பாடம் 8.1 பெரியாரின் சிந்தனைகள்
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 8.1 – “பெரியாரின் சிந்தனைகள்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
கூற்று – பெரியார் உயிர் எழுத்துக்களில் “ஐ” என்பதனை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார்
காரணம் – சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாக தமிழ் எதுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று, காரணம் இரண்டும் சரி
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
விடை : கூற்று, காரணம் இரண்டும் சரி
குறு வினா
‘பகுத்தறிவு’ எனறால் என்ன?
எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எப்படி? எதற்கு? என்ற வினாக்கள் எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.
சிறு வினா
சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.
- விழாக்கள் மற்றும் சடங்குகளால் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற விழாக்கள் மற்றும் சடங்குளைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
- திருமணத்தை எளிமையாக சீர்திருத்த முறையில் நடத்த வேண்டும் என்றார்.
- விழாக்கள், திருமணங்கள் மற்றும் சடங்குகள் நடத்த கடன் வாங்கி செலவு செய்து கடன்காரர்களிடம் மாட்டிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
- பெரியார் சொன்னதைக் கடைபிடித்திருந்தால் இந்நிலை வராது.
நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக
- இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்க வேண்டும்.
- மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
- மதம், கடவுள் தொடரபற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான அறிவைத் தரும் இலக்கியம், அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலமே மொழியும் இலக்கியமும் மேன்மை அடையும்.
- திருக்குறளைப் பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதுகிறார்.
- இந்நூலில் அறிவியல் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம் என்றார் பெரியார்.
- தமிழில் “ஐ” என்பத “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. பகுத்தறிவு, தன்மதிப்பு ஆகிய கண்களை மக்களுக்கு அளிக்க அரும்பணியாற்றியவர் ………………….
- நேரு
- பாரதியார்
- காந்தியடிகள்
- தந்தை பெரியார்
விடை : தந்தை பெரியார்
2. பெண்ணினப் போர்முரசு என்று புகழப்பட்டவர் ………………….
- நேரு
- தந்தை பெரியார்
- பாரதியார்
- காந்தியடிகள்
விடை : தந்தை பெரியார்
3. மூடப்பழக்கத்தில் இருந்து தமிழ் மக்களை பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் …………..
- நேரு
- பாரதியார்
- தந்தை பெரியார்
- காந்தியடிகள்
விடை : தந்தை பெரியார்
4. புத்துலகத் தொலைநோக்காளர் என்று புகழப்பட்டவர் …………………..
- தந்தை பெரியார்
- நேரு
- பாரதியார்
- காந்தியடிகள்
விடை : தந்தை பெரியார்
5. பொருந்தாதவற்றை தேர்ந்தெடுக்க
பெரியார் விதைத்த விதைகள்
- கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கான சொத்துரிமை
- குழந்தைத் திருமணம்
விடை : குழந்தைத் திருமணம்
6. 13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் ………………..
- பெரியார்
- வைக்கம் வீரர்
- வெண்தாடி வேந்தர்
- பகுத்தறிவு பகலவன்
விடை : பெரியார்
7. பெரியாருக்குத் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்ற பட்டம் கொடுத்த அமைப்பு ……………
- உலகத் தமிழ்ப்பேரவை
- சாகித்ய அகெதமி
- பெண்கள் மாநாடு
- யுனெஸ்கோ
விடை : யுனெஸ்கோ
8. பெரியார் எதிர்த்தவை அல்லாத ஒன்று
- குலக்கல்வித் திட்டம்
- விதவைத்திருமணம்
- தேவதாசி முறை
- இந்தித் திணிப்பு
விடை : விதவைத்திருமணம்
9. பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்த உயிரெழுத்துகள்
- அ, ஆ
- இ, ஈ
- ஏ, எ
- ஐ, ஓள
விடை : ஐ, ஓள
10. பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு ……………….
- 1976
- 1977
- 1978
- 1979
விடை : 1978
10. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் கொடுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டாகப் பெரியார் கூறுவது ……………….
- 30%
- 40%
- 50%
- 60%
விடை : 50%
10. பெரியார் நடத்திய ஆங்கில இதழ் ……………….
- ரிவோல்ட்
- விடுதலை
- குடியரசு
- உண்மை
விடை : ரிவோல்ட்
11. 1925-ல் பெரியார் தோற்றுவித்த இயக்கம் ……………….
- திராவிடக் கழகம்
- சுயமரியாதை இயக்கம்
- நீதிக்கட்சி
- யுனெஸ்கோ
விடை : சுயமரியாதை இயக்கம்
12. வேறுபட்ட ஒன்று
- ரிவோல்ட்
- விடுதலை
- குடியரசு
- உண்மை
விடை : ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
13. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
கூற்று : மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மதத்தின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
காரணம் : மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்கா மனிதர்களா? மதம் என்பது மனிதர்கள் ஒற்றுமைபடுத்துவதற்காகவா? பிரித்தது வைப்பதற்காகவா? எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை வைக்கிறார்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று காரணம் சரி
- கூற்று காரணம் தவறு
- கூற்று தவற, காரணம் சரி
விடை : கூற்று காரணம் சரி
14. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
கூற்று : கல்வி மக்களிடம் பகுத்தறிவு, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்
காரணம் : மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ப தொழில், அலுவல் பார்க்க கல்வி பயன்பட வேண்டும்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று காரணம் தவறு
- கூற்று காரணம் சரி
- கூற்று தவற, காரணம் சரி
விடை : கூற்று காரணம் சரி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பெரியாரின் சிந்தனைகள் …………………. உடையவை
விடை : தொலைநோக்கு
2. பெரியாரின் சிந்தனைகள் …………………. அடிப்படையில் அமைந்தவை
விடை : அறிவியல்
3. பெரியார் தோற்றுவித்த இயக்கம் ……………….
விடை : சுயமரியாதை இயக்கம்
4. பெரியார் நடத்திய தமிழ் இதழ்கள் ……………, …………….., …………….
விடை : விடுதலை, குடியரசு, உண்மை
5. மனித நேயத்தின் அழைப்பு மணி ……………………
விடை : தந்தை பெரியார்
6. நாட்டு விடுதலையை விட …………………… விடுதலைதான் முதன்மையானது என்று பெயரியார் கூறினார்
விடை : பெண்
7. ஆண்களும் ………….. பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்
விடை : குடும்பப்
8. ………………. என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்
விடை : மொழி
9. பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் குறிப்பிடும் நூல் …………….
விடை : திருக்குறள்
10. ……………. ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.
விடை : திருக்குறள்
குறு வினா
1. பெரியாரின் சிறப்பு பெயர்கள் யாவை?
- வெண்தாடி வேந்தர்
- சுயமரியாதைச் சுடர்
- பகுத்தறிவுப் பகலவன்
- வைக்கம் வீரர்
- ஈரோட்டுச் சிங்கம்
- தெற்காசியாவின் சாக்ரடீஸ்
- பெண்ணினப் போர்முரசு
- புத்துலகத் தொலைநோக்காளர்
2. எது மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்துகிறார் பெரியார்?
சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப்போவதில்லை. அதனால் சண்டைகளும், குழப்பங்களும் தான் மேலோங்கிறது.
அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார் பெரியார்.
3. பெரியாரின் தன் சிந்தனையால் புரட்சியை ஏற்படுத்திய துறைகள் எவை?
சமூகம், பண்பாடு, மொழி, கல்வி, பொருளாதாரம்
4. தந்தை பெரியார் எதிர்த்தவை எவை?
இந்தி திணிப்பு | குலக்கல்வித் திட்டம் |
தேவதாசி முறை | எள்ளுண்ணல் |
குழந்தைத் திருமணம் | மணக்கொடை |
5. பெரியார் தோற்றுவித்த இயக்கம் யாது? அதனை எப்போது தோற்றுவித்தார்?
சுய மரியாதை இயக்கம், 1925
6. பெரியார் எந்தெந்த இதழ்களை நடத்தினார்?
குடியரசு, உண்மை, விடுதலை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
7. பெரியார் எதனைக் கடுமையாக எதிர்த்தார்?
மனப்பாடம் மற்றும் மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேர்வு முறையை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
8. பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதியது எதனை? ஏன்?
- திருக்குறளை பெரியார் மதிப்பு மிக்க நூலாகக் கருதினார்.
- இந்நூலில் அறிவியலில் கருத்துகளும், தத்துவக் கருத்துகளும் அனைவருக்கும் பொதுவான முறையில் அமைந்திருப்பதே காரணம்.
9. ஈ.வெ.ராவுக்குப் பெரியார் பட்டம் எப்போது கொடுக்கப்பட்டது?
13.11.1938 சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராவுக்குக் “பெரியார்” பட்டம் கொடுக்கப்பட்டது
10. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் யார்?
யுனெஸ்கோ நிறுவனம் 1970-ஆம் ஆண்டு தந்தை பெரியாரைத் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டிப் பட்டம் வழங்கியது.
11. பெரியார் சீரமைத்த எழுத்துக்கள் யாவை?
“ஐ” என்பதை “அய்” எனவும், “ஒள” என்பதை “அவ்” எனவும் சீரமைத்தார். இவற்றுக்கான மாற்று வரிவடிவத்தையும் கொண்டு வந்தார்.
சிறு வினா
1. பெரியார் விதைத்த விதைகள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிடலாம்?
- கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- பெண்களுக்கு சொத்துரிமை
- குடும்ப நலத் திட்டம்
- கலப்புத் திருமணம்
- சீர்திருத்தத் திருமணச் சட்டம்
2. மதம் குறித்து பெரியார் எழுப்பிய பகுத்தறிவு வினாக்கள் யாவை?
- மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இன்று மதத்தின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
- மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்கா மனிதர்களா? மதம் என்பது மனிதர்கள் ஒற்றுமைபடுத்துவதற்காகவா? பிரித்தது வைப்பதற்காகவா? எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை வைக்கிறார்.