Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 4.3 – உயிர்வகை

பாடம் 4.3 உயிர்வகை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 4.3 – “உயிர்வகை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

இலக்கணக்குறிப்பு

  • உணந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

நெறிப்படுத்தினர் = நெறிப்படுத்து + இன் + அர்

  • நெறிப்படுத்து – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர் பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
  • இதன் இயற்றியவர் தொல்காப்பியர்
  • தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது.
  • இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
  • 27 இயல்களை உடையது
  • எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
  • பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
  • குறிப்பாக பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அறிவியல் அறிஞர்களும் வியந்து போற்றுகின்றன.
  • தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
– இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. காணல்

விடை : தொடுவுணர்வு

குறு வினா

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

மூவறிவுகரையான், எறும்பு
நான்கறிவுநண்டு, தும்பி
ஐந்தறிவுபறவை, விலங்கு

சிறு வினா

அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?.

  • புல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள் (தொடு உணர்வு)
  • சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள் (தொடு உணர்வு + நுகர்தல்)
  • கரையான், எறும்பு ஆகிய மூவறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல்)
  • நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல்)
  • பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல்)
  • மனிதன் ஆறறிவு உயிர்கள் (தொடு உணர்வு + சுவை + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிவு)

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ……………. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. தொல்காப்பியம்
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. ஓரறிவு உயிர்கள் ……………..

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : புல், மரம்

3. ஈரறிவு உயிர்கள் ……………..

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : சிப்பி, நத்தை

4. மூவறிவு உயிர்கள் ……………..

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : கரையான், எறும்பு

5. நான்கறிவு உயிர்கள் ……………..

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. கரையான், எறும்பு
  4. நண்டு, தும்பி

விடை : நண்டு, தும்பி

6. ஐந்தறிவு உயிர்கள் ……………..

  1. புல், மரம்
  2. சிப்பி, நத்தை
  3. பறவை, விலங்கு
  4. கரையான், எறும்பு

விடை : பறவை, விலங்கு

7. மனித உயிர்கள் ……………..

  1. ஓரறிவு
  2. மூவறிவு
  3. நான்கறிவு
  4. ஆறறிவு

விடை : ஆறறிவு

8. இரண்டறி வதுவே அதனாெடு நாவே
மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே – இவ்வடிகளில் அவற்றோடு என்பது எதைக் குறிக்கும்? 

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. சுவைத்தல்
  4. கானல்

விடை : சுவைத்தல்

9. மூன்றறி வதுவே அவற்றாேடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றாேடு கணணே – இவ்வடிகளில் அவற்றோடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. கானல்

விடை : நுகர்தல்

10. நான்கறி வதுவே அவற்றாேடு கணணே
ஐந்தறி வதுவே அவற்றாேடு செவியே – இவ்வடிகளில் அவற்றோடு என்பது எதைக் குறிக்கும்?

  1. நுகர்தல்
  2. தொடுவுணர்வு
  3. கேட்டல்
  4. காணல்

விடை : காணல்

குறு வினா

1. ஓரறிவு உயிர்கள் யாவை?

பல், மரம் ஆகியன ஓரறிவு உயிர்கள்

2. ஈரறிவு உயிர்கள் யாவை?

சிப்பி, நத்தை ஆகியன ஈரறிவு உயிர்கள்

3. மூவறிவு உயிர்கள் யாவை?

கரையான், எறும்பு ஆகியன மூவறிவு உயிர்கள்

4. நான்கறிவு உயிர்கள் யாவை?

நண்டு, தும்பி ஆகியன நான்கறிவு உயிர்கள்

5. ஐந்தறிவு உயிர்கள் யாவை?

பறவை, விலங்கு ஆகியன ஐந்தறிவு உயிர்கள்

6. ஆறறிவு உயிர் எது?

மனிதன்

6. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூல் எது? அதன் ஆசிரியர் யார்?

தமிழில் கிடைத்த முதல் இலக்கண தொல்காப்பியம்

அதன் ஆசிரியர் தொல்காப்பியர்

சிறு வினா

தொல்காப்பியம் சிறு குறிப்பு வரைக

  • தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
  • இதன் ஆசிரியர் தொல்காப்பியர்
  • எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது
  • 27 இயல்களை உடையது
  • எழுத்து, சொல் அதிகாரங்கள் மொழி இலக்கணங்களை விளக்குகிறது.
  • பொருள் அதிகாரம் தமிழர்களின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்குகிறது,
  • பல அறிவியல் கருத்துகளை கொண்டது.
  • பிறப்பியல் எழுத்துக்கள், பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருக்கிறது
  • தமிழர்களின் அறிவாற்றலுக்கு சிறந்த சான்று

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment