பாடம் 3.5 தொடர் இலக்கணம், ஆகுபெயர்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 3.5 – “தொடர் இலக்கணம், ஆகுபெயர்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் மதிப்பீட்டு வினா
குறுவினா
காலவாகுபெயர் குறிப்பு தருக
கார் அறுத்தான்
- கார் என்னும் காலப்பெயர் காலத்தைக் குறிக்காது அக்காலத்தில் விளையும் பயிருக்குப் பெயராகி வந்தது எனவே இது காலவாகு பெயராகும்.
சிறுவினா
அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக.
எண்ணலளவை ஆகுபெயர்:
- ஒன்று பெற்றால் ஒளிமயம்.
ஒன்று என்னும் எண்ணுப் பெயர் அவ்வெண்ணைக் குறிக்காமல், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்ததால் இது எண்ணலளவை ஆகுபெயர் ஆகியது.
எடுத்தலளவை ஆகுபெயர் :
- இரண்டு கிலோ கொடு.
இரண்டு கிலோ – நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது. அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளதால் எடுத்தலளவை ஆகுபெயராயிற்று.
முகத்தலளவை ஆகுபெயர்:
- அரை லிட்டர் வாங்கு.
முகந்து அளக்கும் அரை லிட்டர் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காது, அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
நீட்டலளவை ஆகுபெயர்:
- ஐந்து மீட்டர் வெட்டினான்.
நீட்டி அளக்கும் ஐந்து மீட்டர் என்னும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவையைக் குறிக்காமல், அவ்வளவையுள்ள பொருளுக்குப் பெயராகி வந்துள்ளது.
கூடுதல் வினாக்கள்
1. ஆகுபெயர் என்றால் என்ன?
ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
ஆகுபெயரை தொல்காப்பியர் ஏழாகவும், நன்னூலார் பதினைந்தாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.
3. பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) குறிப்பு வரைக.
ஒரு முழுப்பொருளின் பெயர், அதனைச் சுட்டாது அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- முல்லையைத் தொடுத்தாள்
முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.
4. இடவாகு பெயர் குறிப்பு வரைக.
இடப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.
சான்று :- வகுப்பறை சிரித்தது
வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.
5. காலவாகு பெயர் குறிப்பு வரைக.
காலப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
சான்று :- கார் அறுத்தான்
கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.
6. சினையாகு பெயர் குறிப்பு வரைக.
சினைப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
சான்று :- மருக்கொழுந்து நட்டான்
மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.
7. கருவியாகு பெயர் குறிப்பு வரைக.
கருவியின் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
சான்று :- வானாெலி கேட்டு மகிழ்ந்தனர்
வானாெலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது
8. எண்ணலளவை ஆகுபெயர் குறிப்பு வரைக
எண்ணின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஒன்று பெற்றால் ஒளிமயம்
ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.
9. நீட்டலளவை ஆகுபெயர் குறிப்பு வரைக
நீட்டல் அளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.
சான்று :- ஐந்து மீட்டர் வெட்டினான்
நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
சிறுவினா
பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் விளக்குக.
பண்பாகுபெயர்
பண்புப்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும்.
சான்று :- மஞ்சள் பூசினாள்
மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.
தொழிலாகு பெயர்
தொழில்பெயர் அதனோடு தொடர்புடைய வேறு பெயருக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
சான்று :- வற்றல் தின்றான்
வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.
கற்பவை கற்றபின்…
I. ஆகுபெயரைக் கண்டறிக.
அ.
தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள் | தொழிலாகு பெயர் |
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் | கருத்தாவாகு பெயர் |
ஆ.
மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது | இடவாகு பெயர் |
நாடும் வீடும் நமது இரு கண்கள் | சினையாகு பெயர் |
இ.
கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் | தொழிலாகு பெயர் |
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் | பொருளாகு பெயர் |
ஈ.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி | எண்ணலளவையாகு பெயர் |
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். | காரியவாகு பெயர் |
உ.
ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது | தொழிலாகு பெயர் |
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா? | இடவாகு பெயர் |
ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ. மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.
விடை : மதுரையில் இரவு வணிகம் உண்டு
ஆ. இந்தியா வீரர்கள் எளிதில் வென்றனர்.
விடை : இந்தியா எளிதில் வென்றது.
இ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
விடை : நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது
ஈ. நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.
விடை : நீரின்றி உலகு இயங்காது
சிந்தனை வினா
1. தற்காலப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
தற்காலப் பேச்சு வழக்கில் ஆகுபெயர்
- பால் வந்ததா? – என்பது பால் விற்பனை செய்யும் பால்காரருக்கு ஆகி வந்தது.
- பேருந்து நிறுத்தத்தில் 12 போயிருச்சா? எனக் கேட்பது 12 எண்ணுள்ள பேருந்து ஆகி வந்தது.
தற்காலப் எழுத்து வழக்கில் ஆகுபெயர்
- “ஈரோடு தமிழ்ச்சங்கம் சார்பில் இரு நாள் தெய்வ நூல் பயிலரங்கம்” என்ற செய்தித்தாள் செய்தியில் தெய்வநூல் என்பது திருக்குறள் நூலுக்கு ஆகி வந்தது.
2. பட்டப் பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
பட்டப்பெயர்கள் ஆகுபெயராகும்
சான்று
- மகாகவி பாடினார் (பாரதி பட்டப்பெயராக ஆகி வந்தது)
- ரோஜாவின் ராஜா (நேரு பட்டப்பெயராக ஆகி வந்தது)
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க.
Conversation between two friends meeting by chance at a mall.
Aruna: Hi Vanmathi! It’s great to see you after a long time.
Vanmathi: It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?
Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?
Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie.
Aruna: Which movie?
Vanmathi: Welcome to the jungle.
Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.
இரண்டு தோழிகள் வணிக வளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்
அருணா | வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைப் பார்க்கிறேன் மகிழ்ச்சி |
வான்மதி | எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பாரத்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய். |
அருணா | நான் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ? |
வான்மதி | நான் என் தந்தையுடன் வந்தேன். இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கச் சென்றிருக்கிறார். |
அருணா | என்ன படம்? |
வான்மதி | காட்டுக்குள் வரவேற்பு |
அருணா | ஓ…. நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கப் போகிறேன். |
பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்
- நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.
2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
- திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று
பிழை நீக்குக.
பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.
விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் . மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத் திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது! “தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறை க்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள். வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதை ப்பற்றிச் சிந்தித்தாள். “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள். அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள் . |
1. டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள்
டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்)
2. பாலை இறக்கினாள்
பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள், கருவி பாலுக்கு அகி வந்தது (கருவியாகு பெயர்)
3. தலைக்கு இருநூறு
ஒவ்வொருவருகு்கும் என்பதைத் தலை என்னும் சினைப்பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்)
4. சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும்.
ஐந்து கிலோ அரிசியை குறிக்க… எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகு பெயர்)
5. தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும்.
முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்)
6. துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர்
நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியை குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்)
7. சிவசங்கரியைப் படித்து முடிக்க வேண்டும்
சிவசங்கரி நூலைக் குறிக்கும் (கருத்தாவாகு பெயர்)
மொழியை ஆள்வோம்!
பொன்மொழிகளை மொழிபெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi
விடை : ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
விடை : மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – ஜவஹர்லால் நேரு
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
விடை : அன்புக் குறைவும், தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை – அன்னைதெராசா
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
விடை : உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் – ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
விடை : வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செயவதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் – ஷிவ் கேரா
வடிவம் மாற்றுக.
பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.:
விடை : தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேலும் கீழும்
விடை : ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.
2. மேடும் பள்ளமும்
விடை : மனித மேடும் பள்ளுமும் நிறைந்தது
3. நகமும் சதையும்
விடை : நண்பர்கள் எப்போதும் நகையும் சதையும் போல இருக்கின்றனர்.
4. முதலும் முடிவும்
விடை : இறைவன் கையில் தான் முதலும் முடிவும் உள்ளது
5. கேளிக்கையும் வேடிக்கையும்
விடை : திரைப்படங்கள் கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்தது
6. கண்ணும் கருத்தும்
விடை : நம் செயலில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.
அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
விடை : காங்கேயம் இனக்காளைகள்
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கர்நாடகம்
- கேரளா
- இலங்கை
- ஆந்திரா
விடை : இலங்கை
3. பிரித்து எழுதுக:
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
- கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
- கண்டெடுக்க + பட்டு + உள்ளன
- கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன இது எவ்வகைத் தொடர்?
- வினாத்தொடர்
- கட்டளைத்தொடர்
- செய்தித்தொடர்
- உணர்ச்சித்தொடர்
விடை : செய்தித்தொடர்
மொழியோடு விளையாடு
பொருள் எழுதித் தொடரமைக்க.
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
அ) அலை – அழை
அலை | கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது. |
அழை | வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன் |
ஆ) கரை – கறை
கரை | ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன |
கறை | படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது |
இ) குளவி – குழவி
குளவி | பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது |
குழவி | குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்) |
ஈ) வாளை – வாழை
வாளை | மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது. |
வாழை | வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம். |
உ) பரவை – பறவை
பரவை | பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை. |
பறவை | பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன. |
ஊ) மரை – மறை
மரை | தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும். |
மறை | வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன. |
அகராதியில் காண்க.
அ) இயவை
- வழி, மூங்கில், அரிசி, துவரை, தோரை நெல், காடு
ஆ) சந்தப்பேழை
- சந்தனப் பெட்டி
இ) சிட்டம்
- நூல் சிட்டம், உரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து
ஈ) தகழ்வு
- அகழ், அறிவு. உண்கலம்
உ) பௌரி
- பெரும் பண் வகை
பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக..
கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.
காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.
- வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்
- மலைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக்குறைவுடன் காலை வைக்காதீர்கள்
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்
2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6)
- இந்திரவிழா
5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3)
- தவறு
7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7)
- தவளை ஓட்டம்
10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2)
- விதி
13. மா + அடி இதன் புணர்ந்த வடிவம் (3)
- மாவடி
19. கொள்ளுதல் என்பதன் முதல்நிலை திரிந்த சொல் (2)
- கோள்
வலமிருந்து இடம்
9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2)
- சிரை
11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3)
- ஆய்வு
12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5)
- சாத்தனார்
18. தனி + ஆள் சேர்த்து எழுதுக. (4)
- தனியாள்
மேலிருந்து கீழ்
1. தமிழர்களின் வீர விளையாட்டு (7)
- ஏறு தழுவுதல்
2. இவள் + ஐ சேர்ந்தால் கிடைப்பது (3)
- இவளை
3. மரத்தில் காய்கள் _______ ஆகக் காய்த்திருந்தன (4)
- திரட்சி
5. உரிச்சொற்களுள் ஒன்று (2)
- தவ
6. _______ சிறந்தது (2)
- சால
8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் (2)
- ஓரை
12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)
- சாடிகள்
15. காய் பழுத்தால் _______ (2)
- கனி
கீழிருந்து மேல்
14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3)
- வத்தி
17. யா முதல் வரும் வினாப்பெயர் (2)
- யார்
18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4)
- தக்கார்
நிற்க அதற்குத் தக
- Hero stone – நடுகல்
- Embossed sculpture – புடைப்புச் சிற்பம்
- Archaeology – தொல்லியல்
- Excavation – அகழாய்வு
- Cultural Identity – பண்பாட்டு அடையாளம்
அறிவை விரிவு செய்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்
- தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – கா.ராஜன்
- தமிழர் சால்பு – வித்தியானந்தன்