Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 6.6 – திருக்குறள்

பாடம் 6.6 திருக்குறள்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 6.6 – “திருக்குறள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

கற்பவை கற்றபின்

1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்

Class 9 Tamil Chapter 6.6 "‘திருக்குறள்" - படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்

அ. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
      துன்பத்துள் துன்பங் கெடின்.

ஆ. ஏவவும் செய்கலான் தான்தே றான் அவ்வுயிர்
      போஒம் அளவும்ஓர் நோய்.

இ. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
      உழந்தும் உழவே தலை

விடை

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

2. பொருளுக்கேற்ற அடியைக் கண்டு பிடித்துப் பொருத்துக.

1. கண்டானாம் தான்கண்டவாறுஅ. பகைவரையும் நட்பாக்கும் கருவி
2. அறம்நாணத் தக்கது உடைத்துஆ. தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்
3. மாற்றாரை மாற்றும் படைஇ. அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்
விடை : 1 – ஆ, 2 – இ, 1 -அ

3. ஐந்து சால்புகளில் இரண்டு

  1. வானமும் நாணமும்
  2. நாணமும் இணக்கமும்
  3. இணக்கமும் சுணக்கமும்
  4. இணக்கமும் பிணக்கமும்

விடை : நாணமும் இணக்கமும்

5. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.

Class 9 Tamil Chapter 6.6 "‘திருக்குறள்" - கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.

1. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் _____________

விடை : ஒப்புரவு

2. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் _____________

விடை : உழவர்

3. தான் நாணான் ஆயின் _____________ நாணத் தக்கது.

விடை : அறம்

4. ஆழி என்பதன் பொருள் _____________

விடை : கடல்

5. மாற்றாரை மாற்றும் _____________

விடை : படை

6. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் _____________ செய்வதில்லை

விடை : தவறு

வினாக்கள்

1) இறக்கும்வரை உள்ள நோய் எது?

சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர், சாகும் வரை உள்ள நோய்

2) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
    ஐந்துசால்பு ஊன்றிய தூண். – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.

இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி

இலக்கணம்:-

செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)

விளக்கம்:-

சான்றாண்மைக்கு தாங்கும் தூண்களை உருவகம் செய்த வள்ளுவன், சான்றாண்மைக்கு உருவகம் செய்யாமல் விட்டதால் இது எகதேச உருவக அணி ஆகும்.

3) உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.

4) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு. – இக்குறட்பாவில் பயின்றுவரும் தொடை நயத்தை எழுதுக.

எதுகைத் தொடை

செய்யுளி்ல் சீர்களிலோ அல்லது அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.

தான்காணான் – தான்கண்ட

மோனைத் தொடை

செய்யுளில் சீர்களிலோ அல்லது அடிகளிலோ முதலாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.

காணாதான் – காட்டுவான், தான்காணான் – தான்கண்ட

கூடுதல் வினாக்கள் 

1. இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம் எப்போது?

மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம்.

2. யார் தவறு செய்வதில்லை?

கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை

3. சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?

அன்பு பழிக்கு வெட்கப்படுதல், அனைவரிடமும் இணக்கமும், இரக்கம், உண்மை – ஆகியவை சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்

4. அடுக்கிய கோடிபெறினும் தவறு செய்வதில்லை – யார்?

கோடிப்பொரள் கொடுத்தாலும் ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு இல்லை

5. துன்பத்துள் துன்பம் கெடும் எப்போது?

துன்பத்துள் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால் இன்பத்தில சிறந்த இன்பம் பெயலாம்.

6. மாற்றாரை மாற்றும் படை எது?

செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல் அதுவே மாற்றாரை மாற்றும் படையாகும்.

7. “ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
     ஆழி எனப்படு வார்” – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.

இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி

இலக்கணம்:-

செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும். (ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)

விளக்கம்:-

சான்றாண்மை மிக்கவர் கடலுக்குக் கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி.

8. “உழுவார் உலகத்தார்க்கு  அணிஅஃ தாற்றாது
     எழுவாரை எல்லாம் பொறுத்து” – இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.

இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி – ஏகதேச உருவக அணி

இலக்கணம்:-

செய்யுளில் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

(ஏகம் – ஒன்று, தேசம் – பக்கம்)

விளக்கம்:-

சான்றாண்மை மிக்கவர் கடலுக்குக் கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால் இது ஏகதேச உருவக அணி

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment