பாடம் 4.5 துணைவினைகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 4.5 – “துணை வினைகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பலவுள் தெரிக.
1. இரு என்பது துணைவினையாக உள்ள தொடர் எது
- பட்டம் இருக்கிறது
- பட்டம் செய்திருக்கிறேன்
- எங்கே இருக்கிறது?
- வானில் மேகம் இருக்கிறது.
விடை: பட்டம் செய்திருக்கிறேன்
2. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக _______. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _______.
- வந்தான் , வருகிறான்
- வந்துவிட்டான், வரவில்லை
- வந்தான் , வருவான்
- வருவான், வரமாட்டான்
விடை : வந்துவிட்டான், வரவில்லை
குறு வினா
கொடு என்பது முதல் வினையாகவும், துணை வினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக
முதல்வினை:
நான் அவருக்கு பணம் கொடுப்பேன்
துணைவினை:
பாடம் சொல்லி கொடுப்பேன்
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனி வினை, கூட்டு வினை என இரு வகைப்படுத்தலாம்.
2. தனி வினை என்றால் என்ன?
தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.
3. கூட்டு வினை என்றால் என்ன?
கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.
4. முதல் வினை என்றால் என்ன?
ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்துதன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை முதல் வினை (MAIN VERB) எனப்படும்.
5. துணை வினை என்றால் என்ன?
ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணை வினை எனப்படும்.
6. தமிழிலுள்ள துணைவினைகள் எத்தனை?
தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளளன.
7. எந்த மொழிகளில் துணைவினைகள், முதல் வினைக்கு பின்பே இடம்பெறும்?
தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள், முதல் வினைக்கு பின்னபே இடம்பெறும்.
சிறு வினா
துணைவினைகளின் பண்புகள் யாவை?
- துணை வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
- இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
- பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
கற்பவை கற்றபின்…
கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.
(வேண்டும், பார், உள், வா, விட)
1. வேண்டும்
விடை: சான்றோர் காட்டிய பாதையில் நடக்க வேண்டும்
2. பார்
விடை: படத்தை உற்றுப் பார்
3. உள்
விடை: கடல் நீரினை உள் வாங்கியது
4. வா
விடை : நாளை என் வீட்டுக்கு வா
5. விடு
விடை : நான் நாளை பள்ளிக்கு வந்து விடுவேன்
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக
1. மார்னிங் எழுந்து
- தமிழ்ச் சொல் : காலையில் எழுந்து
- துணை வினை சொல் : காலையில் எழுந்துவிட்டாள்
2. பிரஷ் பண்ணி
- தமிழ்ச் சொல் : பல் துலக்கி
- துணை வினை சொல் : பல் துலக்கி முடித்தாள்
3. யூனிஃபார்ம் போட்டு
- தமிழ்ச் சொல் : சீருடை அணிந்து
- துணை வினை சொல் : சீருடை அணிந்து கொண்டாள்.
4. ஸ்கூலுக்குப் போனாள்
- தமிழ்ச் சொல் : பள்ளிக்கு போனாள்
- துணை வினை சொல் : பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள்.
மொழியை ஆள்வோம்!
மொழிபெயர்க்க.
Akbar said, “How many crows are there in this city?”
Without even a moment’s thought, Birbal replied “There are fifty thousand five hundred and eighty nine crows, my lord”.
“How can you be so sure?” asked Akbar.
Birbal said, “Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere”.
Akbar was pleased very much by Birbal’s wit
பீர்பாலின் நகைச்சவையுணர்வு
இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார். பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரம் ஐநூற்று என்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார். எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.
உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரேச எனறார். இதைவிட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதை விடக் குறைவாக இருந்தால். வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தாம் என்றார் பீர்பால். பீர்பாலுடைய நகைச்சுவையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.
பிழை நீக்கி எழுதுக.
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.
விடை : மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்
விடை : நல்ல தமிழில் எழுதுவோம்
3. பவளவிழிதான் பரிசு உரியவள்
விடை : பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.
விடை : துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்
5. குழலியும் பாடத் தெரியும்.
விடை : குழலிக்கும் பாடத் தெரியும்
பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ______ மொழியாகும்.
விடை : வேறுபடுத்துவது
2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) ______
விடை : பெற்றிருக்கின்றன
3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) ______ மொழி தமிழ்.
விடை : புதுபித்துக் கொள்ளும்
4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ______
விடை : தேடிக் கொண்டிருக்கிறேன்
மொழியை ஆள்வோம்
நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.
அண்ணாவின் வாழ்க்கையில்…
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளிமாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே திறந்துகாட்டச் செய்தார்.
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,” தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் ” என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் “என்றார்.
அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாக கெஞ்சினார். உடனே, அண்ணா, “ நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.
1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?
மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என அந்த அலுவலர் தெரிந்து கொண்டார்
2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தைத் திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்து விட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்
3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
“ சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்கள்தாம் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
4. பத்தியில் இடம்பெ றும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக.
- தான் – தான் முன்னேற்ற கன்னிமாரோ நூலகேம காரணம் என்றார் பேரறிஞர் அண்ணா
- இன் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
நேர்மை (அல்லது) துணிவு
விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.
தஞ்சையில் புத்தகத் திருவிழா
செப்டம்பர் 19 முதல் 28 வரை தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தில் அறிவுக் களஞ்சியமான புத்தகங்களின் சங்கமமாம் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் கால 8 மணி முதல் 6 மணி வரை அறிவுப் புதையலை அள்ளிச் செல்லலாம். சிந்தைக்குப் பெருவிருந்தாய் மாலை 6 மணிக்குப் புதிய நூல் வெளியீடும். தலை சிறந்தப் பேச்சாளர்களின் பேச்சும் இடம்பெறும்
மொழியோடு விளையாடு
சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக
மாணவர்கள் | ஆசிரியர் |
கரும்பலகை | புத்தகம் |
அழிப்பான் | வழிபாட்டுக் கூட்டம் |
கல்லூரி | உயர்நிலை |
மடிக்கணினி | சீருடை |
பாடவேளை | எழுதுகோல் |
அறை |
1. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
2. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்
3. “மாணவர்களே! எழுதுகோலும், அழிப்பானும் கொண்டு வாருங்கள்” என்றார் ஆசிரியர்,
4. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்
5. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டு வரவில்லை
6. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழஙகப்பட்டது
அகராதியில் காண்க.
1. அரங்கு
விடை : இடம், நாடகமேடை, சூதாடுமிடம், சபை
1. ஒட்பம்
விடை : அறிவு, அழகு, நன்மை, மேன்மை
2. கான்
விடை : காடு, மனம், வாய்க்கால், இசை, மணம், பூ, வீட்டறை, நெசவு
3. நசை
விடை : ஆசை, குற்றம், எள்ளல், ஈரம், அன்பு, ஒழுக்கம், பரிகாசம், விருப்பம்
4. பொருநர்
விடை : படைவீரன், தலைவன், அரசர், நாடகர், புகழ்வோர்
படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒரு கிராமத்து நதி | கிழவனும் கடலும் |
கருப்பு மலர்கள் | தண்ணீர்தண்ணீர் |
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம் |
1. நா. காமராசனின் கவிதை நூல்
கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமி நாதனின் நாடக நூல்
தண்ணீர்தண்ணீர்
3. நோபல் பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்
கிழவனும் கடலும்
4. சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்
ஒரு கிராமத்து நதி
5. எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல்.
சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்
கலைச்சொல் அறிவோம்
- Social Reformer – சமூக சீர்திருத்தவாதி
- Volunteer – தன்னார்வலர்
- Saline Soil – களர்நிலம்
- Ocean – பெருங்கடல் (அ) மாக்கடல்
- Auxiliary Verb – துணைவினை
- Sentence -சொற்றொடர்
அறிவை விரிவு செய்
- ஓய்ந்திருக்கலாகாது – கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு – ஆதிவள்ளியப்பன்)
- முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்
- கல்வியில் நாடகம் – பிரளயன்
- மலாலா – கரும்பலகை யுத்தம்