பாடம் 6.4 செய்தி
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.4 – “செய்தி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் மதிப்பீட்டு வினா
நெடு வினா
இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக
முன்னுரை:-
செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.
வித்துவான்:-
இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது நாதஸ்வரம். இதில் பல இராகங்களை கொண்டு வித்துவான் வாசித்தார். அத நிகழ்ச்சியில் பிலிப் போல்ஸ்கா என்ற வித்துவானும் வந்திருந்தார்.
இசை மயக்கம்:-
நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசை இனிக்க ஆரம்பித்தது. போஸ்கோ சிரித்தபடியே தன்னையே இழந்து இரசிக்கின்றார். இசை வெள்ளத்தில் மிதக்கின்றார். வெளிநாட்டவர் தமிழக இசைக்கு மெய் மறக்கின்றனர். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது. ஆடவும் செய்தது.
செய்தி:-
வித்வானிடம் சாந்தமுலேகாவை 5, 6 முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார். இதில் ஒரு செய்தி இருப்பதாகவும். ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது. நான் அதில் மூழ்கி விட்டேன் என்றார் போஸ்கா. எனக்கு அனுப்பிய செய்தி, உலகத்திற்கே அனுப்பிய செய்தி, அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த சங்கீதமும் இதனை கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.
முடிவுரை:-
போஸ்கோவின் செயல்பாடுகள் இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
கூடுதல் வினாக்கள்
குறு வினா
1. தஞ்சாவூர், தமிழுக்கு அளித்த கொடையாளர்கள் யாவர்?
உ.வே. சாமிநாதர் | தி.ஜானிகிராமன் |
மெளனி | தஞ்சை இராமையா தாஸ் |
தஞ்சை பிரகாஷ் | தஞ்சாவூர் கவிராயர் |
2. இசை எப்படிபட்டது?
- இசை மொழியைக் கடந்தது.
- அமைதியின் நாக்காக அது எல்லா மொழிகளையும் பேசுவது.
- மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது.
- சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள்ளிருக்கும் செய்தியை எந்தமொழி மனதிற்குள்ளும் செலுத்துவது.
- ஆரவாரங்கள், குழப்பங்கள், கூச்சல்கள் , துயரங்கள் என எல்லாவற்றையும் கடந்த அமைதி வெளியில் மனங்களைக் கூட்டுவது.
- இசையின் செவ்வியில் தலைப்படும் மனமானது இனம், நாடு என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டிவிடும். இசை தாண்டவைக்கும்.
3. சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்?
1970 | அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி |
1979 | சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன் |
1987 | முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன் |
1996 | அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன் |
2008 | மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி |
2010 | சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன் |
2016 | ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன். |
நெடு வினா
1. தி. ஜானகிராமன் – குறிப்பு வரைக
- தி. ஜானகிராமன் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.
- உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும்
பணியாற்றியவர்.
- வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்ட இவர்தம் கதைகள் மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்தன.
- நாவல்களையும் நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
- “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் இவர்.
- தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
3. புதுமைபித்தன் சிறுகதை பற்றி கூறுவது பற்றி எழுதுக?
- இந்திய இசையின் அழகான நுட்ப ங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக்கருவிகளில் நாகசுரமும் ஒன்று.
- மங்கலமான பல நிகழ்வுகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது. இந்தச் சிறப்பான கருவி 600 ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது.
- 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னாகரம் என்னும் நூலில் இந்தக் கருவி கூறப்படவில்லை. 13ஆம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்தப் பதிவுகளிலும் இந்தக் கருவி பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
- தமிழகப் பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் இந்தக் கருவி காணப்படவில்லை. ஆகவே இந்தக் கருவி 13ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது.
- நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
- வெட்டப்பட்ட ஆச்சா மரத்துண்டுகளை நீண்ட நாள்கள் வைத்திருந்த பிறகே இக்கருவி உருவாக்கப்படுகிறது. எனவே பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது.
- நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக்கொண்டு செய்யப்படுகிறது.