Class 9th Tamil Book Solution for CBSE | Lesson 9.3 – குறுந்தொகை

பாடம் 9.3 குறுந்தொகை

Hello, Parents and Students.,

Here we have provided the CBSE Solutions Class 9 Tamil Chapter 9.3 –  ” குறுந்தொகை” to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.

Class 8 Tamil Text Books – Download

சொல்லும் பொருளும்

  • நசை – விருப்பம்
  • நல்கல் – வழங்குதல்
  • பிடி – பெண்யானை
  • வேழம் – ஆண்யானை
  • யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
  • பொளிக்கும் – உரிக்கும்
  • ஆறு – வழி

இலக்கணக் குறிப்பு

  • களைஇய – சொல்லிசை  அளபெடை
  • பெருங்கை, மென்சினை – பண்புத்தொகைகள்
  • பொளிக்கும் – செய்யும் என்னும் வினைமுற்று
  • பிடிபசி – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • அன்பின – பலவின் பால் அஃறிணை வினைமுற்று
  • நல்கலும் நல்குவர் – எச்ச உம்மை

பகுபத உறுப்பிலக்கணம்

1. உடையார் – உடை + ய் + ஆர்

  • உடை – பகுதி
  • ய் – சந்தி (உடம்படு மெய்)
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

2. பொளிக்கும் = பொளி + க் + க் + உம்

  • பொளி – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – வினைமுற்று விகுதி

நூல் வெளி

  • எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
  • தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை.
  • 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.
  • நமக்கு பாடமாக வந்துள்ளது 37வது பாடல் ஆகும்
  • இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்
  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

யா மரம் எந்த நிலத்தில் வளரும்?

  1. குறிஞ்சி
  2. மருதல்
  3. பாலை
  4. நெய்தல்

விடை : பாலை

குறு வினா

1. பிடி பசி, களைஇய, பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கண குறிப்புகளை கண்டறிக.

  • பிடிபசி – ஆறாம் வேற்றுமை தொகை
  • களைஇய – சொல்லிசையளபெடை
  • பெருங்கை – பண்புத்தொகை

2. குறுந்தொகை என பெயர் வரக் காரணம் யாது.

குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. 4 அடி முதல் 8 அடி வரை உள்ள செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகை என்று பெயர் வைத்தனர்

சிறு வினா

“யா” மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.

பெண் யானையின் பசியை போக்க ஆண் யானை “யா” மரத்தின் பட்டையை உரித்துத் தன் அன்பை வெளிப்படுத்தும்

விளக்கம்:-

மேற்கண்ட காட்சியைக் கண்ணுற்ற தலைவனுக்கு உன் நினைவு வரும். எனவே அவன் உன்னிடம் விரைந்து வருவான்.

கூடுதல் வினாக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ……………. ஓர் அகநூலாகும்

விடை : குறுந்தொகை

2. குறுந்தொகை ……………. நூல்களுள் ஒன்று

விடை : எட்டுத்தொகை

3. குறுந்தொகை …………. பாடல்களை காெண்டது.

விடை : 401

4. குறுந்தொகை பாடல்கள் …………………., …………………… கொண்டவை.

விடை : நான்கடிச் சிற்றெல்லையும், எட்டடிப் பேரெல்லையும்

5. பெருங்கடுங்கா ……………… மரபைச் சேரந்தவர்

விடை : சேர

6. குறுந்தொகை ………………….. என அழைக்கப்படுகிறது

விடை : நல்குறுந்தொகை

7. மெல்லிய கிளைகளை உடையது ……………

விடை : யா மரம்

8. தலைவன் பிரிந்து செல்லக் காரணம் …………….

விடை : பொருள் ஈட்டுதல்

9. பெரிய கைகளை உடையது ……………..

விடை : ஆண் யானை

10. குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் ………………

விடை : செளரிப்பெருமாள் அரங்கனார்

சிறு வினா

1. தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது எவை?

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனிதம் பேசிய சங்கக் கால கவிதைகள் தமிழ் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்கிறது.

2. குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் எதைக் காட்டுகின்றன?

குறுந்தொகை பாடல்கள் இயற்கை காட்சிகள் மூலம் அன்பின் வளத்தை படம் பிடித்த காட்டுகின்றன

3. இறைச்சி என்றால் என்ன? அது எப்படி அமையும்?

கூறுவோரின் விருப்பத்தை நேர உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்துவது இறைச்சி ஆகும்.

  • இறைச்சி பாடலில் உள்ள கருப்பொருளில் அமையும்.
  • இறைச்சி பெரும்பாலும் விலங்கு, பறவை போன்ற உயிரினங்களில் அமையும்.

4. பெருங்கடுங்கோ குறிப்பு வரைக

  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்
  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப் பெற்றார்.

5. பிடி, வேழம் என்பன எதைக் குறிக்கும்?

  • பிடி – பெண் யானை
  • வேழம் – ஆண் யானை

6. குறுந்தொகை – குறிப்பு வரைக

  • எட்டுதொகை நூல்களுள் ஒன்று.
  • தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களை கொண்டது.
  • இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டிப் பேரெல்லையும் கொண்டவை.
  • 1915-ம் ஆண்டு செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

 

பயனுள்ள பக்கங்கள்

Leave a Comment