பாடம் 6.2 சீவக சிந்தாமணி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.2 – “சீவக சிந்தாமணி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சொல்லும் பொருளும்
- தெங்கு – தேங்காய்
- இசை – புகழ்
- வருக்கை – பலாப்பழம்
- நெற்றி – உச்சி
- மால்வரை – பெரியமலை
- மடுத்து – பாய்ந்து
- கொழுநிதி – திரண்ட நிதி
- மருப்பு – கொம்பு
- ஒருத்தல் – ஆண் எருமைகள்
- ஏறு – எருது
- சிலம்ப – பேராெலி எழுப்ப
- வெறி – மணம்
- கழனி – வயல்
- சூல் – கரு
- மேலலார் – பக்குவம் இல்லாதவர்
- இறைஞ்சி – பணிந்து
- அடிசில் – சோறு
- மடிவு – சோம்பல்
- கொடியன்னார் – மகளிர்
- கம்மியர் – இரும்பு வேலை செய்பவர் (கொல்லர்)
- நற்றவம் – பெருந்தவம்
- வட்டம் – எல்லை
- வெற்றம் – வெற்றி
- செறி – சிறந்த
- இரிய – ஓட
இலக்கணக் குறிப்பு
- தேமாங்கனி – உவமைத்தொகை
- இறைஞ்சி – வினையெச்சம்
- கொடியனார் – இடைக்குறை
- செய்கோலம் – வினைத்தொகை
- நற்றவம் – பண்புத்தொகை
- விளைக – வியங்கோள் வினைமுற்று
- தேர்ந்த – பெயரச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. இறைஞ்சி = இறைஞ்சு +இ
- இறைஞ்சு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர்
- ஓம்பு – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆர் – பலர் பால் வினைமுற்று விகுதி
நூல் வெளி
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
- மணநூல் என அழைக்கப்படுகிறது.
- இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்டது.
- 13 இலம்பகங்களை கொண்டது.
- இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்
- சமண மதத்தை சார்ந்தவர்
- இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
- இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
- சீவகசிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர் வருமோ அத்தனை சீர்களே மற்ற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால், முதலடியின் ஓசையே மற்ற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். -மு.வரதராசனார். |
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
1. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
- வருக்கை – இருக்கை
- மடுத்து – பெரிய மலை
- அடிசில் – சோறு
- மடிவு – தொடக்கம்
விடை : அடிசில் – சோறு
2. தவர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது ______
- கோக்கிள்ளி நாடு
- ஏமாங்கத நாடு
- திருநாடு
- கோசலை நாடு
விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை
குறு வினா
சுருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
சுருக்கொண்ட பச்சைப் பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது
சிறு வினா
1. ஏமாங்க நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் எப்படிப் பரவியுள்ளது என்பதைத் திருத்தக்க தேவர் எங்ஙனம் கூறுகின்றார்?
உயரமான தென்னை மரத்தின் முற்றிய காய் கீழுள்ள பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள தேனடையைக் கிழித்து பலாப் பழத்தினைப் பிளந்து மாங்கனியைச் சிதற வைத்து வாழைப் பழத்தை உதிர்க்கவும் செய்தது.
இத்தகைய வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.
2. ஏமாங்க நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?
- ஆயிரம் வகையான உணவுகள்
- உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம்
- மகளிர் ஒப்பனை செய்ய மணிமணிமாடம் ஆயிரம்
- கம்மியர் ஆயிரம் பேர்
- திருமணங்கள் ஆயிரம்
இப்படி ஆயிரம் நிகழ்வுகள் ஏமாங்க நாட்டில் குறைவின்றி நடக்கின்றன.
நெடு வினா
ஏமாங்க நாட்டு வருணணைகளை நும் ஊர் குறித்த வளங்களோடு ஒப்பிடுக
ஏமாங்க வருணணை | எங்கள் ஊர் வளம் |
தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய் தேனடையைக் கிழித்து பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, வாழைப்பழத்தை உதிரச்செய்தது | தேங்காய்கள் வயல் ஓடைகளில் விழுந்து பூக்களை தழுவிச் செல்கிறது. |
வள்ளல்களைப் போன்றது வெள்ளம். அது மலையில் இருந்து செல்வத்தை அடித்து வந்து ஊர் மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கின்றது. | பூக்களையும், பழங்களையும் வெள்ளம் அடித்து வந்து ஊரினில் சேர்க்கும். |
எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அது கேட்டு வாரல் மீன்கள் ஓடுகின்றன. | ஏர் மாடுகளின் சத்தம் வயல்களில் எங்கும் கேட்கும். |
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. சீவக சிந்தாமணி _________ பாவால் ஆனது.
- ஆசிரியப்பா
- வெண்பா
- கலிப்பா
- விருத்தப்பா
விடை : விருத்தப்பா
2. தொடை கீற வருக்கை போழ்ந்து இத்தொடரில் பலாப்பழம் என்பதன் பொருள்
- வருக்கை
- போழ்ந்து
- தொடை
- கீறி
விடை : வருக்கை
3. வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடியில் வயல் என்பதன் பொருள்
- வெளி
- கழனி
- கமழ்
- உழுநர்
விடை : கழனி
4. ஜம்பெருங்காப்பியகளுள் முதல் நூல்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- சிலப்பதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்
5. விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம்
- மணிமேகலை
- வளையாபதி
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
விடை : சீவகசிந்தாமணி
6. நரிவிருத்தம் பாடியவர்
- திருதக்கத்தேவர்
- இளங்கோவடிகள்
- சாத்தனார்
- நாகுத்தனார்
விடை : திருதக்கத்தேவர்
6. பாக்கு மரத்தின் உச்சியில் ________ இருந்தது.
- மாம்பழம்
- தேனடை
- வாழைப்பழை
- தேங்காய்
விடை : தேனடை
7. மற்றநாடு வட்டமாக வைகும் இவ்வடியில் வட்டம் என்பதன் பொருள்
- பெருந்தவம்
- சோம்பல்
- சுறுசுறுப்பு
- எல்லை
விடை : எல்லை
8. செல்வர்களுக்கு கூறப்பட்ட உவமை
- வெள்ளம்
- மழை
- வயல்
- பாடல்
விடை : வெள்ளம்
9. நெற்பயிர் தோற்றத்திற்கு கூறப்பட்ட உவமை
- பச்சைப்பாம்பு
- மழை
- வயல்
- வெள்ளம்
விடை : பச்சைப்பாம்பு
10. வெள்ளம் போல் நிறைந்திருந்தது
- வெள்ளம்
- உழவர்
- பச்சைப்பாம்பு
- பணிவு
விடை : உழவர்
11. நாட்டு வளம் இடம்பெறும் இலம்பகம்
- கேமசரியார் இலம்பகம்
- புதுமையார் இலம்பகம்
- நாமகள் இலம்பம்
- முக்தி இலம்பகம்
விடை : நாமகள் இலம்பம்
12. சீவக சிந்தாமணியில் உள்ள மொத்த இலம்பகம்
- 10
- 11
- 12
- 13
விடை : 13
12. மணநூல் என அழைக்கப்படும் நூல்
- மணிமேகலை
- வளையாபதி
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
விடை : சீவகசிந்தாமணி
13. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?
- மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
- வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
- செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
- பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
14. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் இலக்கணக் குறிப்புத் தருக
- உருவகத்தொடர், வினைத்தொகை
- உவமைத்தாெடர், வினைத்தொகை
- வினைத்தொகை, பண்புத்தொகை
- வினைத்தொகை, உருவகத்தொடர்
விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை
பொருத்துக
1. தெங்கு | அ. தேங்காய் |
2. இசை | ஆ. உச்சி |
3. வருக்கை | இ. பலாப்பழம் |
4. நெற்றி | ஈ. புகழ் |
விடை : 1 – அ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ |
பொருத்துக
1. மால்வரை | அ. பாய்ந்து |
2. மடுத்து | ஆ. திரண்ட நிதி |
3. கொழுநிதி | இ. பெரிய மலை |
4. மருப்பு | ஈ. கொம்பு |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ, 4 – ஈ |
பொருத்துக
1.வெறி | அ. வயல் |
2. கழனி | ஆ. மணம் |
3. செறி | இ. ஓட |
4. இரிய | ஈ. சிறந்த |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
பொருத்துக
1. அடிசில் | அ. சோம்பல் |
2. மடிவு | ஆ. சோறு |
3. கொடியன்னார் | இ. பெருந்தவம் |
4. நறவம் | ஈ. மகளிர் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
பொருத்துக
1. விழுந்தது | அ. தேனடை |
2. கிழித்தது | ஆ. தேங்காய் |
3. பிளந்து | இ. மாங்கனி |
4. சிதறவைத்தது | ஈ. பலாப்பழம் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
குறு வினா
1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
- சீவக சிந்தாமணி
2. நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது எது?
பயிர்கள் முற்றியவுடன் சாய்ந்து இருப்பது நல்லவர்களின் பணிவைப் போல் உள்ளது.
3. ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எவை? களைந்து ஓடியவை எவை?
- ஏமாங்க நாட்டில் பேரொலி எழுப்பியவை எருதுகள்.
- களைந்து ஓடியவை வாரல் மீன்கள்.
4. ஏமாங்க நாட்டில் வெள்ளம் எவ்வாறு பாய்கிறது?
உயர்ந்த மலையில் இருந்து செல்வக் குவியலைச் சேர்த்துக் கொண்டு வந்து, ஊக்கமில்லாத மக்களுக்கு ஊர்தோறும் வழங்கும் வகையில் ஏமாங்கத நாட்டினுள் விரைந்து பாய்கின்றது.
5. ஏமாங்க நாட்டில் செழித்திருந்த மரங்கள் யாவை?
தென்னை, பாக்கு, பலா, மாங்கனி, வாழை
6. ஏமாங்க நாடு எவ்வெவற்றிகு இனிய இடமாகும்?
உண்மையான தவம் புரிவோருக்கும், இல்லறம் நடத்துவோருக்கும் இனிய இடமாகும்.
7. ஏமாங்க நாடு யாருக்கு உகந்த இடம்?
நிலையான பொருளைத் தேடுவோர்க்கும், நிலையில்லா பொருட்செல்வத்தைத் தேடுவோர்க்கும் உகந்த இடமாகும்.
சிறு வினா
1. சீவக சிந்தாமணி குறிப்பு வரைக
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்,
- மணநூல் என அழைக்கப்படுகிறது.
- 13 இலம்பகங்களை கொண்டது.
- இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்
2. திருத்தக்கதேவர் குறிப்பு வரைக
- சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர்
- சமண மதத்தை சார்ந்தவர்
- இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டை சார்ந்தவர்
- சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்பே நரிவிருத்தம் பாடியுள்ளார்.