Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 9.2 – அக்கறை

பாடம் 9.2 அக்கறை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 9.2 –  “அக்கறை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

இலக்கணக் குறிப்பு

  • உருண்டது. போனது – ஒன்றன் பால் வினைமுற்று
  • சரிந்தது – வினையெச்சம்
  • அனவரும் – முற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

சரிந்து – சரி + த்(ந்) + த் + உ

  • சரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால் இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

நூல் வெளி

  • கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள்.
  • இவை தவிர “அகமும் புறமும்” என்ற இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு வெளிவந்திருக்கிறது.
  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
  • கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும்
  • ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்?

  1. ஒரு சிறு இசை
  2. முன்பின்
  3. அந்நியமற்ற நதி
  4. உயரப் பறத்தல்

விடை : ஒரு சிறு இசை

சிறு வினா

1. பழங்களை விடவும் நசுங்கிப் பாேனது – இடம் சுட்டிப் பாெருள் விளக்குக தருக.

கல்யான்ஜியின் “அக்கறை” என்னும் கவிதைத் தலைப்பில் இவ்வரிகள் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்

மிதி வண்டியில் இருந்து விழந்த தக்காளிகள் சாலையில் விழந்து நசுங்கின. அங்குப் போவோர் வருவோர் தலைக்கு மேல் வேலை இருப்பதாய் செல்வதைப் பார்க்கையில் பழங்களை விடவும் நசுங்கிப் போனது எது மற்ற மனிதர்கள் மீது அக்கைற இல்லாததால் தான் என்கிறார் கல்யாண்ஜி

2. மணல் விளையாட்டு என்னும் தலைப்பில் சிறு கவிதை படைக்க.

மண்ணில் பிறந்தோம்
மண்ணில் தவழ்ந்தோம்
மண்ணில் நடந்தோம்
அதானல் தானோ என்னவோ
விளையாட்டையும் கூட மண்ணில் தொடங்கினோம்
மதங்களை மறந்து
மனிதநேயத்தோடு
இறை இல்லங்களை கட்டினோம்
சாதிப்புயல் அதை சூறையாடிவிட்டது

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கல்யாண்ஜியன் இயற்பெயர் …………….

விடை : கல்யாணசுந்தரம்.

2. சைக்கிளில் வந்த …………….. கூடை சரிந்தது.

விடை : தக்காளி

3. ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக ………………. பரிசினை பெற்றார்.

விடை : சாகித்திய அகாதெமி

4. கல்யாண்ஜி ………………. -ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

விடை : 2016

பொருத்துக

1. புலரி, முன்பின், ஆதிஅ. கட்டுரை நூல்
2. அகமும் புறமும்ஆ. கவிதை நூல்
3. சில இறகுகள் சில பூக்கள்இ. சிறுகதை நூல்
4. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்ஈ. கடிதங்கள் தொகுப்பு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. கல்யாண்ஜி தொடர்ந்து எழுதுபவை எவை?

  • சிறுகதை
  • கவிதை
  • கட்டுரை
  • நாவல்

2. கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் எவை?

  • புலரி
  • முன்பின்
  • ஆதி
  • அந்நியமற்ற நதி
  • மணல் உள்ள ஆறு

3. கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு எது?

கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.

4. கல்யாண்ஜி எழுதிய சிறு கதை தொகுப்பு எது?

  • கலைக்க முடியாத ஒப்பனை
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • உயரப் பறத்தல்
  • ஒளியிலே தெரிவது

5. எந்த சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?

ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.

6. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?

கல்யாண்ஜிக்கு 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது.

7. கல்யாண்ஜி குறிப்பு வரைக

  • கல்யாண்ஜியன் இயற்பெயர் கல்யாணசுந்தரம்.
  • சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனத் தொடர்ந்து எழுதி வருபவர்.
  • வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்பு செய்து வருகிறார்.
  • புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகியன இவரின் கவிதை படைப்புகள்.
  • இவர் எழுதிய கட்டுரை தொகுப்பு “அகமும் புறமும்” என்பதாகும்.
  • பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.
  • கலைக்க முடியாத ஒப்பனை. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது போன்றவை இவர் எழுதிய சிறுகதை தொகுப்பு ஆகும்
  • ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2016-ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசினை பெற்றார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment