Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 8.3 – தாவோ தே ஜிங்

பாடம் 8.3 தாவோ தே ஜிங்

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 8.3 – “தாவோ தே ஜிங்” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

இலக்கணக் குறிப்பு

  • பாண்டம் பாண்டமாக – அடுக்குத் தொடர்
  • வாயிலும் சன்னலும் – எண்ணும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

இணைகின்றன – இணை + கின்று + அன் + அ

  • இணை – பகுதி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

பகுபத உறுப்பிலக்கணம்

  • லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  • கன்பூசியஸ் இவரது சம காலத்தவர். அக்காலம், சீன சிந்தனையின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
  • லாவேட்சு “தாவோவியம்” என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  • ஒழுக்கத்தை மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
  • லாவோட்சுவாே இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.
  • தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.
  • பாடப்பகுதியிலுள்ள கவிதையை மொழிபெயர்த்தவர் சி.மணி

பாடநூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

விடைக்கேற்ற வினாவைத் தேர்க

விடை – பானையின் வெற்றிடமே நமக்கு பயன்படுகிறது

  1. பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?
  2. பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
  3. பானை எதனால் பயன்படுகிறது
  4. பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது

விடை : பானையின் எப்பகுதி  நமக்குப் பயன்படுகிறது?

குறு வினா

தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று எதைக் குறிப்பிடுகிறார்?

தாவோ நே ஜிங் “இன்னொரு பக்கம்” என்று இருத்தலின்மையைப் பயன்படுத்திக் கொள்வதை (வெற்றிடமே பயன்படுகிறது) குறிப்பிடுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. லாவோர்ட்சு இயற்றிய நூல் எது?

  1. வெற்றிடம்
  2. தாவோவியம்
  3. தாவோ தே ஜிங்
  4. இருத்தலின்னமை

விடை : தாவோ தே ஜிங்

2. லாவோர்ட்சு …………… மொழிக்கவிஞர்

  1. தமிழ்
  2. ஜப்பான்
  3. அரபி
  4. சீனம்

விடை : சீனம்

3. பாண்டம் என்று லாவோட்சு குறிப்பிடுவது

  1. பானை
  2. வீடு
  3. சுவர்
  4. பொருள்

விடை : பானை

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. …………………….. பல ஆரங்களைக் கொண்டது. வெற்றிடத்தை நடுவே வைத்து சுழல்கிறது

விடை : சக்கரம்

2. அழகிய ……………. ஆனாலும் வெற்றிடமே பயன்படுகிறது.

விடை : பானையே

3. …………., ………………. கூட வெற்றிடமே. அதுவே நமக்கு பயன்படுகிறது.

விடை : சன்னலும், கதவும்

4. சுவர்களுக்கு இடையே உள்ள ……………………. அறையாக பயன்படுகிறது.

விடை : வெற்றிடமே

5. ……………………. உண்மையானாலும் வெற்றிடமே பயன்படுகிறது.

விடை : உருப்பொருள்

குறு வினா

1. லாவோர்ட்சு – குறிப்பு வரைக

  • லாவோர்ட்சு சீனாவில் பொ.ஆ.மு 2-ம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்
  • கன்பூசியஸ் இவரது சம காலத்தவர்
  • தாவோவியம் என்ற சிந்தனைப் பிரிவை சார்ந்தவர்.
  • தாவோவியம் வலியுறுத்தும்  இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தார்.

2. வெற்றிடம் பயன்டும் பொருட்கள் என தாவோ ஜிங் கூறும் பொருட்கள் யாவை?

சக்கரம், சன்னல், பானை, சுவர்

3. தாவோவியம் எதைக் கூறுகின்றார்?

வாழ்க்கையை வாழ்வதன் மூலம் தான் யார் என்பதை அறிந்து கொள்ளுதல், வாழ்க்கையின் போக்கோடு செல்லுதல் ஆகிய அடிப்படைகளைத் தாவோவியம் கூறுகின்றது.

சிறு வினா

வெற்றிடமே பயன்படுகிறது என்பதை தாவோ தே ஜிங் எவ்வாறு விளக்கிறது?

  • சக்கரம் பல ஆரங்களை கொண்டது. வெற்றிடத்தை நடுவே வைத்து சுழல்கிறது.
  • அழகிய பானையே ஆனாலும் வெற்றிடமே பயன்படுகிறது.
  • சன்னலும், கதவும் கூட வெற்றிடமே. அதுவே நமக்கும் பயன்பாடு.
  • சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடமே அறையாக பயன்படுகின்றது.
  • உருப்பொருள் உண்மையாலும் வெற்றிடமே பயனாகின்றது.
  • வெற்றிடம் பயன்படுகின்ற போது நாம் வெற்றி பெறத் தடையில்லை.

என்று தாவோ தே ஜிங் விளக்குகின்றார்.

 

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment