Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 7.4 – மதுரைக்காஞ்சி

பாடம் 7.4 மதுரைக்காஞ்சி

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 7.4 – “மதுரைக்காஞ்சி” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • புரிசை – மதில்
  • அணங்கு – தெய்வம்
  • சில்காற்று – தென்றல்
  • புழை – சாளரம்
  • மாகால் – பெருங்காற்று
  • முந்நீர் – கடல்
  • பணை – முரசு
  • கயம் – நீர்நிலை
  • ஓவு – ஓவியம்
  • நியமம் – அங்காடி.

இலக்கணக்குறிப்பு

  • ஓங்கிய – பெயரெச்சம்
  • நிலைஇய – சொல்லிசை அளபெடை
  • குழாஅத்து – செய்யுளிசை அளபெடை
  • வாயில் – இலக்கணப் போலி
  • மா கால் – உரிச்சொல் தொடர்
  • முழங்கிசை, இமிழிசை – வினைத் தொகை
  • நெடுநிலை, முந்நீர் – பண்புத் தொகை
  • மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆழ்ந்த = ஆழ் + த்(ந்) + த் + அ

  • ஆழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

2. ஓங்கிய = ஓங்கு + இ(ன்) + ய் + அ

  • ஓங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்தகால இடைநிலை
  • ய் – உடம்படுமெய்
  • அ – பெயரெச்ச விகுதி

3. மகிழ்ந்தோர் – மகிழ் + த்(ந்) + த் + ஓர்

  • மகிழ் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

மதுரைக்காஞ்சி –  பெயர்க்காரணத்தை குறிப்பிடுக

காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

சிறு வினா

“மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம் சுட்டல் :-

இவ்வடி மாங்குடிமருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி நூலில் இடம் பெற்றுள்ளன.

விளக்கம் :-

விழாவைப் பற்றிய முரசறைவாேர் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடல் ஒலி போல் ஒலிக்கின்றது. பெருங்காற்று புகுந்தவுடன் கடல் பேரொலி எழுப்பும். அதனைப் போல மிகுதியான ஓசையுடன் முரசறைவோர் விழா பற்றி முழக்கம் செய்தனர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வனவிலங்குச் சரணாலயம் பழங்காலத் தமிழகத்தில் இருந்ததைக் குறிப்பிடும் நூல் ………………….

  1. புறநானூறு
  2. நான்மாடக்கூடல்
  3. மதுரைக்காஞ்சி
  4. பட்டினப்பாலை

விடை : மதுரைக்காஞ்சி

2. தலையானங்கானகத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்ட நூல் ………………….

  1. புறநானூறு
  2. நான்மாடக்கூடல்
  3. பட்டினப்பாலை
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

3. தவறானவற்றைச் சுட்டுக

  1. மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  2. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடியில் பிறந்தவர் மாங்குடி மருதனார்
  3. எட்டுத்தொகையில் 13 பாடல்களைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  4. நான்மாடக்கூடல் என்னும் நூலையும் மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.

விடை : நான்மாடக்கூடல் என்னும் நூலையும் மாங்குடி மருதனார் பாடியுள்ளார்.

4. பொருந்தாதவற்றைக் கண்டறிக

  1. பணை – முரசு
  2. கயம் – நீர்நிலை
  3. ஓவு – தெய்வம்
  4. நியமம் – அங்காடி

விடை : ஓவு – தெய்வம்

5. மதுரைக்காஞ்சியன் மொத்த அடிகள் ………………….

  1. 762
  2. 782
  3. 792
  4. 772

விடை : 782

6. மதுரைக்காஞ்சி நூல் ………………….

  1. பதினெண்கீழ்கணக்கு
  2. பதினெண்மேற்கணக்கு
  3. சிற்றிலக்கியம்
  4. பேரிலக்கியம்

விடை : பதினெண்மேற்கணக்கு

7. பதினெண்மேற்கணக்கு நூலில் முதன்மையானது ………………….

  1. புறநானூறு
  2. நான்மாடக்கூடல்
  3. பட்டினப்பாலை
  4. மதுரைக்காஞ்சி

விடை : மதுரைக்காஞ்சி

8. மதுரையில் காணப்பட்ட பகற்கடைகள் ………………

  1. அல்லங்காடி
  2. நாளங்காடி
  3. புரிசை
  4. கயம்

விடை : நாளங்காடி

9. மதுரையில் காணப்பட்ட இரவுக் கடைகள் ………………

  1. அல்லங்காடி
  2. நாளங்காடி
  3. புரிசை
  4. கயம்

விடை : அல்லங்காடி

10. “வைகை அன்ன வழக்குடை வாயில்” – இவ்வடியில் இடம் பெறும் உவமை ……………..

  1. அன்ன
  2. வைகை
  3. வாயில்
  4. வழக்குடை

விடை : வைகை

11. “மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு” – இவ்வடியில் இடம் பெறும் உவமை ………………….

  1. மலை
  2. மழை
  3. மாடம்
  4. நிவந்த

விடை : மலை

11. “மகிழந்தோர் ஆடும் கலிகொள்” – இவ்வடியில் “கலி” என்பது சுட்டுவது ………….

  1. துன்பம்
  2. மகிழ்ச்சி
  3. மலை
  4. பெருமிதம்

விடை : மகிழ்ச்சி

பொருத்துக

1. புரிசைஅ. தெய்வம்
2. அனங்குஆ. மதில்
3. சில்காற்றுஇ. சாளரம்
4. புழைஈ. தென்றல்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ. 4 – இ

பொருத்துக

1. மாகால்அ. கடல்
2. முந்நீர்ஆ. பெருங்காற்று
3. பனைஇ. நீர்நிலை
4. கயம்ஈ. முரசு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ. 4 – இ

பொருத்துக

1. மதில்அ. வைகை ஆறு
2. வாயில்ஆ. மேகங்கள் உலவும் மலை
3. மாளிகைஇ. தெய்வத்தன்மை
4. மக்கள்ஈ. வானளவு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ. 4 – அ

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கயம் என்பதன் பொருள் …………………….

விடை : முரசு

2. ஓவு என்பதன் பொருள் …………………….

விடை : ஓவியம்

3. நியமம் என்பதன் பொருள் …………………….

விடை : அங்காடி

4. நாளங்காடியும், அல்லங்காடியும் ……………………. போல் கட்சியளிக்கின்றன

விடை : ஓவியம்

5. எட்டுத்தொகையில் ……………… பாடல்களைப் பாடியுள்ளார் மாங்குடி மருதனார்

விடை : 13

6. மதுரைக்காஞ்சியைப் இயற்றியவர் ……………….

விடை : மாங்குடி மருதனார்

7. …………………. நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.

விடை : பத்துப்பாட்டு

குறு வினா

1. “பொறிமயிர் வானம்…. கூட்டுறை வயமாப் புலியொடு குழும்” – இவ்வடிகள் மூலம் நாம் அறியும் செய்தி யாது?

மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்துள்ளதை இவ்வடிகள் மூலம் அறியலாம்.

2. ஓவியம் போன்ற இருபெரும் கடைத்தெருக்கள் எவை?

நாளங்காடி, அல்லங்காடி

3. பெருங்காற்று புகுந்த கடலொளி போல ஒலித்தவை எவை?

விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல ஒலித்தன.

4. காஞ்சி என்பதன் பொருள் யாது?

காஞ்சி என்பதன் பொருள் நிலையாமை ஆகும்.

5. எவை ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன?

பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

6. பதினெண்மேற்கணக்கு நூல்கள் யாவை?

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

7. முந்நீர் என்பதை விவரிக்க

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்

8. எதனைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்?

இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுவதினைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.

9. பெருங்காற்று புகுந்த கடலொலி போல என்ற உவமை எதற்கு ஒப்பாக கூறப்பட்டது?

பெருங்காற்று புகுந்த கடலொலி போல என்ற உவமை “விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம்” ஒப்பாக கூறப்பட்டது.

10. “மகால் எடுத்த முந்நீர் போல” என்பதில் “மகால்” , “முந்நீர்” ஆகிய சொற்களின் பொருள் யாது?

  • மகால் – பெருங்காற்று
  • முந்நீர் – கடல்

11. மதுரைக்காஞ்சியின் வேறு பெயர் யாது? அதன் பாட்டுத் தலைவன் யார்?

  • வேறு பெயர் – ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’
  • பாட்டுடைத் தலைவன் –  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

12. மாங்குடி மருதனார் குறிப்பு வரைக

  • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

சிறு வினா

1. மதுரைக்காஞ்சி – குறிப்பு வரைக

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன . இதைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

2. மதுரையின் சிறப்பினை மதுரைக்காஞ்சியின் மூலம் மாங்குடி மருதனார் எவ்வாறு விவரிக்கிறார்?

  • மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது.
  • பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது.
  • பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய் பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது.
  • மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன.
  • இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.
  • மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன.
  • ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன.
  • விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது.
  • இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.
  • பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment