பாடம் 7.2 ஓ, என் சமகாலத் தாேழர்களே!
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 7.2 – “ஓ, என் சமகாலத் தாேழர்களே!” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
இலக்கணக்குறிப்பு
- சொன்னோர் – வினையாலணையும் பெயர்
- பண்பும் அன்பும், இனமும் மொழியும் – எண்ணும்மை
- காய்ந்து, ஏந்தி – வினையெச்சங்கள்
பகுபத உறுப்பிலக்கணம்
மறந்த = மற + த்(ந்) + த் + அ
- மற – பகுதி
- த் – சந்தி
- ந் ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி
பொருத்துங்கள் = பொருத்து + உம் + கள்
- பொருத்து – பகுதி
- உம் – முன்னிலைப் பன்மை விகுதி
- கள் – விகுதி மேல் விகுதி
நூல் வெளி
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- இப்பாடப்பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
பாட நூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
விடுபட்ட இடத்திற்கான விடை எது?
இளைஞர் கூட்டம் ஏந்தி நடக்க
________ புதியவை தாம்
- சாதியும் மதமும்
- இனமும் மொழியும்
- இனமும் மதமும்
- மதமும் மொழியும
விடை : இனமும் மொழியும்
சிறுவினா
ஓ, என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
- அறிவியல் வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
- கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.
- திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.
- ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.
என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் வைக்கிறார்
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வலவன் ஏவா வான ஊர்தி அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் நூல்
- வைரமுத்து கவிதைகள்
- சீவகசிந்தாமணி
- கலித்தொகை
- புறநானூறு
விடை : புறநானூறு
2. ஓர் ஏந்திர வூர்திஇ யற்றுமின் என்று அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் நூல்
- வைரமுத்து கவிதைகள்
- சீவகசிந்தாமணி
- கலித்தொகை
- புறநானூறு
விடை : சீவகசிந்தாமணி
3. கவிஞர் வைரமுத்துவின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- கவிராஜன் கவிதை
- தண்ணீர் தேசம்
- இவற்றில் ஏதுமில்லை
விடை : கள்ளிக்காட்டு இதிகாசம்
4. கவிஞர் வைரமுத்து பிறந்த மாவட்டம்
- காஞ்சிபுரம்
- சென்னை
- கோவை
- தேனி
விடை : தேனி
5. இந்தியாவின் சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதினை ஏழுமுறை பெற்ற கவிஞர்
- வாணிதாசன்
- தமிழன்பன்
- வைரமுத்து
- மேத்தா
விடை : வைரமுத்து
6. ஓர் எந்திரவூர்திஇ யற்றுமின் என்று அறிவியல் சிந்தனையைக் குறிப்பிடும் சிந்தாமணியின் இலம்பகம்
- கேமசரியார் இலம்பகம்
- புதுமையார் இலம்பகம்
- முக்கி இலம்பகம்
- நாமகள் இலம்பகம்
விடை : நாமகள் இலம்பகம்
7. கூட்டுப்புழுதான் பட்டுபூச்சியாக் கோலம் கொள்ளும் மறவாதீர் என்று குறிப்பிடும் நூல்
- கவிராஜன் கவிதைகள்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- வைரமுத்து கவிதைகள்
- இதுவரை நான்
விடை : வைரமுத்து கவிதைகள்
8. கூட்டுப்புழுதான் பட்டுபூச்சியாக் கோலம் கொள்ளும் மறவாதீர் என்று பாடியவர்
- வாணிதாசன்
- தமிழன்பன்
- வைரமுத்து
- மேத்தா
விடை : வைரமுத்து
9. பின்வரும் தொடர்களைப் படித்து நான் யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்
- இணையம்
- தமிழ்
- கணினி
- ஏவுகணை
விடை : தமிழ்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. _______ , _______ இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம்
விடை : அறவியலும், அறிவியலும்
2. கவிஞர் வைரமுத்து சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு _______
விடை : 2003
3. காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும் இத் தொடரில் கழனி என்பதன் பொருள் _______
விடை : வயல்
4. அறிவியல் வானத்தில் ஆளும் _______ நிறுத்த வேண்டும்.
விடை : தமிழை
5. கூட்டுப்புழு _______ ஆக மாறும்
விடை : பட்டுப்பூச்சியாய்
குறு வினா
1. ஓ, என் சமகாலத் தாேழர்களே! என்னும் கவிதையில் கவிஞர் வைரமுத்து குறிப்பிடும் அஃறிணை உயிர்கள் யாவை?
கிளி, கூட்டுபுழு, பட்டுப்பூச்சி
2. கணிப்பொறியுள் பொருந்த வேண்டியவை எவை?
கணிப்பொறியுள் பொருந்த வேண்டியவை : கரிகாலன் பெருமைகள்
3. கரிகாலன் எந்த நாட்டு மன்னன்?
கரிகாலன் சோழ நாட்டு மன்னன்
4. எதனால் வளர்ந்தது தமிழ்ச்சமூகம்?
அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்தது தமிழ்ச்சமூகம்.
5. தற்காலப் படைப்பாளர்கள் எதனை வலியுறுத்துகின்றன?
அறவியலாேடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றன.
6. உணர்ச்சி தொலைந்த அறிவு எதைப் போன்றது?
உணர்ச்சி தொலைந்த அறிவு எரியும் தீயை இழந்த திரி போன்றது
7. அறிவை மறந்த உணர்ச்சி எதைப் போன்றது?
அறிவை மறந்த உணர்ச்சி திரியை மறந்த தீயைப் போன்றது.
8. எவை புதியவை?
இனமும் மொழியும் புதியவை
9. எவை பழையவை?
பண்பும் அன்பும் பழையவை
10. எதனைக் கடவாதீர் என்கிறார் கவிஞர் வைரமுத்து?
பொறுமை, அடக்கம் ஆகியவற்றை கடவாதீர் என்கிறார் கவிஞர் வைரமுத்து
11. எல்லாக் கோள்களிலும் எதனை ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்?
ஏவுகணைகளில் தமிழை எழுதி எல்லாக் கோள்களிலும் ஏற்ற வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறுகிறார்.
12. கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
கூட்டுப்புழு தான் பட்டுப்பூச்சியாய் மாறும். அவை கொண்ட பொறுமையும் அடக்கமும் தான்.
சிறு வினா
1. கவிஞர் வைரமுத்து கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் – உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2. கவிஞர் வைரமுத்து – குறிப்பு வரைக
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.