பாடம் 6.4 வல்லினம் மிகா இடங்கள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.4 – “வல்லினம் மிகா இடங்கள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
- எழுவாய்தொடரில் வல்லினம் மிகாது.
- வினாப்பெயரில் வல்லினம் மிகாது.
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
- இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.
விடை: வினைத்தொகையில் வல்லினம் மிகாது
சிறு வினா
தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களை கூறு.
வல்லினம் மிகா இடங்கள்
அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. சான்று : அது செய், இது காண் |
எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. சான்று : எது கண்டாய்? எவை தவறுகள்? |
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. சான்று : குதிரை தாண்டியது, கிளி பேசும். |
மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. சான்று : அண்ணனோடு போ, எனது சட்டை. |
விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. சான்று : தந்தையே பாருங்கள், மகளே தா. |
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. சான்று : வந்த சிரிப்பு, பார்த்த பையன் |
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. சான்று : நாடு கண்டான், கூடு கட்டு |
படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. சான்று : வரும்படி சொன்னார், பெறும்படி கூறினார். |
வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. சான்று : வாழ்க தமிழ், வருக தலைவா! |
வினைத்தொகையில் வல்லினம் மிகாது. சான்று : குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன் |
கற்பவை கற்றபின்…
வல்லினம் வருமா?
அ) தோழி __ கூற்று
விடை : நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த் தொகையில் வல்லினம் மிகாது.
ஆ) பெரிய __தம்பி
விடை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
இ) சிறிய __ பறவை
விடை : குறிப்புப் பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஈ) பழகு __தமிழ்
விடை : வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
உ) இது __கேள்
விடை : இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
ஊ) எலி __ கடிக்கும்
விடை : எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
எ) ஓடிய __ குதிரை
விடை : பெயரச்சத்தில் வல்லினம் மிகாது.
ஏ) தரும்படி __ சொன்னார்
விடை : படி என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
ஐ) வாழ்க __ தலைவர்
விடை : வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
ஒ) கார் __ காலம்
விடை : காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.
எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
வல்லினம் இடலாமா?
அ) வாழ்த்து __கள்
விடை : கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
ஆ) எழுத்து__ கள்
விடை : கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
இ) திருநிறை __ செல்வன்
விடை : “திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் கூடாது.
ஈ) திருவளர் __ செல்வி
விடை : வளர்செல்வி வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.
கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
அ) வங்கி கடன் (வல்லினம் மிகும்)
வங்கிக்கடன்
காரணம் :-
“இகர ஈற்றில்” வல்லினம் மிகும். (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்)
ஆ) பழங்களை பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) –
பழங்களைப் பறிக்காதீர்கள்
காரணம் :-
“ஐ” என்னும் “இரணடாம் வேற்றுமை உருபபு வெளிப்படும் தொடர்” அதனால் வல்லினம் மிகும்.
இ) திட்ட குழு (வல்லினம் மிகாது)
காரணம் :-
“பெயரச்சத்தில்” வல்லினம் மிகாது.
ஈ) அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது)
காரணம் :-
ஆணை பிற்ப்பித்தது என்பது “இரண்டாம் வேற்றுமை தொகை” எனவே வல்லினம் மிகாது
உ) மருந்து கடை (வல்லினம் மிகும்)
மருந்துக்கடை
காரணம்:-
- “மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும்” வல்லினம் மிகும்.
- “இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்” வல்லினம் மிகும்.
- குறிப்பு:- “மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால்” வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்
ஊ) வேலையில்லா பட்டதாரி (வல்லினம் மிகும்) –
வேலையில்லாப் பட்டதாரி
காரணம்:-
“ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சத்தில்” வல்லினம் மிகும்
எ) சிறப்பு பரிசு (வல்லினம் மிகும்)
சிறப்புப்பரிசு
காரணம் :-
“வன்தொடர் குற்றியலுகரத்தில்” வல்லினம் மிகும்
மொழியை ஆள்வோம்
மாெழி பெயர்க்க.
A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
விடை :-
ஒரு மான், ஆமை, ஒரு காகம் மற்றும் எலி நண்பர்கள். ஒரு நாள் மான் ஒரு வேட்டைக்காரனின் வலையில் சிக்கியது. நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் படி, மான் இறந்ததைப் போல அசையாமல் கிடந்தது. காகம் மானின் மீது அமர்ந்து குத்த ஆரம்பித்தது. ஆமை அவரை திசைதிருப்ப வேட்டைக்காரனின் பாதையை கடந்தது. வேட்டைக்காரன் மானை விட்டுவிட்டு, இறந்து விட்டதாகக் கருதி, ஆமைக்குப் பின் சென்றான். இதற்கிடையில், எலி மெல்லும் மானை விடுவிக்க வலையைத் திறக்கிறது. காகம் ஆமை எடுத்து விரைவாக வேட்டைக்காரனிடமிருந்து எடுத்துச் சென்றது. இந்த பஞ்சதந்திர கதையிலிருந்து, குழுப்பணி சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை அறிகிறோம்.
பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்
- நாளும் நல்ல புத்தகம் ஆழ்ந்து, உணர்ந்து, மகிழ்ந்து படிக்காலாம்.
2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
- திடலில் அனைவருடன் மாலையில் சேர்ந்து ஓடியாடி விளையாடுவது நன்று
பிழை நீக்குக.
பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
மொழியை விளையாடு
புதிர் அவிழ்க்க.
நான்கெழுத்துக்காரன்;
முதல் இரண்டும்
அம்மாவில்
“மா“வைத் தொலைத்து நிற்கும்;
அடுத்த எழுத்தைச் சேர்த்தால்
வில்லின் துணைவன்;
கடை இரண்டும்
கணக்கில் ’இது’ என்பர்.!
முழுதாய்ப் பார்த்தால்
மேகத்திடை தெரிவான்!
அவன் யார்?
விடை : அம்புலி
பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க
(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை)
மானாமதுரை ஓர் அழகான பேரூர்; நீண்ட வயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்வூரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன; கதிரவன் பேரொளி வீசிட, சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போலைப் பேரின்பம் அடையச் செய்கிறது.
வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.
கால் | காலை | புத்தகம் | புல் |
புத்தி | அகல் | அவல் | கல் |
அதிகம் | கறி | தறி | புதன் |
வலை | அறிவன் | கலை | கத்தி |
கவலை | காவல் | அலை | தில்லை |
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
![]() | கலைகள் சிறந்த நாடு அது எம் தமிழ்நாடு சண்டைகள் இல்லா சமாதானப் புறாவானது அது எம் தமிழ்நாடு மதத்தின் குறியீடு இல்லாத கோபுரச் சின்னம் கொண்டது அது எம் தமிழ்நாடு உலகம் போற்றும் உன்னத தைத்திங்கள் தந்தது அது எம் தமிழ்நாடு |
அகராதியில் காண்க.
1. ஈகை
விடை: கொடை, கற்பகமரம், காடை, பொன், முகில், வண்மை
2. குறும்பு
விடை: அரணிருக்கை, சிறுமை, பொல்லாங்கு, குறும்புத்தனம்
3. கோன்
விடை: அரசன், இடையன், தலைவன், எப்பொருட்கும் இறைவன்
4. புகல்
விடை: உடல், உபாயம், குதிர், சொல், தஞ்சம், சரண்
5. மாெய்ம்பு
விடை: தோள்வலி பலம்
கலைச்சொல் அறிவோம்
- Martyrs – உயிர்த்தியாகம் செய்தவர்கள்
- Combination – புணர்ச்சி
- Indian National Army – இந்திய தேசிய இராணுவம்
- Patriotism – நாட்டுப்பற்று
- World War – உலகப்போர்
கலைச்சொல் அறிவோம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு.மேத்தா
- தமிழ்ப் பழமொழிகள் – கி.வா.ஜெகந்நாதன்
- இருட்டு எனக்கு பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்