Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 7.5 – சந்தை

பாடம் 7.5 சந்தை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 7.5 – “சந்தை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

மதீப்பிடு

குறு வினா

உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.

காய்கறிகள்:-

தக்காளி, வெங்காயம், பரங்கிக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள், வாழைக்காய், வாழைப்பழம்,

எண்ணெய் வகைகள்:-

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கெண்ணெய்

பருப்பு வகைகள்:-

சிறுதானிய வகைகள், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு

பூக்கள்:-

மல்லிகை, அரளி, முல்லை, ரோஜா, சாமந்தி முதலிய பூக்கள் விளைவிக்கப்படுகின்றன.

சந்தையில் காணும் பொருள்கள்:-

  • எங்கள் ஊரில் இயற்கை வேளாண்மையில் விளையும் காய்கறி வகைகள், எண்ணெய் வகைககள், பருப்பு வகைகளும் விற்கப்படுகின்றன.
  • செயற்கை முறையில் உருவாக்கிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள், அரிசி வகைகளும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • பால் தொழிற்சாலைகளில் உருவாகும் திண்பண்டங்கள், ஆடைகள், நெகிழிப்பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • அலங்காரப் பொருட்கள், சமையல் செய்ய பயன்படும் கடுகு, சீரகம் முதலிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
  • கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
  • வெளியூர்களிலிருந்து வரும் பலவகை பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சிறு வினா

சந்தைக்கும் பல்பொருள் அங்காடிக்குமான வேறுபாடுகளைப் பட்டியலிடுக

சந்தைபல்பொருள் அங்காடி
1. உள்ளூர் தேவைக்கு ஏற்ற மாதிரி அங்கு விளைகிற உணவப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றிற்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிக செயல்பாடுதான் கிராமச்சந்தைஒரே இடத்தில் எல்லாக் கடைகளும் இருக்கும். குண்டூசியிலிருந்து கணினி வரைக்கும் கிடைக்கும் பல்லங்காடியகம்
2. மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது கிராமச் சந்தையின் நோக்கம்மக்களின் மனதை மயக்குகிற மாதிரி பெறும் மிகை வரவு சார்ந்து இயங்குவது பல்பொருள் அங்காடி
3. கிராமச் சந்தையில் உற்பத்தியாளர்கள் தான் விற்பனையாளர்கள்நவீன சந்தையில் உற்பத்தி செய்பவர் ஒருவர். மொத்தமாக வாங்குபவர் ஒருவர். சிற்லறையாக விற்பவர் மற்றொருவர்
4. இடைத்தரகர்கள் இல்லைஇடைத்தரகர்கள் மூலமே விற்பனை நடைபெறுகிறது.
5. யார் வேண்டுமானாலும் கடையில் விற்பனை செய்யலாம். சிறிய முதலீடகளே போதுமானது.கடைகளைத் திட்டமிட்டால் தான் நிருவகிக்க முடியும். அதற்கேற்ப மேலாண்மை கண்காணிப்பு, கட்டமைப்பு வசதி, தொடர்பராமரிப்பு எனப்பல செயல்பாடுகள் உண்டு. முதலீடு அதிகம் தேவை

நெடு வினா

எங்கள் ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக

  • எங்கள் ஊர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகாவில் உள்ள வெங்கடேஸ்வரபுரம். இங்கு புகழ்பெற்ற வாரசந்தை அமைந்துள்ளது.
  • இந்த சந்தையானது வாரம் ஒரு முறை அதாவது சனிக்கிழமை அன்று மட்டும் கூடும்.
  • இங்கு அனைத்து வித பொருள்களும் கிடைக்கும். எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் எங்கள் சந்தையில் தான் விற்பனை செய்யப்படுகிறது.
  • இங்கு எல்லாவிதமான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், இறைச்சி, மீன், கருவாடு முதலிய பொருட்களும் கிடைக்கும்.
  • மேலும் ஆடுகள், கோழிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
  • எனவே மக்கள் அனைவரும் வருகை தந்து தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கி சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. நாளங்காடி என்றால் என்ன?

பகலில் செயல்படும் கடைவீதிகளை ‘நாளங்காடி’ என்று கூறுவர்

2. அல்லங்காடி என்றால் என்ன?

இரவில் செயல்படும் கடைவீதிகளை ‘அல்லங்காடி’ என்று கூறுவர்

3. பண்டமாற்று முறை உருவாக காரணம் யாது?

மக்களின் தேவை, பயன்பாடு, உற்பத்தி ஆகியவை பெருகியதனால் ஒன்றைக் கொடுத்து மற்றொன்ரை வாங்கும் நிலையான பண்டமாற்று முறை உருவாகியது

4. மதுரை மாவட்ட மாட்டுச்சந்தையின் பெயரென்ன?

மதுரை மாவட்ட மாட்டுச்சந்தை பெயர் மாட்டுத்தாவணி

5. கிராமச்சந்தை கிடைக்கும் பொருட்கள் யாவை?

உணவுத் தானியங்கள், காய்கறிகள், கால்நடைகள், அலங்காரப் பொருட்கள், பாத்திரங்கள், துணிகள்

நெடு வினா

1. போச்சம்பள்ளிச் சந்தை – சிறுகுறிப்பு வரைக

  • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது.
  • பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள்.
  • விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாய்ப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது.
  • 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது.
  • கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.

2. ஊர்களையும் அங்கு புகழ் பெற்ற சந்தைகளும் பற்றி கூறுக.

  • மணப்பாறை – மாட்டுச் சந்தை
  • அய்யலூர் – ஆட்டுச் சந்தை
  • ஒட்டன்சத்திரம் – காய்கறிச் சந்தை
  • நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை
  • ஈரோடு – ஜவுளிச் சந்தை
  • கடலூர் அருகிலுள்ள காராமணி குப்பம் – கருவாட்டுச் சந்தை
  • நாகப்பட்டினம் – மீன் சந்தை

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment