பாடம் 8.2 ஒளியின் அழைப்பு
Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 8.2 – “ஒளியின் அழைப்பு” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
சாெல்லும் பாெருளும்
- விண் – வானம்
- ரவி – கதிரவன்
- கமுகு – பாக்கு
இலக்கணக் குறிப்பு
- பிறவி இருள், ஒளியமுது, வாழ்க்கைப்போர் – உருவகம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. வேண்டி – வேண்டு + இ
- வேண்டு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி
2. போகிறது – போ + கிறு + அ +து
- போ – பகுதி
- கிறு – நிகழ்கால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
3. மலர்ச்சி – மலர் + ச் + சி
- மலர் – பகுதி
- ச் – இடைநிலை
- சி – தொழிற்பெயர் விகுதி
நூல் வெளி
- புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
- பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.
- புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
- ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
- ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்
- புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும்
- இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும்
- 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
- பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
பாடநூல் மதிப்பீட்டு வினா
பலவுள் தெரிக
முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது
- மகிழ்ச்சி
- வியப்பு
- துணிவு
- மருட்சி
விடை : துணிவு
குறு வினா
கமுகு மரம் எதனைத் தேடியது?
கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது
சிறு வினா
அது வாழ்க்கைப் போர் – எது?
- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்.
நெடு வினா
மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக
- கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
- கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
- கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
- அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்
- கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.
- பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.
- அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. “புதுக்கவிதையின் தந்தை” என்று போற்றப்படுபவர் ……………….
- வல்லிக்கண்ணன்
- ந,பிச்சமூர்த்தி
- பாரதிதாசன்
- பாரதியார்
விடை : ந,பிச்சமூர்த்தி
2. “பிக்ஷூ, ரேவதி” என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர் ……………….
- வல்லிக்கண்ணன்
- ந,பிச்சமூர்த்தி
- பாரதிதாசன்
- பாரதியார்
விடை : ந,பிச்சமூர்த்தி
3. “ஹனுமான், நவஇந்தியா” ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர் ……………….
- வல்லிக்கண்ணன்
- பாரதிதாசன்
- பாரதியார்
- ந,பிச்சமூர்த்தி
விடை : ந,பிச்சமூர்த்தி
4. பெருமரத்துடன் சிறு கழுகு போட்டியிருகின்றது – இதில் அமைந்துள்ள நயம்
- எதுகை
- மோனை
- முரண்
- இயைபு
விடை : முரண்
5. பெருமரத்துடன் சிறு கழுகு போட்டியிருகின்றது – இதில் “கமுகு” என்பது
- பாக்கு மரம்
- ஆல மரம்
- புளிய மரம்
- பலா மரம்
விடை : பாக்கு மரம்
6. கழுகு மரம் போட்டியிட காரணம்
- பெருமரத்தின் நிழல்
- வாழ்க்கைப்போர்
- கதிரவன் ஒளி
- நம்பிக்கை
விடை : கதிரவன் ஒளி
7. முண்டி மோதும் துணிவே …………….
- வாழ்க்கைப்போர்
- நம்பிக்கை
- துணை
- இன்பம்
விடை : இன்பம்
8. தன்முனைப்புடன் கூடிய போட்டியில் வென்றது ……………..
- ஆல மரம்
- புளிய மரம்
- பாக்கு மரம்
- பலா மரம்
விடை : பாக்கு மரம்
பொருத்துக
1. துளைத்து | அ. கதிரவன் உயிர்ப்பு |
2. தேடியது | ஆ. பெருமரத்தின் நிழல் |
3. வெறுத்து | இ. வாழ்க்கைப்போர் |
4. பெருமரத்துடன் போட்டி | ஈ. பெருமரத்தின் நிழல் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
பொருத்துக
1. விண் | அ. கதிரவன் |
2. ரவி | ஆ. வானம் |
3. கமுகு | இ. முட்டி |
4. முண்டி | ஈ. பாக்கு |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. …………………. தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
விடை : கமுகு மரம்
2. கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் ………………….. உயிர்ப்பைத் தேடியது.
விடை : கதிரவன் உயிர்ப்பைத்
3. கமுகு மரம் ………………….. நிழலை வெறுத்து, உச்சிக் கிளையை மேலே உயர்த்தியது.
விடை : பெருமரத்தின்
4. அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டிபோடக் காரணம் ஆகும். இதுவே ……………. போர்
விடை : வாழக்கைப்
5. கமுகு மரம் பெருமரத்தின் முட்டி மோதி …………., …………., ……………. கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராடி வென்றது.
விடை : துணிச்சல், முயற்சி, நம்பிக்கை
6. பெருமரத்தை விஞ்சி …………. நடைபோடுகிறது.
விடை : வளர்ச்சி
குறு வினா
1. கமுகு மரம் எதனைத் துளைத்து நின்றது?
கமுகு மரம் தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
2. கமுகு மரம் எதனை வெறுத்து, எதனை உயர்த்தி நின்றது?
கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சிக் கிளையை மேலே உயர்த்தி நின்றது.
3. கமுகு மரம் பெருமரத்துடன் போட்டிபோடக் காரணம் யாது?
அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டிபோடக் காரணம் ஆகும்.
4. கமுகு மரம் வென்றதற்குக் காரணம் யாது?
துணிச்சல், முயற்சி, நம்பிக்கை
5. புதுக்கவிதைகள் என்றால் என்ன?
புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
6. ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளின் தந்தையென போற்றப்பட காரணம் யாது?
பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.
7. ந.பிச்சமூர்த்தி எந்த இதழ்களின் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
ந.பிச்சமூர்த்தி ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசியராக பணியாற்றி உள்ளார்.
8. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கூறும் செய்தி யாது?
இயற்கையும், வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூரத்தியின் கவிதைகள் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.
சிறு வினா
ந.பிச்சமூர்த்தி சிறு குறிப்பு வரைக
- புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டவர்.
- வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
- ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர்
- புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும்
- இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும்
- 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
- பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.