ஏறுதழுவுதல் பற்றி எடுத்துரைக்கும் இலக்கியங்கள் எவை?

கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, கண்ணுடையம்மன் பள்ளு

4. மாட்டுப் பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது?

தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல்.

5. காளைப்போர் இடம் பெற்றுள்ள் வெளிநாட்டுச் சித்திரங்கள் யாவை?

  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்கள்
  • கிரிட் தீவில் உள்ள கினோஸஸ் என்னுமிடத்திலுள்ள அரண்மனைச் சிற்பங்கள்

குறு வினா

1. ஏறு தழுவுதல் வேறு பெயர்கள் யாவை?

மாடு பிடித்தல்மாடு அணைதல்
மாடு விடுதல்மஞ்சு விரட்டு
சல்லிக்கட்டுஎருது கட்டி
காளை விரட்டுஏறு விடுதல்
வேலி மஞ்சு விரட்டு

2. ஜல்லிக்கட்டு – பெயர்க்காரணம் எழுதுக

  • சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
  • சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
  • சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்ததாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

3. மாட்டுப்பொங்கல் கொண்டாடும் விதத்தினை விளக்குக

  • மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர்.
  • கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர்.
  • பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

4. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் காளை பங்கு பற்றி விவரிக்க

  • சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
  • சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: