Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 4.4 – விண்ணையும் சாடுவோம்

பாடம் 4.4 விண்ணையும் சாடுவோம்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 4.4 – “விண்ணையும் சாடுவோம்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

விடை வரிசையைத் தேர்க.

அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

  1. நேவிக், சித்தாரா
  2. நேவிக், வானூர்தி
  3. வானூர்தி, சித்தாரா
  4. சித்தாரா, நேவிக்

விடை : சித்தாரா, நேவிக்

குறு வினா

செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலிையப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது?

  • சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.
  • வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கலாம்.
  • கல்லைத் தூக்கி வீசும் போகு, அது விழும் திசை, கோணம், நேரம், அழுத்தம் ஆகியவற்றை தெரிவிப்பது சித்தாராவின் பணி எனலாம்.

சிறு வினா

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக் கோளின் பங்கு யாது?

  • ஆண்டு விவசாயம் மூலம் விளைச்சலைக் கண்டுபிடித்தல், நிலத்திற்கு ஏற்ற நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைக் கண்டறிதல்.
  • கடலில் மீனவர்களுக்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் இடத்தைச் சொல்கின்றது.
  • திறன்பேசி, தானியக்கப் பண இயந்திரம், அட்டைப் பயன்படுத்ம் இயந்திரம் ஆகியவற்றிகுச் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

நெடு வினா

இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,
  • குறைந்த செலவில் தரமான் சேவையை கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.
  • இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

  • 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்
  • 1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.
  • சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.
  • நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது.

இஸ்ரோ:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. இந்திய வானியல் அறிவியல் துறையில் பங்கு ஆற்றிய தமிழர்கள் யார்?

  • அப்துல் கலாம்
  • மயில்சாமி அண்ணாதுரை
  • வளர்மதி
  • சிவன்

2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் யார்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முதல் தமிழர் சிவன் ஆவார்.

3. அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என போற்றப்பட காரணம் யாது?

ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமி ன் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.

4. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்?

இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் வளர்மதி ஆவார்.

5. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார்.

சிறு வினா

1. விக்ரம் சாராபாய் பற்றிய குறிப்பு வரைக

  • விக்ரம் சாராபாய் ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
  • ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.
  • செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24,000 இந்திய கிராமங்களில் உள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார்.
  • இவரின் பெயரால் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவருகிறது.
  • இங்கு, வானூர்தியியல் (Aeronautics), வான் பயண மின்னணுவியல் (Avionics), கூட்டமைப்பு பொருள்கள் (Composites), கணினி – தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இவருடைய முயற்சியால்தான் இஸ்ரோ தொடங்கப்பட்டது.

2. அப்துல்கலாம் பற்றிய குறிப்பு வரைக

  • இந்தியாவின் 1 1ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்.
  • தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்.
  • ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார் .
  • இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர்.
  • இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. வளர்மதி பற்றிய குறிப்பு வரைக

  • அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
  • 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
  • இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.

4. அருணன் சுப்பையா பற்றிய குறிப்பு வரைக

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆவார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று, 1984இல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்து,
  • தற்போது பெங்களூரில் உ ள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.
  • 2013இல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.

5. மயில்சாமி அண்ணாதுரை  பற்றிய குறிப்பு வரைக

  • பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • 11ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர்.
  • இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • 1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார்.
  • நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
  • சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றிவருகிறார்.
  • சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
  • தமது அறிவியல் அனுபவங்களை, கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார்,

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment

%d bloggers like this: