Hello, Parents and Students.,
Here we have provided the CBSE Solutions Class 3 Tamil Chapter 16 – நூலகம் to prepare for exams. The solutions are accurate and as per the CBSE syllabus.
அறிந்துகொள்வோம்
|
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள் _______
- புத்தகம்
- கட்டகம்
- ஒட்டகம்
- கோல்
விடை : புத்தகம்
2. நூலகம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- நூல் + அகம்
- நூல + அகம்
- நூ + அகம்
- நூல + கம்
விடை : நூல் + அகம்
3. புத்தகச்சாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- புத்தக + சாலை
- புத்தகச் + சாலை
- புத்த + சாலை
- புத்தகம் + சாலை
விடை : புத்தகம் + சாலை
4. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல் _______
- உள்ளே
- தனியே
- புறம்
- சிறப்பு
விடை : புறம்
5. நாள் + இதழ்கள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- நாள்இதழ்கள்
- நாளிதழ்கள்
- நாளீதழ்கள்
- நாளிதழ்கல்
விடை : நாளிதழ்கள்
வினாக்களுக்கு விடையளிப்பேன்
1. நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
வாசகசாலை, படிப்பகம், சுவடிச்சாலை,நூல் நிலையம், புத்தகச் சாலை, சுவடியகம்
2. நூலகத்தின் பயன்கள் யாவை?
- நம் அறிவு வளர்கிறது.
- நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
- வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
- மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
- தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
3. நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
- குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
- நூலகத்தில் உள்ள ” வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
- போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும். அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக
நான் எங்கள் ஊரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றேன். அம்புலிமாமா, யானைச்சவாரி, சிறுவர்மலர், தங்கமலர் நூல்களை படித்தேன். சிறுவர் மலர், தங்க மலலர் பழைய புத்தகங்களில் நூலகரினம் கேட்டு வண்ணமிட்டு மகிழ்ந்தேன். மிகவும் அமைதியாக படிக்கச் சொன்னார்கள். தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன், கதைகளைப் படித்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. என் நண்பர்களுக்கு கதைகள் கூறினேன்.
எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக
1. டி ப
விடை : படி
2. ள் ப ளி
விடை : பள்ளி
3. நூ க ம் ல
விடை : நூலகம்
4. த் க பு த ம்
விடை : புத்தகம்
5. ள் ழ ந் கு தை க
விடை : குழந்தைகள்
சொல்லுக்குள் சொல் கண்டுபிடித்து எழுதுவோம்
வரிக்குதிரை | வரி, குதிரை, குதி, திரை, வரை |
திருநெல்வேலி | நெல், வேலி, திரு, வேல், நெல்லி, தில்லி |
கடிகாரம் | கடி, காரம், காகம், பாரம், கரம் |
பனிப்புயல் | பனி, புயல், புல், பனிப்பு, பல் |
பாய்மரக்கப்பல் | பாய், மரம், கப்பல், பால், கல், பல் |
அறிந்து கொள்வோம்
முற்றுப்புள்ளி (.) | தொடரின் முடிவில் இடவேண்டும். |
காற்புள்ளி (,) | ஒரே தொடரில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கூறும்போது இடவேண்டும். |
வினாக்குறி (?) | வினாத்தொடரின் முடிவில் இடவேண்டும். (எது, எங்கே, எத்தனை, எப்படி, என்ன, யார் போன்ற வினாச்சொற்களை அறிமுகம் செய்யுங்கள்) |
உணர்ச்சிக்குறி (!) | வியப்பு,மகிழ்ச்சி,சினம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடரில் இடவேண்டும். |
படித்து உரிய நிறுத்தற்குறிகளை நிரப்புவோம்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தெரிவு செய்வேன்
1. தனியாக இச்சொல்லின் எதிர்ச்சொல் _______
- ஒருவராக
- துணையாக
- தனிநிலையாக
- கூட்டாக
விடை : கூட்டாக
2. சிறப்பம்சம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- சிறப் + பம்சம்
- சிறப்பு + அம்சம்
- சிறப்பு + பம்சம்
- சிறப்பு + வம்சம்
விடை : சிறப்பு + அம்சம்
3. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள் _______
- அறிவில் சிறந்தவர்
- கவிதை எழுதுபவர்
- பாடல் பாடுபவர்
- மருத்துவம் பார்ப்பவர்
விடை : அறிவில் சிறந்தவர்
4. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- தேன் + அருவி
- தே + னருவி
- தே + அருவி
- தேனி + அருவி
விடை : தேன் + அருவி
5. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- புதுமை + உணர்ச்சி
- புத்து + உணர்ச்சி
- புதிய + உணர்ச்சி
- புது + உணர்ச்சி
விடை : புதுமை + உணர்ச்சி
6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- தேன்இருக்கும்
- தேனிருக்கும்
- தேனிறுக்கும்
- தேனிஇருக்கும்
விடை : தேனிருக்கும்
படித்து வினாக்களுக்கு விடையளிப்பேன்
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதியின் வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும். எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சற்றுச் சிந்தித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
பூமலர் தன் தோழியான மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்
2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.
3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
வள்ளுவர், வள்ளலார், புத்தர்
4. இவ்வுரைப்பகுதியிலிருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.
பொருத்தமான சொல்லால் நிரப்புவேன்
செயல் திட்டம்
அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான சிறுவர் இதழ்களைப் படித்து அதில் உனக்குப் பிடித்த இ்தழ்களின் பெயர்களை எழுதி வருக.
சுட்டிவிகடன், தங்கமலர், சிறுவர்மலர், சிறுவர்மணி